Monday, 28 January 2013

செக்ஸ் என்றால் என்ன?


செக்ஸ் ஒருவித அனுபவம் தான்.  அனுபவம் கூடக் கூட ஆட்டத்திலும் நேர்த்தி, முழுமை, நிபுணத்துவம் வந்து விடும். இதில் கற்றுத் தேரும் வரை நாம் செக்ஸுக்கு அடிமை.. கற்றுத் தெளிந்து விட்டால் செக்ஸ் நமக்கு அடிமையாகி விடும்.


ஆரம்பத்தில் பெரும்பாலானோர் வாரத்திற்கு பலமுறை செக்ஸ் வைத்துக் கொள்வது சகஜமானது. சிலர் தினசரி கூட ராத்திரி ரவுசில் இறங்குவார்கள். ஆனால் போகப் போக அது குறைந்து கொண்டே வரும்.. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக. வாரத்திற்கு சில முறை, பிறகு மாதத்திற்கு சில முறை என்று குறுகிக் கொண்டே போய் விடும்.

புதிதாக திருமணமானவர்களுக்கு எப்போதுமே செக்ஸ் நினைவுதான் கொஞ்ச நாளைக்கு அதிகமாக இருக்கும். இதற்காகத்தான் அவர்களை அடிக்கடி தொந்தரவு செய்யக் கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால் அதுவே நாளாக நாளாக ஆர்வம் குறையும் அல்லது அதுதான் பக்கத்திலேயே இருக்கே, பிறகெதற்கு பதறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடும்.

இருப்பினும் திருமணமாகி நீண்ட காலத்திற்குப் பிறகும் கூட, ஒரே நாளில் 2 அல்லது 3 முறை அல்லது அதற்கு மேலும் உறவு கொள்வது எளிதானதுதான் என்று கூறுகிறார்கள் செக்ஸாலஜிஸ்டுகள்.

செக்ஸ் என்றால் என்ன ... ஆண் பெண் இருபாலாருக்கிடையே ஏற்படும் ஈர்ப்புதான், ஹார்மோன் ரசவாதம்தான். இதில் உடம்பு மட்டுமல்ல, மனசும் கூட முக்கியக் காரணம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது போல உறவில் ஈடுபாடு கூடும்போது உறவின் எண்ணிக்கையையும் நாம் நிச்சயம் கூட்ட முடியும்.

நடுத்தர வயதைக் கடந்த சிலருக்கு, முன்பு போல நாம் இப்போதும் அதிக அளவில், அதாவது ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்படி்த தோன்றும்போது அதை செயலாற்ற உடனே களத்தில் இறங்கி விட வேண்டும். அதற்கேற்ப மனதையும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று இரவு நமக்கு அன்லிமிட்டெட் என்று முடிவு செய்து விட்டால் மாலையிலேயே மனதளவில் ரெடியாகி விடுங்கள். சீக்கிரமே சாப்பிட்டு விடுங்கள். படுக்கைக்குப் போகும் போது சாப்பாடு செரித்திருக்க வேண்டும். மனசை பளிச்சென வைத்துக் கொள்ளுங்கள். உடலையும் ஆயத்த நிலைக்குக் கொண்டு வாருங்கள். கூடுமானவரை இரவு 9 மணிக்குள் படுக்கை அறைக்குள் புகுந்து கொள்வது நல்லது.

முதல் உறவில் அதி வேகம் காட்டுவதைத் தவிர்க்கவும். அதற்காக சுவாரஸ்யமான தருணங்களை மிஸ் செய்ய வேண்டியதில்லை. வழக்கம் போல உற்சாகமாக ஈடுபடுங்கள். உறவை முடித்த பின்னர் இருவரும் நன்கு ரிலாக்ஸ் ஆகிக் கொள்ளுங்கள். பிறகு சூடான பால் சாப்பிட்டு விட்டு இருவரும் ஹாயாக சிறிது நேரம் படுத்தபடி பேசிக் கொண்டிருங்கள்.

சாதாரணமான முறையில் இல்லாமல் செக்ஸியாக, உறவை மையமாகக் கொண்டு பேசிக் கொண்டிருங்கள். அப்போதுதான் மூடு மாறாது. இப்படியே ஒரு ஒரு மணி நேரம் ஓடட்டும். அதன் பின்னர் அடுத்த உறவுக்குத் தயாராகலாம்.

2வது முறையை வேறு விதமாக செய்ய ஆரம்பியுங்கள். இதனால் உங்களுக்குள் சோர்வு ஏற்படாது, மாறாக புத்துணர்வும், புது அனுபவமும் கிடைக்கும்.

இந்த 2வது உறவு உங்களுக்குள் பெரும் நம்பிக்கையை மட்டுமல்லாமல், பெருத்த சந்தோஷத்தையும்,  உற்சாகத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். மீண்டும் தேவைப்பட்டால், மறுபடியும் ஒரு சின்ன பிரேக், பிறகு சின்னதாக ஒரு முன் விளையாட்டு என்று ஆரம்பித்து தொடருங்கள்...

மிகவும் இளம் வயதினராக இருந்தால் 4, 5 என்று கூட தாண்டிப் போக முடியும். அதுவே நடுத்தர வயதினராக இருந்தால் 2 அல்லது 3 வரை போகலாம். அதற்கு மேலும் முடிந்தால் போகலாம், தவறில்லை. அதேசமயம், உடல் சோர்வையும், வலியையும் மனதில் கொண்டு சற்றே சமர்த்தாக செயல்படுவது நல்லது.

பெண்களைப் பொறுத்தவரை 2 உறவுக்கு மேல் போகும்போது பிறப்புறுப்பில் லூப்ரிகன்ட் குறைய வாய்ப்புள்ளது. எனவே அதற்கேற்றார் போல திட்டமிட்டுக் கொள்வது நல்லது.  உங்களுக்கு முடியும் என்பதற்காக அவரைப் போட்டு பாடாய்ப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். போதிய அளவில் உங்களது துணையின் பிறப்புறுப்பில் லூப்ரிகன்ட் தன்மை இருக்கிறதா என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படவும்.

Thanks:retham


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog