Friday, 2 August 2013

மென்பொருள் அறிமுகம்.


இணையத்தளங்களில் உள்ள வீடியோவை சுலபமாக தரவிறக்கம் செய்யவும் கொன்வேர்ட் செய்யவும்  உதவும் மென்பொருள்.
கணிணி மற்றும் இணையத்தளங்கள் பற்றி ஒருவன் கொண்டுள்ள அறிவு அவனது ஏழாம் அறிவு என்று சொல்லுமளவுக்கு அவற்றின் தேவையும் பயன்பாடும் மனிதவாழ்விலிருந்து பிரிக்கமுடியாத நிலையை எட்டியுள்ளன. இணையத்தின் ஆதிக்கத்துக்குள் சிக்குண்டு சுற்றிச் சுழலும் இந்த உலகில் வாழும் நாம் இணையத்தளங்களை விட்டு தூர ஒதுங்கியிருப்போமானால் எம்மை தீண்டத்தகாத ஆறறிவு கொண்ட பிராணிகளாக அடுத்துவரும் தலைமுறைகள் பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சரி விசயத்துக்குள் நுழைவோம். இணையத்தளங்களிள் உலாவும்போது பலவகையான வீடியோக்களை  நீங்கள் தினமும் பார்க்கிறீர்கள். குறிப்பாக சமூகவலைத்ததளங்களில் தரவேற்றப்படும் உங்கள் உறவுகளின் வீடியோக்கள் கல்விசம்பந்தமான விளக்கங்கள் அடங்கிய வீடியோக்களென எதுவானாலும் சரி அவற்றை இணையத்தில் இணைந்திருக்கும்போது உங்களால் சுலபமாக பார்த்திடமுடியும்.ஆனால் இணைய இணைப்பு கிடைக்காத போது அல்லது பிறிதொரு தேவையின்பொருட்டு அந்த வீடியோக்களை மீளவும் பயன்படுத்தவிரும்பின் அவற்றை தரவிறக்கி வைத்துக்கொள்ளவே விரும்புவீர்கள். ஆனால் பலதளங்களில்  தரவிறக்கவசதி நேரடியாக தரப்படுவதில்லை.
வீடியோக்களை இணையத்தளங்களில் இருந்து தரவிறக்க பலவழிகள் உள்ளது. அவற்றை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
முதல்வழி உங்களில் பலர் அறிந்திருக்ககூடியது. Youtube தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க Youtube Downloader மென்பொருளை உபயோகிப்பது.
இரண்டாவதுவழி உலாவிகளுடன் இணைந்துவரும் add-on களை உபயோகிப்பது.
மூன்றாவதுவழி நீங்கள் தரவிறக்க நினைக்கும் வீடியோவின் URL க்கு முன்னால் ss ஐ சேர்த்து தரவிறக்கும்முறை.
மேற்சொன்ன மூன்றுவழிகளும் குறிப்பிட்ட சில இணையத்தளங்களிற்கு  மட்டுமே உபயோகப்படும். குறிப்பாக Youtube தளத்தை மையப்படுத்தியவை. Youtube தளம் தவிர்ந்த மற்றைய தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்க மேற்குறிப்பிட்ட வழிகள் உதவாது.
நான் இங்கு அறிமுகப்படுத்தும் மென்பொருள் 10000 க்கு மேற்பட்ட தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்க உங்களுக்கு உதவக்கூடியது. இதன்பெயர் Freemake video converter. இலவசமானது. பயன்படுத்துவதும் இலகுவானது.
முதலில் http://www.freemake.com/free_video_converter/  என்ற URL முகவரிக்கு சென்று குறித்த மென்பொருளை தரவிறக்கிகொள்ளுங்கள். இதன் installer ஏறக்குறைய 1.2MB அளவுடையது.
நிறுவும்போது உங்கள் மொழியை தெரிவுசெய்வதுடன் உங்களை freemake தளத்திற்கு anonymous ஆக அடையாளப்படுத்தவிரும்பின் அதற்கு முன்னால் உள்ள Box ல் tick செய்து கொள்ளலாம். இந்த மென்பொருள் 28.34MB அளவுடையது.
இதன் செயற்பாட்டுக்கு Microsoft Net framework 4.0 உங்கள் கணிணியில் இருத்தல் அவசியம் என்பதனால் அதனையும் இதனை நிறுவும்போது சேர்த்து நிறுவக்கூடியதாக வசதிசெய்துள்ளனர் இம்மென்பொருளின் வடிவமைப்பாளர்கள்.
Custom install வசதியை தெரிவுசெய்வதனூடாக உங்களுக்கு வேண்டாத இம்மென்பொருளின் ஏனைய இணைப்புக்களை(உதாரணம் Passwordbox add-on) நிறுவாமல்விடலாம்.
இம்மென்பொருள் நிறுவிமுடிந்ததும் உங்கள் கணிணியை Restart செய்ய மறக்கவேண்டாம்.இதன் இடைமுகம் பின்வருமாறு அமையும்.
http://images.pcworld.com/images/article/2011/12/freemake_video_converter-2011-12-20_13.40.09-6787862.jpg
இடைமுகத்தை பார்த்ததுமே இதில் உள்ள வசதிகள் உங்களுக்கு புரிந்திருக்கும். Menu bar க்கு கீழே உள்ள பொத்தான்கள் உங்களிடம் உள்ள File களை இணைக்க உதவும் பொத்தான்கள்.
அதில் கடைசியில் உள்ள Paste URL பொத்தான் inactive நிலையில் இருப்பதை அவதானியுங்கள். இதனை active நிலைக்கு கொண்டுவர நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.
நீங்கள் தரவிறக்கபோகும் வீடியோவின் URL ஐ select செய்து copy பண்ணினால் போதும் .அந்த பொத்தான் active நிலைக்குவரும். தற்போது active நிலைக்குவந்த பொத்தானை ஒருமுறை சுட்டுங்கள். இவ்வாறு சுட்டியவுடன் இம்மென்பொருள் தானாகவே நீங்கள் தரவிறக்கபோகும் வீடியோவின் URL ஐ தனது இடைமுகத்தில் இணைத்துவிடும்.
இறுதியில் கீழ்வரிசை பொத்தான்களை பாருங்கள். அவையே உங்களுக்கு தேவையான வடிவில் file களை convert செய்ய உதவுபவை. அதில் உங்களுக்கு வேண்டிய File format ஐ தெரிவுசெய்யலாம். உங்களது போன்களுக்கு வேண்டியவகையில் கூட convert செய்யலாம். convert செய்யும்போது பின்வரும் இடைமுகங்கள் கிடைக்கும்.
http://www.freemake.com/images/steps/cutvideo3.jpg
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTSL6tozgkwkNw3loJ-WOD3HBzWaoWpTdCsqgmIqgT2hBGP0Xy9xA
மிகவேகமாக convert நடப்பதால் அதிகநேரம் காத்திருக்கவேண்டியதில்லை. வீடியோக்களை மட்டுமல்லாது Audio மற்றும் Photo என்பவற்றைகூட இம்மென்பொருள் பாவித்து convert செய்யலாமென்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.
ஆக்கம். சூ.குணசாந்தன்
BIT மாணவன்
கொழும்பு பல்கலைக்கழகம்.
தொடர்புகளுக்கு: 0771708339Related Article:

0 கருத்துரைகள்:பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog