Saturday 1 June 2013

வாழ்த்துவோம் ! வணங்குவோம்!!



வாழ்த்துவோம் ! வணங்குவோம்!! சுந்தரபாணடியம் பிடிஒ கருப்பசாமி-பார்வதி தம்பதியரின் சதாபிசேக விழா விருதுநகர் மாவட்டம் -ஸ்ரீவில்லிபத்தூர் வட்டம் சுந்தரபாண்டியம் மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்களில். சுந்தரபாண்டியம் சாலியர் மூக வம்சா வழியில் முதல் பட்டதாரி ஆகி தான் பெற்ற கல்வியின் பயனை கற்றறிவு இல்லாதவ்ர்கள் எல்லோரும் பய்ன்பட வேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்டு. தான் பெற்ற வறுமை. க்ஸ்டங்களை வரும் சந்ததியர்களும் வம்சாவழியினிர்களும் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தில் தன்க்கு கிைட்த்த வாய்ப்பு தனது திறமை. பொருள் உதவி கள் வழங்கி, இன்றுவரை தன்னால் இயன்ற அளவில் முடியாது என்று மறுக்காத நிலையில், ஆடம்பரமற்ற உதவிகள் செய்து, அதனால் முன்னேறிய குடும்பங்களை கண்டு தானும் மகிந்து, இன்று 80 அகவை கடந்து சதாபிஷேக விழா காணும் " சுந்தரபாண்டியம் பட்டியாவீட்டு பிடிஒ கருப்பசாமி " என்ற புகழோடு சுந்தரபாண்டியத்திற்கு பெருமை சேர்த்து, ஏழுர் சாலியர் குலத்தில் ஆண்டிபட்டி என்றால் சடையாண்டி, ஸ்ரீவி என்றால் தரகனார் மற்றும் பிஏ கோவிநத்ன், புனல்வேலி என்றால் கிருஷ்ணமூப்பர்,சத்திரபட்டி என்றால் பண்ணையார் என்பது போல் சுந்தரபாண்டியம் என்றால் பிடிஒ கருப்பசாமி என்ற அளவிற்கு சுந்தரபாண்டியத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்த இம்மண்ணின் மைந்தர் உயர்திரு க,கருப்பசாமி - உமையாள்பார்வதி தம்பதியரின் 80 அகவை தாண்டி சதாபிஷே விஷா காணும் இம்மண்ணின் மைந்தரிடம் 3,6,2013 அன்று சுந்தரபாண்டியம் சாலியர் சமுதாய திருமண மண்டபத்தில் நடைபெறும் சதாபிஷேக விழாவில் நாமும் கலந்து அன்னாரை வாழ்த்தி , வணங்கி ஆசி பெறுவோம்.
இன்று 80 அகவை தாண்டி சதாபிஷேகம் காணும் மதிப்பிற்குரிய பெரியவர் திரு,பிடிஒ கருப்பசாமி அவர்களின் நற்குண்ங்களை இந்நாளில் நினைவுகொள்வது அன்னாரின் பெருமை சேர்ப்பதாகும், இளம் வயதில் மிகவும் ஏழை-வறுமை படிப்பறிவற்ற குடும்பத்தில் தோன்றியதால் தான் பெற்ற வறுமை, படிப்பறிவின்மை என்பது தங்களின் சந்ததியர்களுக்கு அறவே இருக்கக் கூடாது என அன்றே முழு முயற்சி,தன்னம்பிக்கை விடாமுயற்சி போன்ற எண்ணங்களின் சிந்தனையுடன் பேராடி சுந்தரபாண்டியம் நெசவாளர் - சாலியர் மக்களின் முத்லபட்டதாரியாகி,அரசுப்பணியில் சேர்ந்து, வெற்றி கண்டு தன் வறுமைக்கும், படிப்பறிவற்ற தனது குடும்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார், இளம் பருவத்தில் தொட்கக கல்வி கூட பள்ளி மூலம் தொடர முடியாத சூழ்நிலையில் தனியார் ஆசிரியர் ஒருவர் மூலம் இஎஸ்எல்சி என்ற 8வகுப்பு அரசு தேர்வு எழுதி அதன் பின் ஸ்ரீவி, சிஎம்எஸ் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பயின்று இன்டர் மிடிேய்ட மதுரை தியாகராஜா கல்லூரியில பயின்று பின் அங்கேயே பிஏ பட்டம் பெற்றார்,இவ்வாறு பள்ளி வாழ்க்கை தொடர இதுதான் வழி என வழிகாட்டல் வழியின்றி தானே தனக் கென்று வழிசெய்து தாய் தந்தையரின் குறைந்த வருவாய் பொருளாதார நிலையில் படிப்பதற்கென்று சரியான ஒளிவிளக்கோ இடவசதியோ இல்லாத சூழலில் அன்றைய வசதி கொண்ட தெறகுகீழ்த்தெருவிலுள்ள அழகு மூப்பனார் அவர்களின் வீட்டு மேல் மாடி வரண்டாவில் சிறிய மண்ணெண்ணை சிமினி விளக்குடன் தனது படிப்பு காலத்தை கழித்து வெற்றி கண்டார், அன்னார் கல்லூரி வாழ்க்கையில் இருந்த போதும் எளிய உடை எல்லோரிடமும் அன்பாக பழகும் தன்மை தனது வயதிற்கு குறைந்தவர்கள் பள்ளி படிப்பை முடிகக கையாளும - வழிகாட்டல் முயற்சி என்பது அன்றிலிருந்து இன்றுவரை மாறா தன்மை கொண்டது, அன்னாரின் உயர்ந்த பண்புகளை சீரிய நல்வழிகளையும் பெற அவர் குருவாகவும், நான் சிஷ்யனாகவும் அடைய இரண்டு வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது,அதை இன்றளவும் என்னால் மறக்கமுடியாது. அதில் ஒன்று நான் சுந்தரபாணடியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 5வது படிவம் (அதாவது 10ம்வகுப்பு)படிக்கும் போது எங்கள் பள்ளியில் எஙக்ள வகுப்பிற்கு ஆங்கிலப்பாடம் நடத்தும் துணை ஆசிரியராக பணியாற்றிய போது, அவரிடம் பயிலும் மாணவனாக இருந்த பெருமை எனக்கு சேரும், அன்னார் அன்றைய நாளில் பாடம் நடத்திய விதம் எல்லோரையும் ஆங்கிலப் பாடத்தின் மேல் கொண்ட பயம் விலகியது, 2வது முறையாக அன்னார் பஞ்சாயத்து யுனியன் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய காலத்தில் அன்னார் காரியபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகராக இருந்த போது நான் அங்கு வேளாண்மை பண்டகசாலையில் உதவி வேளாண்மை அலுவலராக பணியாற்றிய காலத்தில் அன்னரின் நிர்வாக கட்டுபாட்டில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து, அன்னார் காரியபட்டியில் பிடிஒ வாக பணியாற்றிய போது அன்னார் அருப்புககோட்டை கோட்டத்திற்கே கோட்ட வளர்ச்சி அலுவலராக நியமனம் செய்யப்பட்டார், பின் நானும் அக்கோட்டத்தில் அருப்புக்கோட்டையில் உதவி விதை அலுவலராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்து,அன்னார் உயர் அலுவலராக பணியாற்றிய போது சக பணியாளர்களிடம் தன் க்டடுப்பாட்டில் உள்ள பணியாள்ர்களிடமும் எப்போதும் அன்புடனும் அரவணைப்புபடனும் நேர்மை, காந்திய கொள்கையான சத்திய சமதர்ம கடமை உணர்வுடன் பணியாற்றிய சிறப்பு அன்னாரின் புகழுக்கு பெருமை சேர்ததது, அவர் சென்று பணியாற்றி ய இடமெல்லாம் சீரும் சிறப்பும் பெற்றவர் " ஊருனி நீர்நிறைத் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு, என்ற வள்ளுவர் வாக்கினுக்கிணங்க அன்னார் தான் பெற்ற கல்வி பயன் சுந்தரபாண்டியம் சாலிய வம்ச வழியினரும் அடைய வேண்டுெம்ன்ற தனியாத தாகத்தால் எங்கள் தெருவிலுள்ள இளம் வயதினரை அவர் கல்விக்காக வழிகாட்டிய நிகழ்வுகள் எங்களால் மற்கக முடியாது, அவரவர் வசதிக்கேற்ப என்ன படிப்பு எங்கு படிக்கலாம் என்ற வழிகாட்டும் தூண்டிதல் அன்னாருக்கேஉயரிய பண்பாக அமைந்தது, அதும்ட்டுமன்றி தன்னால் முடிந்த பொருள் உதவிகளும்செய்து அன்பு காட்டியுள்ளார், எஙக்கள் பகுதியில் வாசகசாலையுடன் இணைந்த பொது மண்டபம் கட்ட ஆலோசனை பெற அன்னாரிடம் சென்ற போது அன்னார் குடும்பமே தானே முன்வந்து மண்டபத்திற்காக பெரும் தொகை வழங்கி அன்னாரின் தாய்தந்தையரின் நினைவாக மண்டபம் கட்ட உதவி செய்தது அவருடைய ஈகை குணத்தை தெள்ளத தெளிவாக காட்டும், அது ம்டடுமன்றி அன்னார் இன்று வரை பணியாற்றும் கலசலிங்கம் பல்கலையில் உயர் கல்விக்காக செல்லும் ஏழை எளிய விபரமற்ற மாணவர்களுக்கு உகந்த துறையினை எடுத்துக் கூறி படிப்பதற்கும் கல்வி வள்ளல் அவர்களிடம் அறிமுகப்படுத்தியும்,குறைந்த நன்கொடையில் சேர்த்து அவர்களை சிறந்த பட்டதாரிகளாக ஆக்கிய பெருமை அவருக்கேசேரும், மேலும் உடலால், உழைப்பால் இயலாதருக்கு வயதான முதியோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை இன்றளவும் செய்து வருகிறார், நெசவு தொழில் நலிவடைந்த போது கல்வி தந்தையிடம் நேரிடையாக கூறி பல்கலை கல்லூரிகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தந்துள்ளார் அய்யா அவர்கள் சிறந்த பகுத்தறிவு சிந்தனையாளர் எழுத்தாசியர் தன்னை கொண்டவர், அன்னார் தன் இளமைப்பருவத்திலேயே எழுத்தாளாராக இருந்தவர் தன்னுடைய மைத்துனர் ஆா,வி,பி, கரிகாலன் அவர்கள் நடத்திய திரைமுழக்கம் என்ற திங்கள் இதழில் எழுதிய பெருமை படைத்தவர், அன்னார் இன்றளவும் இதனை தொடர்ந்து வருகிறார் நம் கல்வி வள்ளலின் சாலியர் குரலில் இன்றளவும் அன்னாரின் சிற்ந்த க்டடுரைகளை காணலாம்,அப்பணி இனறும் தொடர்கிறது, அதும்ட்டுமன்றி பெரியாரின் முற்போக்கு சிந்தனையாளர், சுயமரியாதை சிந்தனையில் மிகுந்த நாட்டம் உள்ளவர் தன்னுடைய திருமணத்தை அக்காலத்திலேயே ஆன்மீக முறைப்படி நடப்பதை தவிர்த்து புரோகிதர்,ஒதுவார்கள் இல்லாமல் கட்டிமேளம் சடங்கு சாஸ்திர முறைகள் இல்லாமல் பேராசிரியர் தலைமையில்,பெரியோர்கள் முன்னிலையில் மேடை நிகழ்ச்சியாக மணமக்கள் மாலை மாற்றும் முறையில் திருமணத்தை நடத்தி சீர்திருத்த முறை கல்யாணமாக ஆக்கி சீர்திருத்த சிந்தனையாளர், முற்போக்கு கருத்தில் தீவிர சிந்தனை இருந்தாலும் ஊர் நடைமுறை பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப தெய்வீக காரியங்களுக்கும் மரியாதை கொடுப்பவர், கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்க்ல் தெய்வீக நிகழ்வுகளில் ஊரார் உறறார் மனம் சுழியாது அதற்கேற்ப பங்கு கொள்ளும் தன்மை கொண்டவர், பொது வாழ்வு மற்றுமன்றி தனது சொந்த வாழ்விலும் தனது வாரிசுகளை வளமுடன் வாழச் செய்தவர், "தந்தை மகற்காட்டும் நன்றி அவையத்து முந்தி இருப்பச செயல்" என்ற வள்ளுவன் வாக்கிணங்க தனது புதல்வர்கள் புதல்விகளை நன் முறையில் ஏனையோருக்கு எடுத்துக்காட்டாக விளங்கச் செய்தவர், அதற்கொப்ப அன்னர் புதல்வ மக்களும் " மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவண்தந்தை என்றோற்றான் கொல் " என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க அன்னாரின் மக்களும் இன்று கல்வி தொழில் பதவிகளில் உயர்ந்து குன்றின்மேல்இட்ட தீபமாக திகழ்கின்றனர், எனவே அன்னார் தற்போதும் எந்த கவலையும் இன்றி சேவை மனபான்மையில பணியுடன் அமாந்த பணியை இன்னும் செய்து கொண்டு சிற்ப்புடன் வாழ்ந்து வருகிறார், அன்னார் இன்னும் நுாறு அகவை தாண்டி நூற்றாண்டு விழா கொண்டாடும் வாய்ப்பினை அளிக்க ஆண்டவனை வேண்டி நாமும் அன்னாரிடம் ஆசிபெற்று நாமும் சிறக்க, அவரும் சிறக்க ஆசி பெறுவோம், இவண்: வை, பூமாலை சுந்தரபாண்டியம்


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog