Sunday, 30 December 2012

படுக்கையறையில் தொலைக்காட்சி பாக்காதீங்க...!!



படுக்கை அறையில் புதியதாக சில விசயங்களை முயற்சி செய்து பார்த்து விடவேண்டும் என்று உற்சாகத்தோடு வருவார்கள். ஆனால் துணையில் சில செயல்பாடுகளால் உற்சாகம் முழுவதும் வடிந்து உறக்கம்தான் கண்களைத் தழுவும். தாம்பத்யத்தில் உற்சாகம் இழக்கச் செய்யும் சில செயல்பாடுகளை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் அவற்றினை தவிர்த்தாலே போதும் எந்த சிக்கலும் வர வாய்ப்பில்லை என்கின்றனர் அவர்கள்.

ரொம்ப லேட்டா சாப்பிடாதீங்க!
படுக்கை அறையில் அன்றைக்கு விசேசமாக ஏதாவது இருக்கவேண்டும் என்றால் சட்டு புட்டென்று இரவு உணவை முடித்துக்கொள்ளுங்கள். ஊர் சுற்றிவிட்டு பத்துமணிக்கு மேல் இரவு உணவு சாப்பிட்டால் அப்புறம் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும். சரியாக செயல்பட முடியாது.

தூக்கத்தை கெடுத்துக்காதீங்க
வார இறுதி நாட்களில் லேட் நைட்டில் உறங்கப்போனால் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது. அப்புறம் சோம்பேறித்தனமும், சோர்வும் குடியேறிவிடும்.www.illamai.blogspot.com வார இறுதி நாள் விடுமுறையை ஒன்றும் செய்யலாமல் கழிக்கவேண்டியதாகிவிடும். எனவே நீங்கள் உறங்கப்போகும் நேரத்தை திட்டமிடுங்கள். மதிய நேரத்தில் சில மணிநேரங்கள் ஓய்வெடுங்கள். அப்பொழுதுதான் இரவில் உற்சாகமாக செயல்பட முடியும்.

எப்ப பார்த்தாலும் ஆபிஸ் வேலையா?
தம்பதியர் இருவரும் வாரத்தின் 7 நாட்களிலும், 24 மணிநேரமும் அலுவலகம் பற்றியோ, வேலை பற்றியோ நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்க்கை போரடித்துப் போய்விடும். எதன் மீதும் ஈடுபாடு இருக்காது. எனவே உங்களுக்கு என நேரத்தை ஒதுக்குங்கள். சுவாரஸ்யமான விசயத்தைப் பேசுங்கள். படிப்படியாக ஆர்வத்தை அதிகரித்து உங்கள் துணையை படுக்கை அறைக்கு அள்ளிச்செல்லுங்கள்.
சோர்வு தரும் மாத்திரைகள்
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்காக சிலர் மாத்திரை உட்கொள்வார்கள். இது செக்ஸ் ஹார்மோன்களின் சுரப்பை குறைக்கிறதாம். அதேபோல் குழந்தைப் பிறப்பை கட்டுப்படுத்துவதற்காக பெண்கள் உட்கொள்ளும் மாத்திரைகளும் கூட செக்ஸ் ஆர்வத்தைக் குறைத்துவிடுமாம். எனவே எதைப்பற்றியும் கவலைப்படாமல் சந்தோசமாக உறவை அனுபவிக்க நினைத்தால் மட்டுமே உற்சாகமாக செயல்பட முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

உடற்பயிற்சியை மாத்துங்க
எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என்று எப்பொழுது பார்த்தாலும் ஜிம், உடற்பயிற்சி என்று பழியாக கிடக்கிறீர்களா? ஆணோ, பெண்ணோ இருவருடைய www.illamai.blogspot.comஅது பாதிக்குமாம். எனவே உடலை வருத்தும் உடற்பயிற்சிக்கு குட்பை சொல்லிவிட்டு லேசான வாக்கிங், சைக்கிளிங் போன்றவைகளை மேற்கொள்ளுங்களேன்.

படுக்கையில் நியூஸ் கேட்காதீங்க
தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியினால் விரல் நுனியில் செய்திகள் வந்து உட்காருகின்றன. அதற்காக ஆன்லைன், டிவி, செல்போன் போன்றவைகளில் செய்திகளை கேட்பதால் மூட் அப்செட் ஆகிவிடும். அப்புறம் என்னதான் முயற்சி செய்தாலும்www.illamai.blogspot.com உற்சாகமாக செயல்பட முடியாது. எனவே உங்களில் லேப்டாப், செல்போன், ஆகியவற்றை ஸ்விட் ஆஃப் செய்துவிட்டு படுக்கைக்கு செல்லுங்கள். உங்கள் துணையுடன் கிளர்ச்சி ஏற்படுத்தும் விதமாக பேசுங்கள். அப்புறம் என்ன உற்சாகம் தானாக ஊற்றெடுக்கும்.

அந்த படங்கள் வேண்டாமே!
போர்ன் படங்களை பார்த்து விட்டு அதுபோல முயற்சி செய்தால் அது சிக்கலில் கொண்டுபோய் விடும். செக்ஸியான படங்களோ, மட்டமான புத்தகங்களோ உணர்ச்சிகளை தூண்டாது. அதற்குப் பதிலாக துணையை உற்சாகப்படுத்துங்கள். முத்தமிடுதல், கட்டிப்பிடித்தல் போன்றவைகளை செய்தால் தானாக உற்சாகம் பிறக்கும் என்கின்றனர்.

 பாலியல் நிபுணர்கள்.
அறியாமல் செய்யும் சின்னச் சின்னத் தவறுகளினால்தான் தாம்பத்ய வாழ்க்கையே தடுமாறிப்போகிறது. இந்த தவறுகளை கண்டறிந்து சரி செய்து விட்டால் அப்புறம் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை நீடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள் முயற்சி செய்யுங்களேன்.


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog