சில தினங்களுக்கு முன் ஒரு ஹிந்தி சேனலில் குறு நாடகம் ஒன்றை பார்த்தேன். ஒட்டுக் கேட்பது தொடர்பாக ஒரு முக்கிய கருத்தை அது வலியுறுத்துகிறது.
ஒருவர் தனது மனைவி மற்றும் தாயுடன் ஒரே வீட்டில் வாழ்கின்றார். அவருக்கு தனது தாயை எந்த அளவு பிடிக்குமோ அந்த அளவு மனைவியையும் பிடிக்கும். அதாவது ஒரு கண்ணில் வெண்ணை, ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற வேலை கிடையாது. ஒரே சமயத்தில் மனைவிக்கு நல்ல கணவன் என்றும், தாய்க்கு நல்ல மகன் என்றும் பேர் வாங்குவது "நெருப்பற்றின் குறுக்கே மயி*ப் பாலம் கட்டி நடப்பதைப் போன்று..".....
மாமியார் மருமகள் கருத்து பேதங்கள் எங்கும் இருப்பது. அதுவும் ஒரே வீட்டில் வசித்தால் இது நிறையவே இருக்கும் என்பது சொல்லித் தெரிய தேவையில்லை. எனவே அவர் இந்த இருவரையும் மேலாண்மை செய்ய நன்றாகவே கற்றுக் கொண்டிருந்தார். எப்படி...?
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment