Friday, 17 May 2013

ஸ்பாட் பிக்சிங்

'மேட் ச் பிக்சிங் " அடிக்கடி அடிபடும் வார்த்தை.
இப்போது  இந்த "ஸ்பாட் பிக்சிங்' பற்றி கொஞ்சம் விபரம்.
புக்கிகளின் உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட வீரர், குறிப்பிட்ட ஓவரில் "நோ-பால்; வைடு அல்லது பவுன்சர்' வீசுவது, அல்லது அதிக ரன்கள் விட்டுக் கொடுப்பர்.
பேட்ஸ்மேன்கள் என்றால்  சரியாக விளையாடாமல் விரைவில் அவுட்டாவது, பவுண்டரி, சிக்சர் அடிப்பது என, சூதாட்டத்தில் ஈடுபடுவர்.

 இதில், "மேட்ச் பிக்சிங்' போல, போட்டிகளின் முடிவு நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக, ஏதாவது ஒரு ஓவரில் மட்டுமே தவறு நடக்கிறது.
 தங்களது செயலை செய்யும் முன், மைதானத்தில் அல்லது வேறிடத்தில் உட்கார்ந்து, தங்களை பார்த்துக் கொண்டிருக்கும் புக்கிகளுக்கு, ஏற்கனவே செய்யப்பட்ட முடிவின் படி, "சிக்னல்' கொடுக்கின்றனர்.இதற்காக, வீரர்கள் லட்சக்கணக்கில் பணம் பெறுகின்றனர்.
 கடந்த ஆண்டு, பிரீமியர் தொடரில் சுதிந்திரா, ஸ்ரீவாஸ்தவ், மோனிஷ் மிஸ்ரா, அமித் யாதவ், அபினவ் பாலி ஆகிய, ஐந்து வீரர்கள் பிடிபட்டனர்.
 இப் போது  ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர் சிக்கினர். ஆறாவது தொடரில் மட்டும், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, சூதாட்டம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
 இந்த வகையில், 12 ஆட்டங்களில், சூதாட்டம் நடந்ததாக தெரிகிறது.
ஐ.பி.எல்., தொடரில், "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்ட ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டிலா, அன்கித் சவான் ஆகியோரை மும்பை போலீஸ் கைது செய்தது. இவர்கள் லட்சக்கணக்கில், சூதாட்டக்காரர்களிடம், பணம் பெற்று வேண்டுமென்றே, "நோ-பால்' வீசியது, ரன்களை வாரி வழங்கியது போன்ற குற்றங்களில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. ஆறாவது, ஐ.பி.எல்., என்ற இந்தியன் பிரிமியர் லீக் போட்டி தொடர் தற்போது நடக்கிறது. இதில் சென்னை, மும்பை, ராஜஸ்தான், கோல்கட்டா உள்ளிட்ட ஒன்பது அணிகள் பங்கேற்கின்றன. மும்பையில் நேற்று முன் தினம், நடந்த லீக் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதின.

 >>>>>>>>> அதன் பின்.?>>>>>>>>>>


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog