Saturday 27 April 2013

'சிதம்பர ரகசியம்?"



இந்திய சினிமா 100 ஆண்டுகள் முடித்ததை இந்திய அரசு சார்பில் கொண்டாட இருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல செய்தி.

மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இம்மாதம் 25-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தில்லியில் கொண்டாடஅறிவிப்பு வெளியிட் டுள்ளது.
அதில்  இந்திய மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்படுவதாகவும் அது தொடர்பாக விவாதங்களும் தொடர்ந்து நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 அதற்கான  பட்டியல்  வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் இந்தி, வங்காளம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்பட  படங்கள் வரிசை தரப்பட்டுள்ளது.
ஆனால், விழாவின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் திரைப்பட வெளியீடு குறித்தோ, விவாதங்கள் குறித்தோ எந்த விவரமும்இல்லவே  இல்லை.
ஆக தமிழ் நாடு இந்தியாவில் தான் இருக்கிறதா?அங்கும் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகிறதா?என்ற கேள்வி எழுகிறது.
ஈழத்தமிழர்கள் படுகொலையைத்தான் அடுத்த நாட்டு விவகாரம் என்று கூறிவரும் மத்திய அரசு இப்போது தமிழ் நாட்டையே வெளிநாடாக எண்ணுகிறதா?
அல்லது ஒரு பொருட்டாகவே எண்ணவில்லையா என்ற கேள்வி எழுகிறது. இங்கு தயாரானவை திரைப்படங்கள் வரிசையில் வரவில்லையா?
அல்லது நூற்றாண்டு விழாவில் திரையிடப்படும் அளவு தகுதி வாய்ந்தவை அல்லாதவையா?
தமிழ் நாட்டில்தான் திரைப்படங்கள் ஆட்சியையே மா ற்றியிருக்கி றது. திரைப்படத்துறைதான் அண்ணா,கருணாநிதி,எம்ஜிஆர்,ஜானகி ராமச்சந்திரன் ,ஜெயலலிதா என்று ஐந்து முதல்வர்களை தந்தும் இருக்கிறது.திரைத்துறை தமிழகத்தில்தான் உணர்வுடன் கலந்துள்ளது.அந்த தமிழ்த்திரைப்படங்கள் ஒதுக்கி வைப்பது எந்தவகையிலும் சரியாக இருக்காது.அப்படி நடக்கவும் கூடாது.
அரசு வெளியிட்டப்படியல் முழுமையானதாக இராது என்றே இப்போதுவரை நம்புகிறோம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
 'சிதம்பர ரகசியம்?"

மேற்கு வங்கத்தை சேர்ந்த திரினாமுல் காங்கிரசு சார்பான சாரதா சிட்பண்ட் நிறுவனம் மூடப்பட்டது பற்றி முன்பே பார்த்தோம்.இந்த நிதி நிறுவனத்துடன் கட்சித்தலைவியும் -முதல்வருமான மம்தா பானர்ஜிக்கும் தொடர்புண்டு.
suran
இந்த நிதி நிறுவனத்தில் திரினாமுல் காங்கிரசு முக்கியத்தலைகள் நிர்வாகிகள்.
30000 கோடிகளுக்கு மேல்  புழங்கிய நிறுவனம் .தொலைக்காட்சி சானல்கள்,திரினாமுல் காங்கிரசு ஆதரவு பத்திரிக்கைகள் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
திடீரென இதன் நிர்வாகிகள் தலை மறைவாகி விட்டனர்.
இதை நம்பி பணம் போட்ட, ஆயிரக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள் செய்வதறியாது நிற்கின்றனர்.
 சில தினங்களுக்கு முன் சாரதா குழு தலைவர் சுதிப்தா சென் காஷ்மீரில் கைது செய்யப்பட்டார் .அவர்   போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறி "பிளாக் மெயில்' செய்ததாக தான் சார்ந்த அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இதில் திரிணமுல் காங்கிரசை சேர்ந்த ஸ்ரீஞ்சை போஸ், குணால் கோஷ் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
suran
இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் "மோசடியில் ஈடுபட்டுள்ள சாரதா குழுமத்திற்கு, சட்ட ஆலோசனை வழங்க, சென்னையை சேர்ந்த பெண் வழக்குரைஞருக்கு 1 கோடி ரூபாய் கட்டணமாக பெற்றுள்ளார். டில்லியிலும், கவுகாத்தியிலும் எவ்வளவோ வழக்குறைஞர்கள் இருக்கும் நிலையில், சென்னையை சேர்ந்த பெண் வழக்குறை ஞரை நியமிக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை, காங்கிரஸ் அமைச்சர் விளக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் வழக்குறைஞர் என, பெயர் எதையும் குறிப்பிடாமல், மத்திய அமைச்சரை மணந்துள்ளவர் என யூகமாக செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.அப்படி இருப்பவர் யார் என்று கண்டு பிடிப்பது என்ன "சிதம்பர "ரகசியமா?மிக எளிதாக அல்லது" நளின"மாக கண்டு பிடித்து விட மாட்டீர்களா என்ன?
நளினமான சிதம்பர ரகசியம் இருக்கட்டும்.
தனியார் நிறுவனம் ஏமாற்றியதற்காக மேற்கு வங்க அரசு மக்கள் வரி ப் பணத்தில் இருந்து 100 கோடிகளை முதற்கட்ட நிவாரணமாக முதலீட்டார்களுக்கு மம்தா பானர்ஜி  ஒதுக்க வேண்டிய கட்டாயம் என்ன வந்தது.?அவருக்கும் ,கட்சிக்கும் சம்பந்த மில்லாத நிதி நிறுவனத்திற்கு மக்கள் பணத்தில் நிவாரணமா?
சந்தேகமாக இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------



Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog