Friday, 9 August 2013

தமிழ்ப் பையனைக் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்! - லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்... தமிழ் சினிமா இயக்குநர்களின் முதல் தேர்வாக உள்ள நடிகைகளில் இவரும் ஒருவர். சுந்தர பாண்டியன், கும்கி என அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் நாயகி என்பதால், அதிர்ஷ்ட நாயகி என்ற அந்தஸ்தையும் பெற்றுவிட்டார். அழகு, திறமை, நல்ல தமிழ் உச்சரிப்பு என அனைத்துத் தகுதிகளும் நிறைந்த லட்சுமி மேனன், சித்திரை திருநாளுக்காக நமக்களித்த சிறப்புப் பேட்டி. சுந்தரபாண்டியன், கும்கி என இரண்டு பெரிய வெற்றிப் படங்கள். இந்த வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்? இது நான் எதிர்ப்பார்க்காத ஒரு அந்தஸ்து. கடவுள் ஆசீர்வாதத்தால்தான் இத்தனை பெரிய வெற்றிப் படங்களில் நான் நடிக்க முடிஞ்சதுன்னு நினைக்கிறேன். இத்தனைக்கும் நான் கதை கேட்கல, ஹீரோ யாருன்னு பார்க்கல... மைனா படம் பண்ண பிரபு சாலமன் படம்னு மட்டும்தான் தெரியும். அப்போ நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். நல்ல இயக்குநர்கிட்ட போயிருக்கேன்னு சந்தோஷமா நடிச்சேன். அது பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து சுந்தர பாண்டியனும் அப்படித்தான். அந்தப் படத்துக்கும் நான் கதை கேட்கல. சசிகுமார் படம். நடிச்சேன். அதுவும் நல்லா வந்துருச்சி. தமிழ் உச்சரிப்பு இத்தனை சுத்தமா உங்களுக்கு வருதே... எப்படி? எல்லாருமே என்கிட்ட கேக்குற கேள்வி இது. அது எப்படின்னெல்லாம் தெரியல... தமிழ் எனக்கு நல்லா பேச வரும். இத்தனைக்கும் நான் தமிழ் கத்துக்கல. ஆனா தமிழ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசிலேர்ந்தே நான் தமிழ்ப் படங்கள்தான் விரும்பிப் பார்ப்பேன். மலையாளப் படம் பத்தி ஏதாவது கேட்டா கூட எனக்கு தெரியாது. ஆனா தமிழ்ல எந்தப் படம் பத்திக் கேட்டாலும் சொல்வேன். என்னென்ன படம் இப்போ ஷூட்டிங் போகுதுன்னுகூட சொல்வேன். நீங்க குடும்பப் பாங்கான நடிகையா இருக்க விரும்பறீங்களா... அல்லது க்ளாமரா இருக்க ஆசையா? அப்படி எதுக்கு முத்திரை குத்திக்கணும்... எனக்கு எல்லா மாதிரி கேரக்டர்களையும் பண்ண ஆசை. விதவிதமான கேரக்டர்களையும் செ்சு பார்க்க ஆசைப்படறேன். கதைக்கு என்ன தேவையோ அதை செய்ய தயாரா இருக்கேன். ஒரே மாதிரி பண்ணிட்டிருந்தா எனக்கும் போரடிக்கும், பார்க்கிறவர்களுக்கும் போரடிக்கும். இப்பக்கூட என்னை நிறைய பேர், 'நீங்க குடும்பப் பாங்காதான் நடிப்பீங்களா,'ன்னு கேக்கறாங்க. அப்படியில்ல... எனக்கு அழகா, க்யூட்டா க்ளாமர் பண்ண பிடிக்கும். வல்கரா பண்ணமாட்டேன். கவுதம் கார்த்திக்கோட சிப்பாய்னு ஒரு படம் பண்றேன். அதில் என் கேரக்டர் ரொம்ப வித்தியாசமா இருக்கும். விமல் கூட மஞ்சப்பை படம் பண்றேன். அதில் எனக்கு நகரத்துப் பெண் வேடம். தமிழ்லதான் முதலில் அறிமுகமா அல்லது மலையாளத்தில் நடிச்சிருக்கீங்களா? மலையாளத்துல இரண்டு படங்கள் பண்ணிட்டுதான் இங்க வந்தேன். வினயன் சார்தான் என்னை முதல்ல அறிமுகப்படுத்தினார். ரகுவண்டே ஸ்வந்தம் ரஸியா. அடுத்து ஐடியல் கப்பிள்-னு ஒரு படம் பண்ணேன். இரண்டுமே சரியா போகல. அதென்னமோ மலையாளம் எனக்கு ராசியா இல்லா. தமிழ்லதான்! உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ யார்.. தப்பிக்க முயற்சிக்காம நேரடியா சொல்லுங்க! அப்படியில்ல.. நான் பள்ளியில படிக்கிறப்பவே பயங்கர சூர்யா ரசிகை. பொதுவா பொண்ணுங்களுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி எனக்கு ரஜினி சார் ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும். அவரோட படையப்பாவை நிறைய முறை பார்த்திருக்கேன். இப்போ நடிகையான பிறகு நான் எல்லாவற்றையுமே பார்க்க வேண்டி இருக்கு. எனக்கு அஜீத் படமும் பிடிக்கும். மங்காத்தாவுல அவர் மாதிரி யாராலும் நடிக்க முடியாது. ஆனா நீங்க கேக்கறதால சொல்றேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச ஹீரோ சூர்யா. நடிகையாத்தான் வரணும் என்று ஏதும் கனவு, லட்சியம் இருந்ததா? இல்லை. நான் நடிகையாவேன்னு நினைக்கவே இல்லை. நல்லா படிக்கணும், ஐஏஎஸ் எழுதணும்னெல்லாம் ஆசைப்பட்டேன். ஆனால் அதுக்காக நான் நம்பர் ஒன் மாணவி அப்படியெல்லாம் சொல்லிக்கல. நான் ஆவரேஜ்தான். ஆனால் நடிக்க வாய்ப்பு வந்தது. கும்கி பண்ணும்போதுதான் நடிப்பு மேல போதையாகிடுச்சி. ஒரு பத்தாம் வகுப்பு மாணவியா சுதந்திரமா இருந்தீங்க. இப்போ நடிகையா மத்தவங்க அதிகாரம் பண்ற நிலைமை. இதை எப்படி எடுத்துக்கறீங்க... நான் இரண்டையுமே ஜாலியா அனுபவிக்கிறேன். ஏன்னா நான் இப்பவும் படிச்சிக்கிட்டிருக்கேன். கேரளாவிலெல்லாம் என்னை யாருக்கும் தெரியாது. அங்கே ஜாலியா இருக்கேன். அதேபோல நடிப்பையும் தொடர்கிறேன். எனக்கு கடைசி வரை படிக்கணும் என்ற ஆசை இருக்கு. மலையாளத்தில் நடிப்பீங்களா? நிறைய பேர் கேட்டுக்கிட்டிருக்காங்க... ஆனால் நான் தமிழுக்குதான் முதலிடம் தருவேன். இங்கதான் என்னை இந்த அளவு கொண்டு வந்திருக்காங்க. அதனால தமிழுக்குதான் முதலிடம். அப்புறம்தான் மலையாளம். அதை பிறகு பாரத்துக் கொள்ளலாம். உங்களால் மறக்க முடியாத ரசிகர்? இங்க நிறையபேர் என்னை ரொம்ப விசேஷமா பார்த்துக்கறாங்க. வெளில போனால் நிறைய பேர் என்னை தேடி வந்து பேசறதெல்லாம் ரொம்பப் பிடிக்கும். சமீபத்தில கூட ஒரு ரசிகர் என்கிட்ட வந்து, நீங்க ரொம்ப ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்கன்னு சொல்லும்போதே, அவர் கண்ணில் அன்பை பார்க்க முடிஞ்சது. கேரளாவிலெல்லாம் இப்படி பார்க்க முடியாது. அவர்கள் கண்டுக்கவே மாட்டாங்க. இங்க ரசிகர்கள் இத்தனை அன்பா இருக்காங்க... மத்தபடி பேஸ்புக்ல எல்லாம் என் பேர்ல நிறைய போலி கணக்கு இருக்கு. ஆனா அதை நான் தப்பா எடுத்துக்கல. அதுவும் ஒரு வகையான அன்பா எடுத்துக்கறேன். உங்களை எந்தப் பையனாவது பஸ்ஸில் துரத்திய அனுபவம் உண்டா? அதெல்லாம் இல்லை. ஆனால் முதல் காதல் உண்டு. அது விராட் கோஹ்லி. அவரை யார் லவ் பண்றதுண்ணு எங்க ப்ரென்ட்ஸ் மத்தில சண்டையே நடக்கும். உங்க பெஸ்ட் ப்ரண்ட் யாரு? அனந்த கிருஷ்ணன். அவன்தான் என் பெஸ்ட் பிரண்ட். சினிமாவில் யாரை ரோல் மாடல்னு நினைக்கிறீங்க? யாரும் இல்லை. நான் எனக்குன்னு ஒரு அடையாளம் வேணும்னு நினைக்கிறேன். என்னை யாராவது ரோல் மாடலா எடுத்துக்கணா சந்தோஷப்படுவேன். ஆனால் நான் விரும்பும் நடிகை ஒருவர் உண்டு. அவர் வித்யா பாலன். தமிழ் சினிமா பிடிக்கும்னு சொல்றீங்க... தமிழ்ப் பையனை கல்யாணம் பண்ணிப்பீங்களா? நிச்சயம் முடியாது. ஒரு மலையாளியைத்தான் நான் திருமணம் செஞ்சுக்குவேன். அதுதான் சரியா இருக்கும்.

Related Article:

0 கருத்துரைகள்:பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog