Wednesday, 30 January 2013


அது அது அதனதன் செயலைச் செய்யுமாறு அமைக்கப்பட்டிருப்பது கடவுளின் செயலாலேயே. ஜடப்பொருள்கள் கூட அவற்றிற்குரிய செயலைச் செய்வது அவரால் தான். சித்தப் பொருளாகிய உயிர்களும் அவற்றிற்குரிய செயலைச் செய்வது அவராலே. எல்லாம் அவர் செயல். எந்த மனிதனும் தான் நல்ல நிலையில் இருக்க வேண்டுமென்று கருதுகிறான். அதற்கென்று சில தொழில்களைச் செய்கிறான். ஆயினும் அத்தொழில்களின் பயனெல்லாம் ஒரே தன்மையையுடையனவாய் இருப்பதில்லை. எல்லாருடைய நோக்கமும் தொழிலும் ஒன்றாயிருக்க, ஏன் அதன் பயன் வேறுபடுகிறது? அங்கு கடவுள் தம் செயல் என்ற அறிவை அளிக்கிறார். அவர் செயலன்றி இவன் செயலென்பது உண்மையாயின், எல்லாரும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். நிலைமையில் வேறுபாடு காணப்பட நியாயம் இல்லை. எவர்தான் முன்னுக்கு வருவதில் ஆசையில்லாதவர்? பிறர் விஷயத்தில் அவர்களுடைய நோக்கங்கள் எப்படியிருந்தாலும், தம் விஷயத்தில் அவர் செயலன்றி இவன் செயலென்பது உண்மையாயின், எல்லாரும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். நிலைமையில் வேறுபாடு காணப்பட நியாயம் இல்லை. ஆகவே, ஒரே நோக்கமுடைய ஜீவர்களுடைய நிலையில் வேறுபாடு காணப்படுவதால், எல்லாம் கடவுள் செயல் என்றே கொள்ள வேண்டும். எல்லா ஜீவர்களுடைய நோக்கமும் ஒன்றுதான்; ஆயினும், அவரவர் முயற்சி வேறுபாட்டைப் பொறுத்து நிலைமை அமைகிறது. முயற்சி என்பது அந்தந்த ஜீவர்களின் உள்ளத்தில் தோன்றும் கற்பனை தான். கற்பனைக்கு மூலமாகிய நோக்கம் ஒன்று தான் என்றாலும், முயற்சியாகிய கற்பனை வேறுபடுவதற்கான காரணம் என்ன? அதுதான் கடவுள் செயல். ஆகையால் எல்லாமே கடவுளின் செயல் தான்.

Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog