Wednesday 22 May 2013

gmail(ஜிமெயில்) மற்றும் blogger(பிளாக்கர்) தரும் "நாளைய எழுத்தாளர்கள்" ஆவதற்கான மாபெரும் போட்டி வாய்ப்பு!

வணக்கம் உறவுகளே! உங்கள் சௌக்கியம் எப்படி?

நீண்ட நாளைக்கு பிறகு பதிவொன்றின் ஊடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. சரி விடயத்திற்கு வருவோம்.

"நாளைய இயக்குநர்" களுக்கான மிகப்பெரிய போட்டி, நடனக் கலைஞர்களுக்கான "மானாட மயிலாட" போட்டி என்பன கலைஞர் தொலைக்காட்சியிலும் பாடகர்களுக்கு ரூபா 60 லட்சம் பெறுமதியான பரிசுக்குரிய "சூப்பர் சிங்கர்" போட்டி விஜய் தொலைக்காட்சியிலும் அமர்க்களமாக நடைபெறுவதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

இதேபோன்று இதர சனல்களிலும் ஏகப்பட்ட போட்டிகள் நடைபெறுகிறது. இவை அனைத்தினதும் நோக்கம் தமது வருமானத்தை பெருக்குவதோ அல்லது தமது சனல்களை பிரபல்யப்படுத்துவதோ மட்டும் அல்ல.அதற்கு மேலாக இச்சனல்களிடம் பொதுநோக்கமாக இன்னொன்று இருப்பதையும் நாம் உற்றுக் கவனித்தால் அறியமுடியும்.

அதாவது சினிமா துறைக்கோ அல்லது இதர பிற துறைகளுக்கோ திறமையான மனிதர்களை வெளிச்சம் போட்டு காட்டுகின்ற பணியையும் இவ்வூடகங்கள் தமது விருப்புவெறுப்புகளுக்கு உட்பட்டு செய்துவருகின்றன. இதே போன்றதொரு வாய்ப்பை எழுத்து துறையில் சுய ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு இணையத்தளம் சத்தம் சந்தடி இல்லாமல் வழங்கி வருகின்றது. அதை உங்களுக்கு அறியத்தரவே இந்த பதிவு.

நான் பதிவின் தலைப்பில் கூறியது போன்று Google(கூகிள்) தனது பயனர்களுக்கு அளித்துவரும் இலவச சேவைகளான  gmail(ஜிமெயில்) மற்றும் blogger(பிளாக்கர்) என்பவற்றை பயன்படுத்தியே குறித்த இணையத்தளம் இவ்வரிய வாய்ப்பை உங்களுக்கு தருகின்றது.

இவ்வாய்ப்பை பயன்படுத்த உங்களிடம் ஒரு gmail(ஜிமெயில்) மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.  உங்கள் ஆக்கங்களையோ அல்லது பதிவுகளையோ நீங்கள் விரும்பும் நேரத்தில் அந்த இணையத்தளத்தில் சுயமாகவே இணைக்கமுடியும்.

உங்கள் ஆக்கம் அல்லது பதிவு நான்குவரியில் அமைந்த ஒரு கைக்கூ கவிதையாக கூட இருக்கலாமென இந்த இணையத்தளம் உங்களுக்கு தென்பளிக்கிறது.அது மட்டுமல்ல இந்த வாய்ப்பை பயன்படுத்த மொழியோ நாடோ தடையில்லையாம். உங்களுக்கு பிடித்த எந்த வகையறாவிலும் உங்கள் பதிவு அமையலாமாம். ஆனால் ஆபாசம் சார்ந்தவற்றை தாமே நீக்குவோமென மிரட்டவும் செய்கிறார்கள் இதன் நிர்வாகிகள்.

விரைவாக வளர்ந்துவருகின்ற இணையத்தளங்களில் ஒன்றாக இவ்விணையத்தளம் அலெக்ஸா இணையத்தளத்தினால் (http://www.alexa.com/) அடையாளப்படுத்தப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. இதன் தற்போதைய உலக தரவரிசை 544,683 ஆகும். இதன் அபரிமித வளர்ச்சியை பார்க்கும்போது விரைவில் 5 இலக்க தரவரிசையை எட்டிப்பிடிப்பது திண்ணம்.

சமூக வலைத்தளங்களின் ஊடாக நீங்கள் பகிர்ந்து கொண்ட ஆக்கங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது உங்களின் நண்பர்களின் நண்பர்களை மட்டுமே சென்றடைந்திருக்கும் இதுநாள்வரை. ஆனால் இவ்விணையத்தில் உங்கள் ஆக்கங்களை இணைத்தால் உலகிலுள்ள 200 க்கு மேற்பட்ட முன்னனி தேடுதல் இயந்திரங்களில் (search engines) அவை சேர்க்கப்படுவதாகவும் கூறுகிறது.

அது மட்டுமல்ல தனது சமூகவலைத்தளங்களை குறிப்பாக google plus, facebook, twitter மற்றும் linkedin என்பவற்றை பின்தொடர்வதினூடாக இத்தளத்தில் உங்களால் இணைக்கப்பட்ட பதிவுகளை உங்கள் சமூகவலைத்தளங்களில் இணைக்கும்பணியையும் தானே செய்வதாகவும் இத்தளம் வித்தை காட்டுகிறது. இதன் மூலம் உங்கள் நேரத்தை கணிசமானளவுக்கு தன்னால் மிச்சப்படுத்தி தரமுடியுமாம்.

நான் எனது பதிவுகளை இணைத்து பார்த்ததில் இத்தளம் கூறும் விடயங்கள் உண்மையே.அதிக வாசகர்களை எனது பதிவு சென்றடைந்ததை நான் எனது சொந்த அனுபவத்தில் பெற்றுக்கொண்டேன்.

உங்களுக்கு வாசித்ததில் பிடித்த பதிவுகளை கூட இத்தளத்தில் நீங்கள் இணைக்கலாம்.

இத்தளத்தில் உள்ள குறைபாடுகளில் முக்கியமானது அதன் வடிவமைப்பு மேலும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. அடுத்து காப்பியடிக்கப்பட்ட பதிவுகள் இணைக்கப்படுவதையும் இத்தளம் தடுக்கவில்லை. மற்றும்படி பெரிய குறைகள் எதுவும் என்பார்வையில் இல்லை."அட்ராசக்க" போன்ற முக்கிய பதிவர்கள் தங்கள் பதிவுகளை இங்கே இணைத்துவருகின்றனர்.

முற்றிலும் இலவசமாக தனது சேவைகளை வழங்கும் இத்தளம் இலங்கைத்தமிழர் ஒருவருக்கு சொந்தமானது என நினைக்கிறேன். குறிப்பாக அந்நபர் "யாழ்மஞ்சு" என்ற பெயரில் அறியப்படுகிறார்.

இத்தளத்தில் உங்களை எழுத்தாளராக இணைக்க இந்த படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள். உங்கள் ஜிமெயில் முகவரியை மறக்காமல் குறிப்பிடுங்கள்.இதர தகவல்கள் நீங்கள் விரும்பினால் மட்டும் வழங்கலாம்.

நன்றி நண்பர்களே.
ஆக்கம்:ஆசான்





Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog