Friday, 4 January 2013

கல்லூரிக் காலம்.. கவிதைகள்

கல்லூரிக் காலம்..
"நட்புக்கு மரணம் இல்லை)

உறைந்து இருக்கும் பனிப் பிரதேசத்தினுள்,
உறக்கத்தில் இருக்கும் ஒரு மரத்தின் விதையைப் போல,
கல்லூரிக் காலம் ஒவ்வொருவரின் நினைவுகளிலும்,
ஏதோ ஒரு இருண்ட மூலையில் ஒளிந்து கிடக்கிறது.

நினைவுபடுத்தும் ஏதேனும் ஒன்றை
அல்லது ஒருவரை சந்திக்கப்பட நேர்கையில் தான்
நினைவுகள் புயலைப்போல வேட்டையாட தொடங்கும்.

தொலைந்துபோன சிறகினை பறவை தேடிப்போவதில்லை.
நினைவுகள் அப்படி இல்லை, தொலைந்தவற்றை மீட்டிக்கொள்ளும். காற்றினால் களவாடப்பட்டுக் கொண்டிருக்கும் விளக்கின் சுவாலை போல பட படக்கிறது மனது. ஆடும் வெளிச்சத்தில் அலையும் நிழலைப்போல தவிர்க்கும் நினைவுகளின் விம்பம் இது..

மூடும் கண்கள் எப்போதும் எதையும் காண்பதில்லை.
கண்கள் திறந்திருந்தால் கனவு வருவதில்லை.
கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை.
உண்மைகள் எதுவும் கனவாய் போவதில்லை.
கனவாய் போன சில உண்மைகள் தான் வாழ்க்கை.....

நட்பு, காதல் நிறைந்த எம் ஒவ்வொருவரின் கல்லுரி வாழ்வு

நட்பு எப்படிப்பட்டது, வித்தியாசமானது.
காதலை விட ஒரு படி மேலானது. தன்நலம் பாராத ஒரு உறவு. பேச்சில் மட்டும் அல்ல, நிஜத்திலும் தான்..

நதியில் அலையும் இலையும், தத்தளிக்கும் எறும்பும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் நிமிடம் தான் நட்பு.

ஒரு கயிற்றுப் பாலத்தில் இருவர் நடக்க முடியுமா..?? முடியும் என்றால் நட்பில் மட்டும்தான். பாலைப் பார்த்து கள் என நினைப்பதல்ல நட்பு, கள்ளை பார்த்து பால் என்பதே உண்மையான நட்பு.

வானம் அழகானது தான் வெளிச்சமாய் இருக்கும் போதும் இருட்டிவிட்டாலும். பகலில் சூரியனால், இரவில் நிலாவால். நட்பும் அதுபோல் தான்.

வாழ்க்கை அழகாக இருப்பது
சந்தோசத்தில் மட்டும் அல்ல
துக்கத்தில் தோழனால்...
சந்தோசத்தில் நண்பியால்...

'கல்லூரி வாழ்வு தொடங்கும் இடம் நட்பு' இது சரியா
'நட்பு தொடங்குமிடம் கல்லுரி வாழ்வு' இது சரியா..?

புதிதாக இறைக்கை முளைத்த பறவை பறக்க எத்தனிக்க, அது முடியாது போகும். அது போல நட்பு கிடைத்தும் நட்பென்று உணரமுடியாத வயதில் தான் முதல் நட்பின் ஆரம்பம்.

நட்பு

எண்ணங்கள் வேறுபட்டாலும்
எதிர்பார்ப்புகள் ஏதும் இன்றி
இணைந்து விடும்
உன்னத உறவு.... நட்பு

உரிமை கொண்டாடுவது உறவு
ஆனால்
உறவைக் கொண்டாடுவது நட்பு தானே...

நட்பில் தான்
வருணம் இல்லை...

நட்பில் தான்
போலி இல்லை..

நட்பில் தான்
பொய்கள் இல்லை....

நட்பு என்பது பொது நலம்
மட்டும் அல்ல
சுயநலமும் கூட...

நட்பு கோடையிலும் வசந்தம்..
நட்பு வெறிக்கான ஏணி..
குட்டி உலகம் நட்பு...
கடவுள் படிக்கும் புத்தகம் நட்பு...

உலகம் வேண்டுமா
நட்பு கொண்டு பார்...

ஆயுள் இரட்டிப்பாகவேண்டுமா
நட்பு கொண்டு பார்...

நட்பு என்பது சத்துணவு
இழந்தால்
ஆரோக்கியம் கெட்டுவிடும்...

நட்பு என்பது புன்னகை
இழந்தால்
அத்தனையும் கெட்டுவிடும்...

அத்தனையும் செயற்கை
நட்பை தவிர...

தமிழ்நிலா


அமர்க்களம் கருத்துக்களம்

உலக தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் களம் 

amarkkalam.net



Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog