Saturday 26 May 2012

தமிழ்வலையுலகில் இன்றுள்ள திரட்டிகள்


வணக்கம் வலைஉறவுகளே!


ஆங்கில இணையத்தளங்கள்,வலைத்தளங்கள் ஆகியவற்றில் வாசகர் வரவு ஒரு சீரான வளர்ச்சியில் எப்போதும் இருக்கும். ஆனால் தமிழ்மொழி சார்ந்த இணையத்தளங்கள்,வலைத்தளங்கள் ஆகியவற்றில் அடிக்கடி வாசகர்வரவு ஏறுமுகமாகவும் இறங்குமுகமாகவும் மாறிக்கொண்டே இருக்கும்.


இதற்கு காரணமென்ன? நல்லபதிவுகள் தொடர்ச்சியாக வெளிவருவதில்லையா? என்று பார்த்தால் நல்லபடைப்புக்கள் தினமும் தமிழில் வெளிவருகின்றன. ஆனால் அவற்றை வாசகர்களிடம் கொண்டுசேர்ப்பதில் தாமதம் அல்லது அக்கறை இன்மை நம்மிடையே மிகுந்து காணப்படுவதே அதற்கு காரணம்.

நாம் எழுதிவிட்டால் போதும் அந்தபதிவு பிரபலமாகிவிடும் என்று நினைப்பவர்களே பதிவர்களில் அதிகம் இருக்கின்றனர்.

நமது வீட்டில் விளைந்த மரக்கறியை சந்தைக்கு எடுத்துச்சென்றால்தானே அதிக விலைக்கு கொடுக்கலாம் என நாம் யோசிப்பதில்லையா? அல்லது யோசித்து அதற்கான வழியை நாடினால் சுண்டைக்காய் முப்பது பைசா அதன் சுமை கூலி முப்பது ரூபா என்ற வகையில் தமிழிலுள்ள திரட்டிகள் பதிவர்களின் நேரத்தையும் பணத்தையும் கறந்து பதிவர்களை வெறுப்பேத்துகின்றனவா என்று பார்த்தால் இரண்டாவதே தமிழ் பதிவுலகில் அதிகம் நடக்கின்றது.

நாம் பதிவெழுத படும் சிரமத்திற்கு சற்றும் குறையாத நேரவிரயத்தையும் சிரமத்தையும் பதிவுகளை திரட்டிகளில் இணைக்கும்போது அனுபவிக்கவேண்டியுள்ளது என்பதே உண்மை.

இதற்குரிய காரணங்களில் சிலவற்றை தற்போது பார்ப்போம்
  • திரட்டிகளில் பதிவை இணைக்கவேண்டுமானால் அவற்றில் முதலில் நமக்கென ஒரு பயனர்கணக்கை தொடங்கவேண்டியிருத்தல்
  • பதிவுகளை இணைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பயனர்கணக்கில் நுழைதல்
  • எமது வலைத்தள கோடிங்கை அவர்களுக்கு வழங்குதல்
  • எமது பதிவை இணைக்கமுன்பு மற்றவர்களின் மூன்று பதிவுக்காவது வாக்களிக்குமாறு கட்டாயப்படுத்தல்
  • தமது லோகோவை எமது தளத்தில் இணைக்குமாறு வற்புறுத்தல்
  • வேர்ட் வேறிபிகேசன் வைத்து எம்மை றோபோவா அல்லது மனிதர்களாவென அநியாயத்துக்கு நமது பிறப்பையே கேள்விக்குள்ளாக்கல்
  • ஒவ்வொரு பதிவையும் இணைக்குமுன் குறித்தளவு நேரம் காத்திருக்கவைத்து நேரத்தை வீணடித்தல்
  • சமூக தளங்களில் நாம் இணைக்கும்பதிவுகளை இணைக்காமை
  • எல்லாவற்றுக்கும் மேலாக பதிவுகளை இணைக்க பணம்பிடுங்குதல்
  • கள்ளவாக்களிப்பை ஊக்குவித்து தரமான பதிவுகளை பின்னுக்கு தள்ளல்
  • பதிவுகளை வாசித்தவர்கள் தமக்கு குறித்த பதிவு பிடித்துவிட்டால் அந்த பதிவை தான்விரும்பும் திரட்டியில் இணைக்க வாய்ப்பளிக்காமை
 இவ்வளவு சிக்கல்களை கொண்டு தமிழ் திரட்டிகள் செயற்படும்போது எந்த பதிவருக்காவது தனது பதிவை திரட்டியில் தொடர்ந்து இணைக்க மனசுவருமா? (இது தமிழில் உள்ள திரட்டிகளுக்கு சமர்ப்பணம்)

சரி இனி தமிழிலுள்ள திரட்டிகளை தற்போது பார்ப்போம்.

    திரட்டிகளிலே நம் பதிவை அதிகபேரிடம் தெரிவிப்பதில் இது தான் முதலிடம். அதாவது. திரட்டிகள் மூலம் நம் பிளாக்கிற்கு வருகை புரிவர்களில் இந்த திரட்டி தான் முதலிடம். மிக சிறப்பாக செயல்படுகிறது...நம் பதிவுகளை பல்வேறு வகைகளாக பிரித்து வழங்குகிறது. இங்கு தாங்கள் பதிவை பகிர உறுபினர் ஆக வேண்டும்.
GO TO:Tamil10

02.Indli
     இரண்டாம் இடம் Indliக்கு தான் ஏன் இதற்கு முதலிடம் கூட தரலாம். மேலே தமிழ்10 கூறி அதே சிறப்பு அம்சங்களை நிறைந்ததாகவே உள்ளது. மேலும் சிறப்பாக தற்போது வலைபூக்கள்கென தனி பகுதியாக வழங்குகின்றது.. மேலும் தமிழ்10னுடன் ஒப்பிடும் போது தங்கள் பதிவை பிரபலமாக்கி முகப்பில் இடம்பெற செய்வதில் Indli சிறப்பு. வாக்குகள் அதிகம் பெறுவது INDLI தான் முதலிடம். இதிலும் தாங்கள் உறுபினர் ஆக வேண்டும்.
GO TO:Ta.Indli

     மூன்றாம் இடம் தமிழ்மணத்திற்கு தான். மேலே கூறிய அதே சில அம்சங்களுடன் செயல்ப்படுகிறது. இதன் மைனஸ் லோடு ஆகும் நேரம் தாமதமாகிறது. ஆனால் மிகவும் சிறப்பான சேவையை வழங்குகின்றது.மேலும் இதன் வாக்கு அளிக்கும் பட்டனை சிறியதாக மாற்றினால் நன்றாக இருக்கும்..இதிலும் தாங்கள் உறுபினர் ஆக வேண்டும்.


04.Ulavu
     ஜந்தாம் இடம் உலவு. சிறிது நாட்களாக ஏதோ சிறு காரணங்களால் செயல்படவில்லை. ஆனால் தற்போது மீண்டும் தன் அழகான அருமையான் சேவையை வழங்குகிறது.
அருமையாகவே உள்ளது..பதிவுகளை பற்றி மேலும் தெரிவித்து. லோடு ஆகும் நேரத்தை குறைத்தால் நல்ல சிறப்பான திரட்டி இதற்கு உண்டு. அருமையான சேவை.

     ஆறாம் இடம் தமிழ்வெளி. பார்ப்பதற்கு அழகாம இல்லாவிட்டாலும். சேவையை சிறப்பாக வழங்குகிறது. தளத்தில் தோற்றத்தை மாற்றினால் மேலும் நன்றாக இருக்கும். இதிலும் தாங்கள் உறுபினர் ஆக வேண்டும்.ஒரு முறை நம் பிளாக்கை பதிந்துவிட்டால் அதுவே தானாக நம் பதிவுகளை பதிந்துவிடுகிறது.

     தற்போது இதில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பான தாக தான் உள்ளது. ஆனால் முதலில் இருந்த தோற்றத்தில் பதிவுகளின் விவரம் நன்றாக இருந்தது, அது தற்போது இல்லை. இதில் பதியும் முறை எளிமையாக உள்ளது ஒரு முறை நம் பிளாக்கை பதிந்துவிட்டால் அதுவே தானாக நம் பதிவுகளை பதிந்துவிடுகிறது.

     மிகவும் பிரபலமான திரட்டிகளில் இதுவும் ஒன்று. இங்கு பதிவுகளை பதிவதன் முலம் தேடல் இயந்திரங்களில் முகப்பில் நம் பதிவு தெரிய வாய்ப்பை ஏற்ப்படுத்துகிறது. உதரணமாக ungalwebஎன தேடினால் ThatsTamilல் பதிந்த பதிவு தோன்றும். இதன் தோற்ற முறையை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் லோடு ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கொள்கிறது. படங்கள் அப்லோடு செய்யும் முறை செயல்ப்படவில்லை. இங்கு தங்களில் கூகுள் அக்கொண்டை கொண்டு செயல்படலாம்.

     இந்த திரட்டியையும் சிலர் அறிந்துயிருக்க மாட்டிர்கள். சமிப காலமாக அழகாகவும் சிறப்பாகவும் தன் சேவையை செய்துவருகிறது. பிரபல, புதிய பதிவுகளை சற்று பெரியதாக சைட்பாரில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
வளர்ச்சி அருமை!

     சரியான சில மாற்றங்களை மேற்க்கொண்டால் சிறப்பாக வரும். பதிவுகளை பதிவதில் மிகவும் எளிமை. ஆனால் நண்பர்கள் சேர்ப்பதில் சிறிய எளிமையான மாற்றங்களை செய்தால் நன்றும்.

     நன்றாக தான் செயல்ப்பட்டது சமிபத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை சிறிது நாட்கள் சரியாக இயங்கவில்லை. தற்போது இயங்குகிறது. ஆனால் MALWARE VIRUES உள்ள பாதுகாப்பு அற்ற தளம் என்னும் செய்திவருகிறது. இதன் இந்த செய்திகான தவறை கண்டுபிடித்து சரிசெய்யவும்.

     நல்ல சேவையை மேற்கொள்ள எண்ணுகிறார்கள் என தெரிகிறது. தமிழ் ஈலத்திற்கு வழங்கும் சிறப்பை அனைத்து பதிவுகளுக்கு வழங்கினால் நன்றாக இருக்கும். மாற்றம் தேவை.(நன்றி http://ganeshdigitalvideos.blogspot.com)

மேலும் சில திரட்டிகளையும் இங்கு பார்ப்போம்





தமிழ் வாசல் – தமிழ் இணைய தளங்கள் | வலைப்பூக்கள் | பதிவர்கள் | வெப்சைட் | ப்ளாக்கர் | வேர்ட் ப்ரஸ் | Tamil Websites Directory

மேலுள்ள திரட்டிகளில் பயனர்கணக்கை தொடங்கிய பின்பு பதிவுகளை ஒரே இடத்தில் இருந்து இணைக்க இங்கே http://tamilpoint.blogspot.com/p/submit.html செல்லுங்கள்.

அதிமுக்கியமான பகுதி கீழ உள்ளதுங்கோ!

gif animator

மேலுள்ள திரட்டிகளில் காணப்படும் குறைபாடுகளை நீக்கி பதிவர்களுக்கு சுலபமாக தமது பதிவுகளை இணைத்து பிரபல்யபடுத்த புதிய திரட்டியாக தற்போது கூகிள்சிறி.கொம் http://www.googlesri.com/ செயற்படுகிறது. இது மின்னஞ்சலை அடிப்படையாக வைத்து பதிவகளை திரட்டுகிறது.

உங்கள் பதிவுகளை மின்னஞ்சல்மூலம் பயனர்கணக்கெதுவுமின்றி வெறும் 20 செக்கன்களில் இணைக்க இத்திரட்டி வழிசெய்துள்ளது.

உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்க உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும்(4வரிகளில்) அதன் இணைப்பையும்(URL) Body பகுதிக்குள்ளும் இட்டு உங்கள் மின்னஞ்சலை rss4sk.googlesri2010@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். தன்னியக்கமுறையில் உங்கள் பதிவு  சமூக தளங்களில் சேர்க்கப்பட்டு பிரபலமடையும்.

வலைத்தளம் இல்லாதவர்களும் தமக்கு பிடித்த பதிவுகளை மின்னஞ்சல் செய்து இத்திரட்டியில் இணைக்கலாம். சமூக தளங்களில் பரவியிருக்கும் உங்களை கவர்ந்த தகவல்களையும் இதேமுறையில் இங்கே பகிர்ந்து நீங்களும் ஒரு இணையத்தள நிர்வாகி ஆகலாம்.







Related Article:

3 கருத்துரைகள்:

கற்பதை கற்பிப்போம் said...

www.thiratti.com il pathivukalai evvaaru inaippathu viperam tharavum mimrinas123@yahoo.com

Unknown said...

english blog i eppadi panrathu .....?

Mr.Madras said...

உங்களது பதிவுகளை அழஹி.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் www.azhahi.com

இப்படிக்கு
Azhahi.Com



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog