Monday 3 June 2013

தனுஷ் புகழ் பாடும் கோலிவுட் ஹீரோக்கள்!

Kollywood heros praises dhanush
ஆள் பார்ப்பதற்கு சுள்ளானாட்டம் இருந்தபோதும், சண்டை காட்சிகளில் கைக்கு பத்து பேரை பந்தாடும் கலாச்சாரத்தை விடவில்லை தனுஷ். தனது மைனஸைகூட ப்ளஸ் ஆக்கும் விதத்தில் துணிச்சலாக நடித்தார். குறிப்பாக, கதாபாத்திரங்களை உள்வாங்கி நடிக்கும் தனுஷ்,  எந்த மாதிரி கேரக்டர் என்றாலும் அதுவாகவே தன்னை மாற்றிக்கொள்ளக்கூடியவரும்கூட. விளைவு இப்போது தனுஷை சிறந்த நடிகர் என்று ஆளாலுக்கு புகழ்ந்து தள்ளும் நிலைமை கோலிவுட்டில் உருவாகியிருக்கிறது. 

அதனால்தான், கடந்த மாதத்தில் ஒரு விழாவில், சிறந்த நடிகருக்கான விருது பெற வந்திருந்த விஜய்,  தனக்கு எதிரே அமர்ந்திருந்த தனுஷை சுட்டிக்காட்டி இந்த விருது தனுஷ் மாதிரி நடிகர்களுக்கு கொடுக்க வேண்டியது. காரணம், என்னைவிட அவர் சிறந்த நடிகர் என்று அத்தனை பேர் முன்னிலையில் சொன்னார். தமிழில் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கும் விஜய்யே இப்படி சொன்னதால், இதுவரை தனுஷை ஒரு ஹீரோவாகவே அங்கீகரிக்காத நடிகர்கள்கூட இப்போது அவர் அவ்வளவு திறமையான நடிகரா? என்று தனுஷ் நடித்த படங்களை ரீவைனட் பண்ணத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இதுவரை தனுஷை தனது போட்டியாளராக நினைத்த சிம்பு கூட இப்போது அவரை நட்பு கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கிவிட்டார். இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வது. பழைய பள்ளிக்கூட கதைகளை பேசியபடி தோள் போட்டுக்கொண்டு நடக்கிறார்கள். தனுசுக்கு கிடைத்த இந்த பெருமையெல்லாம் விஜய், அவரை பாராட்டியபிறகுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:தினமலர்


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog