Monday 17 June 2013

பழைய தகவலாக இருந்தாலும் தேடி எடுத்துக் கொடு - மைய தகவல் ஆணையம்.


மரண தண்டனை விதிக்கப்பட்டு அது பின்னிட்டு குடியரசுத் தலைவரால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட தண்டனை கைதிகளின் பதிவேடுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிப்படுத்து வதற்காக, 1970-ஆம் ஆண்டு முதல் தேடி எடுக்கும்படி அரசுக்கு மைய தகவல் ஆணையம் இம்மாதம் 14-ஆம் தேதி ஆணையிட்டுள்ளது.

முன்னதாக அத்தகு பதிவேடுகள் தங்களிடம் 1981-ஆம் ஆண்டு முதல்தான் உள்ளது என்றும், எனவே 1970-ஆம் ஆண்டிலிருந்து அப்பதிவேடுகளை வெளிப்படுத்துவது என்பது இயலாது என்றும் அரசு செய்த வாதத்தை மைய தகவல் ஆணையம் நிராகரித்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிப்படுத்துவதற்குரிய தகவலான அப்பதிவேடுகளை அரசு தேடி எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு தேடி எடுக்க முடியாத அளவிற்கு அவை ஒன்றும் பழையதல்ல என்றும் மைய தகவல் ஆணையம்  தனது ஆணையில் கூறியது.

ஆக்ரா மைய சிறைச் சாலையில் கடந்த 17 ஆண்டுகளாக அடைத்து வைக்கப் பட்டிருக்கும் ஆயுள் தண்டனைக் கைதி நரேந்தர் என்பவருக்கு அப்பதி வேடுகளை வழங்கும்படி உள் விவகாரங்கள் அமைச்சகத்திற்கு (MHA) தகவல் ஆணையர் திருமதி சுஷ்மா சிங் தனது ஆணையில் ஏவுரைத்துள்ளார்.


Mrs. Sushma Singh, Information Commissioner, CIC.

குடியரசுத் தலைவரின் செயலகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நரேந்தர் அனுப்பிய மனுவில்  மரண தண்டனை விதிக்கப்பட்டு அது கருணை மனுவின் அடிப்படையில் குடியரசுத் தலைவரால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட தண்டனைக்  கைதிகளின் பட்டியலையும், அதற்கான ஆணைகளின் நகல்களையும் 1970-ஆம் ஆண்டு முதல் தனக்கு வழங்கும்படி கேட்டிருந்தார்.

இந்த மனுவை குடியரசுத் தலைவரின் செயலகம் தகவல் வழங்குவதற்காக உள் விவகாரங்கள் அமைச்சகத்திற்கு மாற்றி அனுப்பியது. அது மனுதாரர் நரேந்தர் கோரும் தகவல் விவரங்கள் தங்களிடம் 1981-ஆம் ஆண்டிலிருந்து தான் உள்ளது என்றும், நகல் கட்டணம் ரூ.22 செலுத்துவதன் பேரில் அவற்றை நரேந்தருக்கு வழங்கலாம் என்றும் அவரது மனுவின் மீது முடிவு தெரிவித்தது.

உள் விவகாரங்கள் அமைச்சகத்தின் மைய பொதுத் தகவல் அலுவலரின்   (CPIO)  இந்த முடிவால் குறையுற்ற நரேந்தர், தான் கோரும் தகவலை தனக்கு செலவுத் தொகையின்றி இலவசமாக வழங்க வேண்டும் என்று மேல்முறை யீட்டு அதிகார அமைப்பிடம்  (Appellate Authority) முறையிட்டார். ஆனால் 'வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர் அட்டையை' (BPL Card) வைத்திருக் கும் மனுதாரர்களுக்கு மட்டுமே இலவசமாக தகவல் வழங்கப்படும் என்று கூறி, நரேந்தரின் வாதத்தை மேல்முறையீட்டு அதிகார அமைப்பு நிராகரித்து விட்டது.

உள் விவகாரங்கள் அமைச்சகத்தின் மைய பொது தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பு வழங்கிய இந்த முடிவுகளை எதிர்த்து நரேந்தர் மைய தகவல் ஆணையத்திடம் இரண்டாம் மேல்முறையீடு செய்தார். அதில் முன்னதாக தனது மனுவில் கூறியிருந்த அதே கோரிக்கைகளை முன் வைத்து, தனக்கு முழுமையான தகவல்களை வழங்கும்படி உள் விவகாரங்கள் அமைச்சகத்திற்கு ஏவுரைக்கும்படியும், தான் நகல் கட்டணங்களை செலுத்த தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரண்டாம் மேல்முறையீடு மைய தகவல் ஆணையத்தின் முன் பரிசீலனைக்கு வந்த போது, நரேந்தரின் வாதத்தை அது ஏற்றுக் கொண்டு,"மேல்முறையீட்டாளர் கோரும் தகவல்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிப்படுத்தக்கூடிய தகவல்கள் ஆகும் என்றும், அவற்றை தேடி எடுத்து தர முடியாத அளவிற்கு அவை ஒன்றும் பழைய தல்ல என்றும்," கருத்துரைத்தது.

முடிவாக நரேந்தர் கோரும் பதிவேடுகளை ஆணை கிடைக்கப் பெற்ற தேதியிலிருந்து  4 வாரங்களுக்குள் அவருக்கு செலவுத் தொகையின்றி  வழங்க வேண்டும் என்று உள் விவகாரங்கள் அமைச்சகத்திற்கு ஆணையிட் டது.

நரேந்தரின் வாதத்தை மைய தகவல் ஆணையம்  'காணொளி கூட்டுரை யாடல்' (வீடியோ கான்ஃபரன்சிங்) வாயிலாக கேட்டறிந்தது.

பின்வரும் இணைப்பின் மீது சொடுக்கினால் ஆணையின் முழு வடிவம் கிடைக்கும். 


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog