பலிபீடத்துக்கும் மூலமூர்த்திக்குமிடையே குறுக்கே செல்லலாகுமா? பலிபீடமென்று நாம் பேசிக்கொள்ளும்பொழுது அங்கே முதலாவதாக கொடிமரமும் அடுத்து பலிபீடமும் அதனையடுத்து மூலமூர்த்தியை நேராக நோக்கியவாறு அவருக்குரிய ஊர்தியும் (அந்தந்த தெய்வத்துக்குரிய வாகனம் உதாரணமாக விநாயகருக்கு பெருச்சாளி போன்று) அமைந்திருக்கும். இங்கே கூறப்படுவது யாதெனில் பரமாத்மாவாகிய இறைவனுக்கும் அவரை அடையும்பொருட்டு சதாசர்வகாலமும் அவரையே நோக்கியவாறு அமைந்திருக்கும் சீவாத்மாவாகிய ஊர்திக்குமிடையே குறுக்கே சென்று இடையூறு செய்யக்கூடாதென்றே கூறப்படுகின்றது. அப்படியாயின் கொடிமரத்துக்கப்பால் சென்றுதான் நாம் மற்றப்பக்கம் செல்ல வேண்டுமா? ஆம், அவ்வாறு செல்லும்பொழுதிலும் தம்பத்துப் பிள்ளையாரைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அடியவர்கள் கொடிமரத்தையண்டிக் குறுக்காகச் செல்லும் பொழுது (விரைவாக) அவர்களது ஆடை கொடிமரத்துக்கு கீழேயிருக்கும் பிள்ளையாரின்மீது படாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும். ஆலயங்களிலே பக்தர்கள் ”அரோகரா” என்று சொல்லி வணங்குவதன் பொருள் யாது? அதாவது ஹர என்பது பாவங்களைப் போக்குவதென்று பொருள்படும். எனவே ” ஹர ஓ ஹர” என்பது தமிழிலே ”அரோகரா” என்று மருவி வந்துவிட்டதாகக் கூறுவார்கள். அரோகரா என்று சொல்லி வணங்கும் பொழுது நாம் செய்த தீவினையெல்லாம் அகன்று விடுமென்று நம்பப்படுகின்றது. நன்றி – திரு. பேரி ஆலயங்களில் கற்பூர தீபம் காட்டி வழிபடுவதன் பொருள் என்ன? நெய்தீபம் ஏற்றுவது எதனால்? கடவுள் இருக்கும் அறையைக் கருவறை என்று சொல்லு கிறோம். கற்சுவரின் மத்தியில் கொலுவிருக்கும் இறைவனின் திருமேனியும் கல்லினால் செய்திருப்பதால் கரிய நிறத் துடனேயே இருக்கிறது. வெளிச்சத்தைக் காட்டி கடவுளை முழுமையாகத் தரிசிப்பதற்கு கற்பூர ஒளி நமக்கு உதவுகிறது என்பது பொதுவான விளக்கம். ஆனால் பூரணமான அருள்சக்தி ஒளிவடிவில் இருப்பதால், அந்த ஒளியைக் கற்பூரத்தின் பிரகாசத்தில் காண்கிறோம். அதே சமயத்தில் இறைவனது திருமேனியை அங்கம் அங்கமாகத் தரிசிக்கவும் முடிகிறது. மேலும் கற்பூரத்தின் சுடர் அணைந்தவுடன் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. அதுபோல ஒளியாகிய ஞானாக் கினியில் நமது அறியாமை எரிக்கப்பட்டு மறைந்து விடு வதை கற்பூர தரிசனம் நமக்கு உணர்த்துகிறது. ஒளி வடிவான இறைவனை ஒளி மூலம் நாம் தரிசித்து பக்திப்பூர்வமாக மகிழ்கிறோம். ஞானமே வடி வான இறைவன் நமக்குள்ளேயே இருப்பதை உணர்கிறோம். இந்த மகத்தான தத்துவத்தைக் காட்டுவதே கற்பூர தரிசனத் தின் விளக்கமாகும். தற்போது கற்பூரங்களில் ரசாயனம் சேர்ந்து வருவதால் சுத்த நெய் தீபத்தில் கோவில்களில் ஆரத்தி காண்பிக் கப்படுகிறது. புண்ணிய நதிகளில் குளிப்பதால் பாவங்கள் விலகுவதாகச் சொல்லப்பட்டுள்ளது. தீபாவளி யின்போது கங்கா ஸ்நானம் என்பது சிறப் பாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் காசிக்குச் சென்று கங்கையில் குளிப்பது அவ சியமா? காசிக்குப் போக முடியாதவர்கள் என்ன செய்வது? புண்ணிய நதிகளில் மகான்கள் வந்து குளிப்பதால், அது நம் பாவங்களைப் போக்கக்கூடிய சக்தியைக் கூடுதலாக அடைகிறது. காசியில் தீபாவளி சமயத்தில் நீராடுவது மிகச் சிறந்ததாகும்.
இதனால் பித்ருக்கள் நலமடைவார்கள். அதனால் நமது குடும்பம் நலமாக இருக்கும். வறுமை நீங்கும்; புத்திர பாக்கியம் ஏற்படும்; சந்ததிகள் நலமாக இருப்பார்கள். தீபாவளியன்று, காசியில் உள்ள விஸ்வநாதரின் தரிசனமும் தங்க அன்னபூரணியின் தரிசனமும் புண்ணிய பலனை அளிக்கக்கூடியது. தீபாவளியன்று அதிகாலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் வெந்நீரில் கங்கை குடியிருப்பதாக ஐதீகம். காசிக்குச் செல்பவர்கள் அங்கு வர இயலாதவர் களுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு நீராடினால், அதனால் ஏற்படும் புண்ணியம் அவர்களைச் சேரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. கங்கையில் மடி, தீட்டு பார்ப்பது இல்லை. கங்கை நீரின் துளிகளைத் தலையில் தெளித்துக் கொண்டாலும் கங்கையில் நீராடிய பலன்களை அடைய முடியும். கங்கை நீரை சொம்பில் அடைத்து எடுத்து வந்து வைத்துக் கொண்டால் பல காலம் அது கெட்டுப் போகாமல் இருக்கும். அந்தப் புண்ணிய நீரை, மரணம் அடைந்தவர்களின் சரீரத்தில் தெளித்தாலும் அதனால் முழுக்காட்டினாலும் காசியில் மரணமடைந்த புண்ணியம் உண்டாகும். நமது உடலிலுள்ள ஆறு ஆதாரங்களைக் குறிக்கும் வகையில் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்களே- அது எவ்வாறு? நமது உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள்தான் ஆலய கட்டிட நிர்மாணத்திலும் கையாளப்படுகிறது. மூலாதாரம்- கர்ப்பக்கிரகம்; சுவாதிஷ்டானம்- அர்த்த மண்டபம்; மணிபூரகம்- மகா மண்டபம்; அநாகதம்- ஸ்நாந மண்டபம்; விசுத்தி- அலங்கார மண்டபம்; ஆக்ஞை-சபா மண்டபம். உபவாசத்தின்போது பலகாரங்கள் சாப்பிடலாமா? உபவாச காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். சமஸ்கிருதத்தில் “ஃபல்’ என்றால் பழம் என்று பொருள்படும். “ஆஹார்’ என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். “ஃபல் + ஆஹார்’ = பலஹார் என்று ஆகிறது. பழத்தை உணவாகக் கொள் வதே பலகாரம் என்பதாயிற்று. இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் “பலகாரம்’ என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படு கிறது. இது தவறு. இது உண்மையான உபவாசம் ஆகாது. ஜீரண உறுப்பு களுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே உபவாசத்தின் நோக்க மாகும்.
எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு உபவாசம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி உபவாசம் இருப் பதே சிறந்ததாகும். விபூதியை பஞ்சாட்சரம் என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். அதன் பொருள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். திருநீறு மிகவும் புனிதமானது. இதற்குப் பல பெயர்கள் இருக்கின் றன. நம்மை ரட்சிப்பதால் அதனை ரட்சை என்று குறிப்பிடுகிறார்கள். வினைகளை அழித்துப் பொடிபடச் செய்வதால் அதனைத் “திருநீறு’ என்று சொல்லுகிறோம். மகத்தான பெருமை பொருந்திய ஐஸ்வரியத்தை அளிப்பதால் அதனை “விபூதி’ என்றும் அழைக்கின்றோம். ஐந்தெழுத்தை ஓதித் தருவதால் விபூதியை பஞ்சாட் சரம் என்றும் குறிப்பிடுகிறோம். ஆன்மிகம், மருத்துவம், ஜோதி டம் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கிய சித்தர்கள் எந்தெந்த ஊர்களில் ஜீவசமாதி அடைந்துள்ளார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தயவு செய்து கூற முடியுமா? காயகல்பம் மூலமாக என்றும் இளமையுடன் வாழ்ந்து, உரிய காலம் வந்தவுடன் தமது உடலை உயிருடன் ஜீவ சமாதியாக்கிக் கொண்டவர்கள் சித்தர்கள். அவர் கள் ஜீவசமாதியாகும்போது அங்கே என்ன ஆற்றல் விளைய வேண்டும் என்று எண்ணி முடிவு செய்தார் களோ, அந்த ஆற்றல் அவ்விடங் களில் இன்றும் அவர்களது சக்தியுடன் எழும்பிக் கொண்டிருக்கிறது என் பதுதான் விசேஷ தத்துவமாகும். அப்படி சித்தர் கள் ஜீவசமாதி அடைந்த இடங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே தருகிறோம். கமலமுனி- திருவாரூர். கும்பமுனி- கும்பகோணம். அகப்பேய் சித்தர்- எட்டுக்குடி. இடைக்காடர்- திருவண்ணாமலை. திருமூலர்- சிதம்பரம். சட்டைமுனி- சீர்காழி. மச்சமுனி- திருப்பரங்குன்றம். போகர்- பழனி. குதம்பைச் சித்தர்- மயிலாடுதுறை. கொங்கணர்- திருப்பதி. அகத்தியர்- திருவனந்தபுரம். கோரக்கர்- பேரூர். இப்படிப்பட்ட தலங்களில் உள்ள தீர்த்தங் களில் நீராடி, சித்தர்களின் ஜீவசமாதிகளைத் தரிசிப்பது சிறப்பான நன்மைகளைத் தரும்.
தானங்களால் பலவிதமான புண்ணிய பலன்கள் ஏற்படுகின்றன என்று சாஸ்திரங் கள் கூறுகின்றன. எதையெதை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் விளையும் என்பதைக் கூறுங்களேன். அன்னதானம்- வறுமையும் கடன்களும் நீங்குகின்றன. பூமிதானம்- பிரம்ம லோகத்தையும் ஈஸ்வர தரிசனத்தையும் அளிக்கும். கோதானம்- ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக்கடன் ஆகியவற்றைப் போக்குவிக்கும். வஸ்திரதானம்- ஆயுளை விருத்தி செய்யும். தீப தானம்- கண்பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வரும். தேன் தானம்- புத்திர பாக்கியம் உண்டாக்கும். அரிசி தானம்- பாவங்களைப் போக்கும். தயிர் தானம்- இந்திரிய விருத்தி உண்டாக்கும். நெய் தானம்- நோய்களை நிவர்த்தி செய்யும். நெல்லிக்கனி தானம்- ஞானம் உண்டாக்கும். பால் தானம்- துக்கம் நீக்கும். தேங்காய் தானம்- பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும். தங்க தானம்- குடும்ப தோஷம் நிவர்த்தி செய்யும். வெள்ளி தானம்- மனக்கவலை நீக்கும். பழங்கள் தானம்- புத்தியும் சித்தியும் தரும். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் பலன்கள் உண்டு.
சாதாரண மந்திரங்களுக்கும் பீஜா மந்திரங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? குறிப்பிட்ட பயன்களை அடைவதற்காக மந்திரங்களைப் பிரயோகம் செய்வது சரிதானா? பீஜம் என்பது விதை என்று சொல்லப்படும். பீஜாட்சரங்கள் என்றால், மந்திரங்களின் வித்துகள் என்று பொருள் கொள்ளுகிறோம். பீஜாட்சரங்களை மந்திரங்களுடன் இணைத்துச் சொன்னால்தான் மனதில் அலை எழுப்ப முடியும். அவை மனதைத் தூண்டும் சக்தி உடைவை. பீஜா மந்திரங்களில் “ஐம்’ என்பது சரீரத்தை யும், “ஹ்ரீம்’ என்பது மனத்தையும், “ஓம்’ என்பது மூலாதாரத்தையும் ஊக்குவிக்கும். மேலும், இந்த பீஜாட்சரங்கள் உச்சரிப்பவரின் உட லுக்குள் சென்று பக்தி நெறிக்கு அழைத்துச் செல்லும் பக்குவத்தையும் ஏற்படுத்தும். அதனால் பீஜாட்சரங்களை மந்திரங்களுடன் இணைத்துச் சொல்வதே சிறந்த பலனைத் தரும்.
மந்திரங்களை உச்சாடனம் செய்யும் பொழுது, அவை எதனைக் குறித்துச் செய்யப் படுகின்றனவோ, அந்தப் பலன்களை உறுதியாக அளிக்கும். மந்திர உபாசனை செய்யும்போது நல்லதற்கும் தீயதற்கும் அவை உதவும். சரியான உச்சரிப்புடன் சொற்சோர்வு இல்லாமல், நல்ல நோக்கங்களுக்காக உச்சாடனம் செய்தால் நாம் எதிர்பார்க்கும் நன்மை உண்டாகும். உதாரண மாக, சந்தான கோபால கிருஷ்ணனுக்குரிய மந்திரத்தை பக்தியுடன் ஜெபம் செய்து ஹோமத்தில் பிரயோகம் செய்தால் நிச்சயமாகப் புத்திர பாக்கியம் உண்டாகும். வெண்ணெய்யில் மந்திர உச்சாடனம் செய்து கொடுத்தால் சந்தான பாக்கியம் ஏற்படும் என்பதில் உறுதியாக இருக்கலாம்
Related Article: