தூங்கிக்கொண்டிருந்தன..
எப்படிக் கவிதையாவது என்றும்
தெரியாது அதற்கு..
அடிக்கடி என்னைக்
கேட்டுக்கொள்ளும்...
இரண்டு வரிகளை
இணைத்தா...?
அல்லது
இ
ப்
ப
டி
எழுத்துக்களைப் பிரித்தா..?
ஒரு
முழுவரியை
நான்காக
உடைத்தா...?
அல்லது
அலை போல நாபுரளும்
உவமைகளை அடுக்கியா...?
ஆனால் பொய் சொல்வதற்கு
துளியளவும் சம்மதம் இல்லை
என்றது பேனா.... என்ன செய்வது..??
இணைத்தும், பிரித்தும்
அடுக்கியும், உடைத்தும்..
இப்படி எழுதினேன்..
நன்று என்றார்கள்
எழுத்துக்கள் மார்தட்டிக்கொண்டன
நாம் கவிதையென்று...
பொய்ப்புகழ்ச்சி பிடித்துவிட்டது போலும்
பொய்களையே எழுதிக்கொண்டது...
இது கவிதையே இல்லை
என்றார்கள் கவிஞர்கள்
மீண்டும் தூங்கிவிட்டது...
எனது கவிதை...
எழுந்திரு என்றேன்
புரண்டு படுத்துக்கொண்டது
எழுந்துவர விருப்பமின்றி...
தமிழ்நிலா
அமர்க்களம் கருத்துக்களம்
உலக தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் களம்
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment