Monday, 25 February 2013

இரட்டை குழந்தைகள் வேண்டுமா? இதை படிங்க...


ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பெற ஆசைபடுபவரா நீங்கள்? அப்படி இரட்டை குழந்தைகள் பிறக்க ஜீன்கள் மட்டும் காரணமல்ல. ஒரு சில உணவுகளின் மூலமும் ஆரோக்கியமான இரட்டை குழந்தைகளைப் பெற முடியும். நல்ல ஊட்டசத்து மிக்க உணவுகளை உண்டாலும் இரட்டை குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்த உணவை சாப்பிட்டால் கண்டிப்பாக இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு சில உணவுகளை உண்டால் இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உண்டு. அது என்னென்ன உணவுகள் என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
கிழங்கு : இரட்டைக் குழந்தைகள் பெரும்பாலும் நைஜீரியாவிலேயே அதிகம் பிறக்கின்றனர். ஏனெனில் அங்கு இருப்போர் பெரும்பாலும் கிழங்கு வகைகளை அதிகம் உண்கின்றனர். ஏனெனில் கிழங்கில் அதிகமாக பைட்டோ எஸ்ட்ரோஜென் (phytoestrogens) மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் (progesterone) இருக்கிறது. அது கருப்பையில் அதிகமாக முட்டையை தங்க வைக்க உதவும். அதனால் தான் அதிகமாக கிழங்கு சாப்பிட்டால் இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உண்டு.
பால் பொருட்கள் : கர்ப்பிணிகள் பால் பொருட்களான பால், வெண்ணெய் மற்றும் தயிர் போன்றவற்றை உண்பதால் இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் அதில் அதிகமாக கால்சியம் உள்ளது. கால்சியமானது எலும்புகளுக்கு மட்டும் நல்லதல்ல, இனப்பெருக்க மண்டலத்திற்கும் சிறந்தது. மேலும் இதனை லாங் ஐலேண்ட் ஜெவிஸ் மருத்துவ நிறுவனத்தை சேர்ந்த டாக்டர். கேரி ஸ்டேன்மேன், குறைவாக பால் பொருட்களை உண்ணும் பெண்களை விட ஐந்து மடங்கு அதிகமாக, அதிக அளவு பால் பொருட்களை உண்ணும் பெண்களுக்கே இரட்டை குழந்தைகள் பிறக்கின்றனர் என்று கூறுகிறார். மேலும் இது இரட்டை குழந்தைகளை பிறக்க வைப்பதோடு, கருவில் இருக்கும் குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவும்.
போலிக் ஆசிட் உணவுகள் : போலிக் ஆசிட் உணவுகளால் இரட்டை குழந்தைகள் பிறக்கும். மேலும் காய்கறிகளான பீன்ஸ், கீரைகள் மற்றுட் பீட்ரூட் போன்றவற்றில் அளவுக்கு அதிகமாக போலிக் ஆசிட் நிறைந்துள்ளது. ஆகவே இந்த போலிக் ஆசிட் உணவுகளை அதிகமாக உண்பதால், 40% அதிகமாக இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு குழு கண்டுபிடித்துள்ளது.
குறைவான கார்போஹைட்ரேட் : கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும் உணவுகளான தானியங்கள், பீன்ஸ் மற்றும் காய்கறிகள் மிகவும் சிறந்த உணவுகள். இவை கருமுட்டையின் அளவை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த உணவுகளை உண்டால் எந்த ஒரு நரம்பு குழாயில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும்.
ஆகவே இத்தகைய உணவுகளை உண்டு, இரட்டைக் குழந்தைகளை பெற்று, உங்கள் கனவுகளை நனவாக்குங்கள்.
Thanks:retham


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog