

ஜீவ சமாதி - ஸ்ரீமாதவானந்தா ஜீவ ஐக்கிய வரலாறு
ஞானபிதா சிவானந்த பரமஹம்ஸர் ...... சித்த சமாஜ ஸ்தாபகர் அவர்கள் தமது ஊர்த்துவதியின் மூலம் பெறப்பட்ட சித்த வித்தையினைஉலகில் உள்ள மக்கள் அனைவரும் சாந்தியும், சமாதனமும் அடையும் பொருட்டு, எல்லோரும்வாரி வழங்கினார்கள்,அப்படிப்பட்ட நல்வித்தில் முளைத்து, ஞானத்தை அடைந்துவரும் ஞானபிதாவிடம்ஆனந்தா பட்டம் பெற்ற பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான சித்த சிவராஜயோகி ஸ்ரீமாதவானந்தா கேரளா மாநிலம் ஆலப்பிழை கொடுங்கலூரில் பிறந்தார், என்று தெரியவருகிறது, இமயமலைச் சாரல்களில் பலகாலம் தவம் புரிந்து, தமது இறுதிக்காலத்தில் தாம் சமாதியாக வேண்டுமென்ற உள்ளுணர்வு ஏற்பட அதற்கு ஏற்ற இடம் பாம்புகோவில் சந்தையைஅடுத்த வெள்ள மடத்து விநாயகர் கோவில் அருகில் தான் என்பதை உணர்ந்தார். சித்த சிவராஜயோகிமாதவானந்தா பாம்புகோவில்சந்தையை அடுத்த வெள்ளை மடத்து விநாயகர் கோவிலுக்கு 6-2-1964ம் தேதி வந்துசேர்ந்தார். விநாயகர் கோவில் அர்ச்சகரிடம் தாம் இன்னும் நான்கு நாட்களில் சமாதி அடையப்போவதாகக் கூறி, அதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய சொன்னபோது, அதை நம்பமறுத்த அர்ச்சகரின் கடந்த கால நிகழ்வுகளை எடுத்துக்கூறி அவரை நம்ப வைத்தார், பின், சுவாமிகள் குறிப்பிட்ட அதே இடத்தில் அதே நேரத்தில் 10-2-1964ல் பத்மாசனத்தில் அமர்ந்து மகாசமாதி அடைந்தார்கள், அருகிலுள்ள கிராம மக்கள் அனைவரும், சுவாமி சொன்னபடி சமாதி வைத்தார்கள். பிரம்ம ஸ்ரீ மாதவானந்தா அவர்கள் கூறியபடியே கருடன் பறந்து வந்து, சுற்றிக் கொண்டிருந்தது, அன்ன ஆகாரமமின்றி இருந்து மூன்றாம் நாள் சமாதி அடை, அது சுவாமிகளின் அருகிலேயே சமாதி வைக்கப்பட்டது, சில நாட்களுக்கு பிறகு சுவாமி சங்காரானந்தா அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வந்து சமாதியை மீண்டும் தோண்டிய போது, அவரின் உடல் சிதையாமல் பொன்னிறமாக ஒளிர்ந்தது. பின் சமாதியை சுற்றி கல்லினால் கட்டிடம் கட்டி 1969 அக்டோபர் மாதம் 13ம் தேதி உயர்திரு ஸ்ரீ கிருஷ்ணரெட்டி ஹைகோர்ட் ஜட்ஜ் அவர்கள் தலைமையில் ஐந்தருவி தவத்திரு சங்கரானந்தா சுவாமி அவர்களால் திருப்பணி செய்து , அவ் ஜீவ சமாதியில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று கூட்டு ஜெபமும் அன்னதானமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ஜீவ சமாதி பிரம்ம வழிபாட்டு முறைகளையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இங்கு தியானம் என்பதற்கு ஜபம் என்றும் மூச்சுபயிற்சிதான் பிதானம் என்றும் ஜபம் செய்பவர்கள் மேலாடை அணியலாகாது என்றும் சிவ மந்திரங்கள் ஒதுவது தவிர்க்கப்படுகிறது, மேலும் சைவ ஜீவ சமாதிகளில் லிங்கம் பிரதிஷ்டைக்கு பதில் பிரம்ம குமாரிகள் சபை போன்று சமாதியில் தாமரை மலர் பீடம் அமைக்கப்பட்டுள்ளது, ஓம் என்ற ஒலிக்கோ அல்லது சிவ நாமங்களுக்கோ இடம் இல்லை, மேலும் முற்றிலும் இது ஒரு பிரம்ம ஞான சபையைச் சேர்ந்த ஜீவ சமாதியாகும்
Related Article: