Monday, 20 May 2013

தமிழக சட்டப் பேர [வாழ்த்த] வை

நடந்து முடிந்த சடடமன்ற வரவு-செலவு கூட்டத்தொடர் ஒரு பார்வை.

தமிழகத்தின் 2013-14ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் 41 நாட்கள் நடந்தது. 
204 மணிகள்  10 நிமிடங்கள் இத்தொடர் நடத்துள்ளது. 
வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக கெள்வி கேட்கவோ,வாதங்கள் செய்யவோ முடியாத  110வது விதியின் கீழ்  43 அறிக்கைகளில பல்வேறு துறைகளுக்கான திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இரண்டாண்டு  ஆட்சியில் இதுவரை  110 விதிகளின் கீழ் 104 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கச்சத்தீவை மீட்க, மத்திய அரசு, நடவடிக்கை எடுக்கக் கோரி, தனி நபர் மசோதாவை, முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை நிர்வாகத்தை அரசு ஏற்கும் சட்டம், மாநில சொத்து வரி வாரியம் அமைக்கும் சட்டம் ஆகிய முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர், ஆறு மாதங்களுக்கு தற்காலிக நீக்கம்  செய்யப்பட்டனர். 
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி, ஸ்டாலின், புஷ்ப லீலா ஆல்பன், கே.சி.பழனிசாமி ஆகியோரைத் தவிர 19 பேர் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும்தற்காலிக நீக்கம்  செய்யப்பட்டனர்.
எதிர்க்கட்சிகளுக்கு பேச போதிய காலம் ஒதுக்கப்படவில்லை என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. 
ஆளும் கட்சிக்கு தோழமையாக இருக்கும்,ஜெயலலிதாவை வாழ்த்தியே பேசும் இரு  கம்யூனிஸ்ட்கள் மற்றும் புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் கூட தங்கள் தொகுதி,மக்கள் நலன் பற்றி கூட பேச இயலவில்லை என  குற்றச்சாட்டை வைக்கின்றன.
துறை வாரியான மானியக் கோரிக்கை மீது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசும்போதும் கூட  அமைச்சர்கள் அடிக்கடி குறுக்கிட்டு சம்பந்தமில்லாமல் திமுக ஆட்சியையும்,கருணாநிதியை தனிப்பட்ட முறையிலும் பேசி மேலும் பேசவிடாமல் ஆக்கிவிடுகின்றனர்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, பல்வேறு பிரச்னைகள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் அளித்தோம். 
 பெயருக்கு சில கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பெரும்பாலான கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் ஆலோசனையில் உள்ளன என கூறியே, அவற்றை விவாதத்துக்கு சபாநாயகர் எடுத்துக் கொள்வதில்லை.
கேள்வி நேரம் முடிந்ததும், முதல்வர் சட்டசபை விதி 110ன் கீழ், அறிக்கைகளைப் படிக்கத் துவங்கி விடுவார். முதல்வர் அறிக்கை வாசித்து முடித்ததும், அதற்கு, கட்சி வாரியாக எம்.எல்.ஏ.,க்களும் எந்த துறையில் முதல்வர் அறிக்கை வாசித்தாரோ, அத்துறை அமைச்சர், சபாநாயகர் ஆகியோர், முதல்வரின் அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவிப்பர்.

இதற்காக, சபை நேரத்தில் 1:30 மணி நேரம் முதல் 2:00 மணி நேரம் வரை போய்விடும். அதன்பின், துறைகளின் மானியக் கோரிக்கை மீது, விவாதம் துவங்கிவிடும். "ஜீரோ நேரம்' என்பதே   ஜெயலலிதாவின்  சட்டசபையில்  இல்லை.
 இதனால் முக்கியப் பிரச்னைகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை.ஜெயலலிதாவை பாராட்டி பேசினால் மட்டுமே எவ்வளவு நேரமும் பேச சபாநாயகர் அனுமதிப்பார்.முதல்வரும் அமைச்சர்களும் அப்போது இடை மறித்து பேசுவதும் இல்லை."இவ்வாறு  கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ க்கள்  கூறுகின்றனர்.

பட்ஜெட் கூட்டத் தொடரின், கடைசி இரு நாட்களை தே.மு.தி.க.,புறக்கணித்தது. "அரசுக்கும், முதல்வருக்கும் வாழ்த்துத் தெரிவிப்பதற்காக மட்டுமே நடத்தப்படும்- நடக்கும் சட்டசபைக்கு வருவதால்  என்ன பயன் ? "அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கேட்கின்றனர்.

தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேர்மட்டும்  எதிர்கட்சி  எம்.எல்.ஏ.,க்கள் இல்லாத குறையைப் போக்க இருந்து ஆனால்  முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். "எதிர்க்கட்சிகளை சபையில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் "
இது  அ.தி.மு.க.,வின் தோழமை கட்சியான புதிய தமிழகம் விடுத்த கோரிக்கை .
" பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்த, 204 மணி நேரம், 10 நிமிடத்தில், முதல்வர் மற்றும் அரசை வாழ்த்த மட்டும் 180 மணிகளுக்கு மேல்  பெரும்பகுதி நேரம் செலவிடப்பட்டதாகவும் இதில் திமுகஆட்சி ,அதன்  தலைவர் கருணாநிதியை கேலி செய்ததும் ,முதல்வர் ஜெயலலிதா பேசியதும் அடங்கும்."என்று கடைசிவரை சட்டமன்றம் சென்ற  எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ""தி.மு.க., அரசால் ஏற்பட்ட சீரழிவிலிருந்து, தமிழகத்தை மீட்க, கடந்த இரு ஆண்டுகளாக அரசு செயல்பட்டுள்ளது. அதற்கு, வாழ்த்துகின்றனர். இதை, ஏற்க எதிர்க்கட்சிகளுக்கு மனசு வரவில்லை'' என ஆளும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அப்படி வாழ்த்துவது நாட்டில் மக்களிடமிருந்தல்லவா,அதுவும் மனதின் ஆழத்தில் இருந்து  வர வேண்டும் .தங்களை ,தாங்களே வாழ்த்துவது என்பதற்கு வேறு  பெயர் .ஆனால் அரசியலில் இதெல்லாம் சாதாரணம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

உலகின் முதல் பணக்காரர்



சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் முதல் பணக்காரர் என்ற இடத்தை  மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் மீண்டும் பிடித்துள்ளார்.
பில்கேட்ஸ்[வயது -57] கடந்த 2007-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து உலகின் முதல் பணக்காரராக இருந்து வந்தார். 
அதன்பின், அவரது இடத்தை மெக்சிகோவைச் சேர்ந்த முதலீடு மற்றும் தொலைபேசி நிறுவன அதிபர் கார்லஸ் ஸ்லிம் [வயது-73]பிடித்தார்.இவரின் தொலைபேசி நிறுவன ஆதிக்கத்தைக் கண்டும் அதன் மூலம் கணக்கின்றி பணம் குவித்துக்கொண்டிருப்பதை தடுக்கும் வண்ணம்  மெக்சிகோ நாடாளுமன்றத்தில்  சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதனால கார்லஸ்  நிறுவனத்தின் பங்கு 14 சதவீதம் சரிந்தது .மொத்த சொத்து மதிப்பில்  16,200 கோடி ரூபாய் குறைந்துள்ளது. அதற்கு பதில்  பில்கேட்சின் மைக்ரோசாஃப்ட் நிறுவன பங்கு மதிப்பு கடந்த ஆண்டில் 16 சதவீதம் அதிகரித்தது. அவரது சொத்து மதிப்பு 3,99,000 கோடியாக உயர்ந்துள்ளது.
இ தனால்,கார்லஸ் ஸ்லிம்மின் சொத்து மதிப்பை பின்தள்ளி, பில் கேட்ஸ், உலகின் முதல் பணக்காரர் என்ற விட்ட இடத்தை  பிடித்து விட்டார்.

இவை பிரபல பொருளாதார செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் தற்போது வெளியிட்ட உலகின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் தெரிய வந்துள்ளது.

உலகின் முதல் பணக்காரராக மீண்டும் உயர்ந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர், பில் கேட்ஸ்-ன் இன்றைய சொத்து மதிப்பு சுமார் 3,99,000 கோடி ரூபாய். 
அவரை அடுத்து, 3,96,000 கோடி ரூபாய் சொத்துடன் கார்லஸ் ஸ்லிம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
3-ஆவது இடத்தில் உள்ள சர்வதேச முதலீட்டாளரான பஃப்பெட், 3,28,000 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார்.

இந்த100 பேர்கள்  பட்டியலில் 3 இந்தியர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளனர்.

 25-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் முதல் பணக்காரர் முகேஷ் அம்பானிக்கு 1,32,000 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது.
இங்கிலந்தில் வசிக்கும் இந்தியரான லட்சுமி மிட்டல் 83,600 கோடி ரூபாய் சொத்துடன் பட்டியலில் 54-வது இடம் வகிக்கிறார். 
விப்ரோ நிறுவனத் தலைவர் ஆசிம் பிரேம்ஜி   62,700 கோடிகளுடன்  93-வது இடம் பிடித்துள்ளார்.என ப்ளூம்பெர்க் வெளியிட்ட பட்டியல்  தெரிவிக்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------




Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog