Thursday 30 May 2013

பாங்காக்கில் அதிகரிக்கும் ஷூட்டிங்

Increases shooting in Bangkok
அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கும் பட ஷூட்டிங் பாங¢காக்கில் நடந்தது. இதையடுத்து ஜீவா, த்ரிஷா, வினய், ஆண்ட்ரியா நடிக்கும் என்றென்றும் புன்னகை பட ஷூட்டிங் அங்கு நடந்தது. இந்த படங்களுக்கு முன்பாக அமீரின் ஆதிபகவன் படப்பிடிப்பு பாங்காக்கில் நடத்தப்பட்டது. தமிழ் பட ஷூட்டிங்கிற்காக பாங்காக்கில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து வெளிநாடுகளில் ஷூட்டிங் நடத்த விரும்பும் தமிழ் படக் குழு, உடனே பாங்காக் பறந்துவிடுகிறது. அடுத்ததாக விஸ்வரூபம் 2 படத்துக்காக அங்கு செல்கிறார் கமல்ஹாசன். பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்த நிலையில் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை சமீபத்தில் தாய்லாந்தில் படமாக்கினார் கமல். இதில் வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றினார்கள். இதையடுத்து பாங்காக்கில் ஷூட்டிங் நடக்கிறது. அங்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
நன்றி:தினகரன்


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog