காலையில் பால் வாங்க புறப்பட்டேன். வாசலக்கூட தாண்டவில்லை புஷ்பா மாமி எங்கோ ஊருக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.மாமி ஊர்ல இல்லையோ அதுதான் தெருவே கலகலப்பு இல்லாம ஒரு இருந்ததா?
"முரளி! பால் வாங்கத் தானே கிளம்பறகொஞ்சம் இரு எங்க கார்டையும் குடுக்கறேன்.எனக்கும் சேத்து வாங்கிட்டு வந்திடு!
ராத்திரி பயணத்தில பயந்து பயந்து தானே வர வேண்டி இருக்கு. ராத்திரி முழுக்க ஒரு நிமிஷம் கூட தூங்கல.தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ஆக்சிடென்ட் கண்ணு முன்னாடியே நின்னுட்டு இருக்கறப்போ தூக்கம் எப்படி வரும்?
அந்த ட்ரெயின்ல பயணம் செஞ்சவா ராத்திரி கூட போன்ல பேசி இருப்பாளே.கலையில நாம இருக்கமாட்டோம்னு அவாளுக்கு தெரியுமா?
32 பேருக்குமேல அநியாயமா செத்துப் போயிட்டாளே! சயின்ஸ் டெக்னாலஜின்னு என்னனமோ சொல்றா. ஆனா விபத்தை தடுக்க முடியலையே. ராத்திரிதானா அது பத்திண்டு எறியணும்! பகல்ல இருந்தா யாராவது பாத்திருப்பாளே! எப்படி நடந்ததுன்னு என்ன காரணம்னு இன்னும் கண்டு பிடிக்கலயே! ரயில்வே நிர்வாகம் பாசென்ஜெர்ஸ் பாதுகாப்பில நிறைய கவனம் வெக்க வேணாமா?.ஓவ்வொரு பெட்டியிலயும் ஒரு கேமரா வைக்கலாமே. ரயில்வே போலீஸ் அங்கங்க இருப்பாளே?அவாளும் சேந்து தூங்கி இப்படி நிறைய பேர நிரந்தரம தூங்க வச்சிட்டாளே! நெருப்பு, புகை இது கொஞ்சம் இருந்தாகூட அலாரம் அடிக்கிற மெஷின் எல்லாம் இருக்காமே!அ தெல்லாம் இதுல யூஸ் பண்ணனும்னு ரயில்வேக்கு தோணவே தோணாதா?அதுக்கு அப்படி என்ன செலவு ஆயிடப் போறது? இதெல்லாம் அவன் எங்க செய்யப் போறான்?
அவசரத்துக்கு ட்ரெயின நிறுத்தறதுக்கு இன்னும் எடிசன் காலத்து சங்கிலி படிச்சு இழுக்கிற முறையத்தான இன்னும் ஃபாலோ பண்ணிட்டிருக்கா?. அதுவும் பெரும்பாலும் ஒர்க் பண்ணறதில்லேன்னுதான் சொல்லறா. சினிமால்லாம் டிஜிட்டலா மாறிப்போச்சு. அவசியமானதெல்லாம் இன்னும் மாறாமயே இருக்கு.இ ந்த மாதிரி விபத்து நடக்கும்போதெல்லாம். ஏதோ நிவாரணம் கொடுத்துட்டு விசாரணை பண்ணறேன்னு சொல்லி அதோட மறந்து போயிடுவா.
உனக்கு தெரியாது .அந்த காலத்தில லால் பகதூர் சாஸ்த்ரி (1956) போக்குவரத்து மந்திரியா இருந்தப்ப அரியலூர்ல நடந்த ட்ரெயின் விபத்துக்கு தானே பொறுப்பேற்று தன்னோட மந்திரி பதிவியை ராஜினாமா செஞ்சாராம்.இப்ப அந்த பொறுப்புல இருக்கிற அமைச்சர் யாருன்னுகூட தெரியல.
என்னடா நான் பாட்டுக்கு பொலம்பிக்கிட்டே இருக்கேன் நீ வாய தொறக்க மாட்டேன்கிறயே!
"ஆமாம் மாமி! நீங்க சொல்லறதெல்லாம் சரிதான்.மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ரெண்டு மூணு நாளா பஸ் ஒட்டையில விழுந்து இறந்துபோன பொண்ணப் பத்தியும் இந்த ஆக்சிடண்ட் பத்தியும் தான் பேசிக்கிட்டிருக்கோம்."
"நீ எங்க பேசி இருக்கப் போற?.பேசறத வேடிக்கை பாத்துண்டுதான இருந்திருப்ப. அப்படியே உங்கப்பா மாதிரி"
என்று சொல்லி என்னை வாரிவிட்டு விட்டு பால் கார்டு எடுத்துவர சென்றார் புஷ்பாமாமி.
எத்தனயோ மக்களின் எதிரொலியான மாமியின் புலம்பல் உரியவர்களை மாறச் செய்யுமா?
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment