Thursday 27 June 2013

ஏகலவ்யன், துரோணர், அர்ஜூனன் - ஆதிபர்வம் பகுதி 134


(சம்பவ பர்வ தொடர்ச்சி)

வைசம்பாயணர் சொன்னார், "இப்படி பீஷ்மரால் கொண்டாடப்பட்ட மனிதர்களில் முதன்மையான பெரும் சக்தியைக் கொண்ட துரோணர், குரு குலத்தவரின் வசிப்பிடத்திலேயே தங்கி, அங்கேயே புகழுடன் வாழ ஆரம்பித்தார். அவர் சிறிது காலத்திற்கு ஓய்வெடுத்த பின், பீஷ்மர் தனது பேரப்பிள்ளைகளான கௌரவர்களை அழைத்து, அவருக்கு சீடர்களாகக் கொடுத்தார். துரோணருக்கு பல மதிப்புமிக்க பொருட்களையும் பரிசாகக் கொடுத்தார் பீஷ்மர். அந்தப் பெரும்பலசாலி (பீஷ்மர்) பரத்வாஜரின் மகனுக்கு {துரோணருக்கு} நெல்லும், பலவித செல்வங்களும் நிறைந்த அழகான சுத்தமான வீடு ஒன்றையும் கொடுத்தார். அதன்பின், வில்லாளிகளில் சிறந்த துரோணர் மகிழ்ச்சியுடன் கௌரவர்களைத் (பாண்டு மற்றும் திருதராஷ்டிரனின் மைந்தர்களை) தனது சீடர்களாக ஏற்றுக் கொண்டார். அப்படி அவர்கள் அனைவரையும் சீடர்களாக ஏற்றுக் கொண்ட துரோணர், ஒரு நாள் அவர்களைக் (பாண்டவ மற்றும் கௌரவர்களைக்) கூப்பிட்டு, தனது காலில் விழுந்து வணங்க வைத்து, கனத்த இதயத்துடன், "நான் எனது இதயத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்தை வைத்திருக்கிறேன்.


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog