Tuesday, 29 January 2013


நான்கு வழிகளில் முக்தி..... .. மனிதப்பிறவி என்பது மிகவும் துர்லபம்.ஏன் எனில் வேறு எந்த பிறவியிலும் கிடைக்காத மோக்ஷத்தை இந்தப் பிறவியில் நாம் அடையமுடியும்.அதனால் தான் பல மஹான்கள் இந்த மனிதப்பிறவியை உயர்வாகக் கூறியுள்ளனர்.அப்படிப்பட்ட மனிதப்பிறவியில் நாம் முக்தி பெற மிக எளிமையாக நான்கு வழிகளை மஹான்கள் கூறியுள்ளனர்.அவை 1. மண்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகிய பஞ்சபூத க்ஷேத்ரங்களில் ஆகாய க்ஷேத்ரமாக விளங்குவது தமிழகத்திலுள்ள சிதம்பரம் என்னும் கனக சபாபதி க்ஷேத்ரம். இந்த சிதம்பரத்தில் ஆனித்திருமஞ்சனம்,மார்கழி திருவாதிரை போன்ற நாட்களில் நடைபெறும் நடராஜ மூர்த்தியின் ஆனந்த தாண்டவத்தை பக்தியோடு மனம் குளிர தரிசனம் செய்து, எனக்கு ஞான வைராக்யத்தையும் மறுபிறவி இல்லாத மோக்ஷ சாம்ராஜ்யத்தையும் தந்து அருள்புரிய வேண்டும் என்று ஸ்ரீநடராஜ மூர்த்தியிடம் பிரார்தித்துக்கொண்டாலே மறுபிறவி இல்லாத முக்தி கிடைத்துவிடும்.இது ஒரு வழி. 2. கமலாலயம் என்னும் ஸ்ரீதியாகராஜரின் அருட்கடாக்ஷத்தில் ப்ரகாசிக்கும் தமிழகத்திலுள்ள திருவாரூர் என்னும் க்ஷேத்திரத்தில் நல்ல உயர்ந்த தாய் தந்தையர்களுக்கு பிள்ளையாகப் பிறவியெடுத்தல்.திருவாரூரில் பிறக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் அங்குள்ள ஸ்ரீதியாகராஜர் முக்தியை தந்து விடுகிறார் என்பதால் திருவாரூரில் பிறந்த அனைவருக்கும் முக்தி கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.இது ஒரு வழி. 3.என்பதாக பூமியிலிருந்து சில அடி தூரம் மேலெழுந்து பூமிக்கு சம்பந்தமில்லாமல் எங்கும் சிவலிங்கமாகக்காட்சிதருவதும்,ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பாதங்களில் தோன்றி சிவனின் தலையிலிருந்து பகீரதனால் பூமிக்குக் கொண்டுவரப்பட்ட புண்ணியம்மிக்க கங்கா நதி ப்ரவஹித்து ஓடுவதும், கைலாசவாசியான சிவன் தனது கணங்களுடன் ஸ்ரீவிச்வநாதராக அன்னபூரணி மாதாவுடன் எழுந்தருளியிருக்கும் க்ஷேத்திரமுமான உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள அவிமுக்த க்ஷேத்திரமாகிய வாராணசி என்னும் காசி நகரத்தில் இறத்தல். இந்த காசி க்ஷேத்திரத்தில் உடலைவிடும் அனைத்து ஜீவன்களுக்கும் தாரக ப்ரம்மமாகிய ஸ்ரீசீதாராமச்சந்திரமூர்த்தியே நேரிடையாக வலது காதில் ஸ்ரீராம நாமாவை சொல்லி மறுபிறவி இல்லாமல் செய்து,முக்தியை வாரி வழங்குகிறார் என்கிறது சாஸ்திரம்.ஆகவே காசியில் இறந்தால் முக்தி. 4.ஒருவர் இறக்கும் சமயத்தில் அவனது மகன்,இறப்பவரின் அருகில் இருந்து,தேவையான பணிவிடைகளைச் செய்து இறுதி காலத்தில் பெற்றோருக்கு வாயில் பால் விட்டு அவரை தன் வலது துடையில் மடிமீது வைத்துக்கொண்டு,அவரது வலது காதில் கர்ண மந்திரங்களையும்,பகவான் நாமாவையும் கூறி அவரை நல்ல நினைவுடன் இறக்கும்படி செய்வாராகில் இறப்பவர் நிச்சயம் முக்தியை அடைவார் என்கிறது நமது சாஸ்திரம். இந்த நான்கு வழிகளில் எது சிறந்தது? முக்தி அடைய கூறப்பட்ட மேற்கூறிய நான்கு விதமான வழிகளில் மிகச்சுலபமான வழி,இறக்கும் நேரத்தில் மகன் அருகில் இருப்பது என்பதுதான். ஆகவே வயது முதிர்ந்த பெரியவர்கள் தன்னுடைய இறுதி காலம் நெருங்கும் நேரத்தில்,எப்பாடுபட்டாவது தனது பிள்ளைகளுடனேயே இருக்கவேண்டும்

Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog