Sunday, 21 July 2013

அமெரிக்காவின் ஆட்டோ மொபைல் தொழில் துறை???

ஆட்டோ மொபைல் தொழில் துறையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமாக இருந்து வந்த மிச்சிகனின் மாகாணத்தின் டெட்ராய்ட் என்ற தொழில் நகரம் திவாலானதாக அறிவிக்கக் கோரி மிச்சிகன் மாகாண ஆளுநர் சார்பாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்து நீதிபதி ரோஸ்மேரி அக்விலினா, இந்த மனு சட்டவிரோதமானது, இது ஓய்வூதியதாரர்களை மிரட்டும் நடவடிக்கையாகும்.

 எனவே திவாலனதாக அறிவிக்கக் கோரும் மனுவை மாகாண அரசு திரும்பப் பெற வேண்டும் என உத்தரவிட்டார்.
அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் தொழில் நகரமாக மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரம் விளங்கி வந்தது.
suran

உலக அளவில் ஆட்டோ மொபைல் தொழிலில் சிறந்து விளங்கி வந்த இந்த நகரம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு வசித்த 2 லட்சம் பேரில், ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் இந்த நகரத்தை விட்டு வெளியேறி மாற்று இடங்களை தேடிச்சென்று விட்டனர். தற்போது 70 ஆயிரம் பேர் மட்டுமே குடியிருந்து வருகின்றனர். அரசின் பொதுச்சேவைகள் முற்றிலும் செயலிழந்து இருக்கிறது.
 நகரத்தில் இருந்து 78 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
 கடந்த பத்தாண்டுகளாகவே இந்த நகரம் மிகப்பெரிய பொருளதார நெருக்கடியில் சிக்கி சரிவை சந்தித்து வந்தது. இதனை மீட்பதற்காக அமெரிக்கா அரசு பல்வேறு மீட்புத் திட்டங்களை அறிவித்து நிதி உதவி வழங்கி வந்தது. இருந்து போதிலும், அந்நகரம் முழுமையாக மீளவில்லை.
இதனால் தற்போது டெட்ராய்ட் நகரத்தில் உள்ள அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதியைக்கூட பாதுகாக்க முடியாமல் அந்நகர நிர்வாகம் திணறி வருகிறது. அந்நகரம் சுமார் 1800 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு கடனில் மூழ்கியிருக்கிறது. இதில் ஓய்வூதியர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை மட்டும் 900 கோடி அமெரிக்க டாலர் ஆகும்.
இந்த நெருக்கடியின் காரணமாக நகர நிர்வாகம் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க முடியாமல் அந்நகரம் திணறி வருகிறது.இந்நிலையில் கடன்காரர்களுக்கு கடனை திருப்பித் தரும் நடவடிக்கை நகரத்தின் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டது. பின்னர் கடன் திருப்பிச் செலுத்தவேண்டியவர்களை அழைத்து அவசாரகால மேலாளர் கெவியன் ஓர் கடந்த மாதம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதில் ஒரு டாலருக்கு 10 சென்ட் என்ற அடிப்படையில் மட்டுமே தற்போதைய நிலவரத்தில் கடனை திருப்பி செலுத்த முடியும். இதனை அரசு நிர்வாகத்தில் இருந்து பணம் பெற வேண்டியவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதற்கு இரண்டு ஓய்வூதிய திட்டங்களின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்நிலையில், டெட்ராய்ட் நகரத்தின் தற்போதைய நிலையில் இருந்து தக்க வைத்துக் கொள்ள, நகரம் திவாலானதாக அறிவிக்கக் கோருவதை தவிர வேறு வழியில்லை என கெவியன்ஓர் தெரிவித்ததோடு, பெடரல் நீதிமன்றத்தில் திவாலானதாக அறிவிக்கக் கோரி ஓர் மனுவை வெள்ளியன்று தாக்கல் செய்தார். அதில் நகரம் அதிக அளவில் கடனில் மூழ்கியிருக்கும் நகராக அறிவிக்க வேண்டும். அதன் மூலம் தற்போது ஓய்வூதியர்களுக்கு அரசு வழங்க வேண்டிய தொகை, மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவற்றை அரசின் சொத்துக்களை விற்று செலுத்த அனுமதிக்க வேண்டும் என்ற வகையில் கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த மெச்சிகன் பெடரல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்மேரி அக்விலினா இந்த மனு சட்டவிரோதமானது.
suran
இது ஓய்வூதியர்களை மிரட்டும் நடவடிக்கையாக அமையும். எனவே தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மிச்சிகன் மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து மிச்சிகன் மாகாண ஆளுநர் ரிக் ஸ்டைர் தெரிவித்திருப்பதாவது: அவசர காலத்து மேலாளர் கெவியன்ஓர் திவால் அறிவிப்பை நீதிமன்றத்தில் இருந்து விரைவில் பெற்று வருவார்.
அதன் பின்னர் அரசின் சொத்துக்களை விற்று அதில் கிடைக்கும் பணம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்படும். நகரத்தின் தற்போதைய நிலையில் இருந்து வேறுபட்ட நிலையில், அடிப்படையில் இருந்து மறு கட்டுமானத்தை நிறுவ வேண்டும். அதற்கு சிரமங்களை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
தற்போதைய அவசர நிதிதேவையை பூர்த்தி செய்ய திவாலானதை அங்கீகரித்து எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் அமிப்ருன்டேஜ் தெரிவித்திருப்பதாவது, டெட்ராய்ட் நகர நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். டெட்ராய்ட் நகர நிர்வாகத்தில் இருந்து பணம் பெறவேண்டியவர்கள் நகரத்தின் மிகத்தீவிரமான நிதிபற்றாக்குறை பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டும். நகரத்தின் மீட்புக்கு வெள்ளை மாளிகை முடிந்த அளவு உதவி செய்யும், டெட்ராய்ட் நிர்வாகத்திற்கு முழுமையாக துணை நிற்கும்.
suran
 அதன் மூலம் டெட்ராய்ட் நகரை அமெரிக்காவின் மிக முக்கிய நகரமாக மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் வெள்ளை மாளிகை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 அமெரிக்காவின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி இந்தியாவை இழுத்துச்செல்லும் மன்மோகன்-ப.சி,கூட்டம் இதை எல்லாம் கணக்கில் கொள்ளவில்லையா?கண்க்கில் எடுத்துக்கொள்ளவும் மாட்டார்கள்.அவர்கள் பணியே அமேரிக்கா சொல்வதை அப்படியே எற்றுக்கொள்வதுதான்.இறங்கிய டாலரின் மதிப்பை எற்றத்தானெ இந்தியாவில் பெட்ரோலிய விலையை 10நாட்களுக்கு ஒருமுறை எற்றி விலைவாசிகளை பார்க்க வைத்து ரூபாயின் மதிப்பை இறங்க வைத்தது அமரிக்கா.
11ஆண்டுகள் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரபுலிகள் ஆட்சியில் இருந்தும் பணத்தின் மதிப்பு சரிந்து -பண வீக்கம்தான் அதிகரித்துள்ளது.அதை மன்மோகன் சிங்கே திறவா தன் வாயை திறந்து ஒப்புக்கொண்டு பயமில்லை என்று கூடவே அருள்வாக்கும் தந்துள்ளார்.
இதற்கு காரணம் என்.எல்.சி .பங்குகளை விற்காததுதான் .அதனால்தான் பணத்தின் மதிப்பு இறங்கி விட்டது என்றும் கூட சொல்வார்.ப.சி.க்கும்சொனியா,மன்மோகனுக்கும் பொருளாதர சீர்திருத்தம் என்றாலே லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கும் ,அந்நிய ர்களுக்கும் விற்று தீர்ப்பதுதான் .
இப்போது என்.எல்.சி.பங்குகளை தனியார்க்கு விற்பதை துத்திய பெருமை தனக்கும்,தனது தலைமையிலான ஆட்சிக்கும்தான் என்று முதல்வர் ஜெயலலிதா சொல்லிவருகிறார்.அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும் வருகிறார்கள்.இடதுகளும் குறிப்பாக தாபா.பரணி பாடி வருகிறார்.
ஆனால் வெற்றி பெற்றது என்.எல்.சி. தொழிலாளர்களோ,ஜெயலலிதாவோ அல்ல.
>>>>>>>மன்மோகன் சிங் காங்கிரசு அரசுதான்.>>>>>>>>>>


Related Article:

0 கருத்துரைகள்:பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog