அரசு விருதுகள் அவ்வப்போது வழங்கி தனது ஆதரவாளர்களை குதுகலப்படுத்துகிறது.அப்போது ஆட்சியில் இருப்போர் தங்களுக்கு விருப்பப்ப டுவோர்களுக்கு ஏதாவது ஒரு அறிஞர் அல்லது பழையத்தலைவர்கள் பெயரில் கொஞ்சம் பணத்தையும்,ஒரு பத்திரத்தையும் கொடுத்து கவுரப்படுத்துகிறது .
அந்த வகையில் தற்பொது ஜெயா அரசும் தனது விருதுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழ்தொண்டு மற்றும் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் . விருதுகள் பெறுவோர் விவரம்
வருமாறு:
திருவள்ளூவர் விருது - டாக்டர் முருகேசன் ( சேயான்) , பெரியார் விருது -
கோ. சமரசம், அண்ணா விருது - கே.ஆர்.பி., மணிமொழியன், காமராசர் விருது-
சிங்காரவேலு, மகாகவி பாரதியார் விருது- ராமமூர்த்தி, பாவேந்தர் பாரதிதாசன்
விருது - சோ. நா. கந்தசாமி, திரு.வி.க., விருது - முனைவர் பிரேமா
நந்தகுமார், கி.ஆ.பெ.விஸ்வநாதன் விருது - முனைவர் ராசகோபாலன், அம்பேத்கர்
விருது - தா.பாண்டியன் ஆகியோருக்கு வழங்கப்படும். மற்றவர்கள் எப்படியோ அவர்கள் பெயர்களை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.அவர்கள் சேவை ஆற்றிய விபரம் தெரியாது.
இதில் மணிமொழியன் கட்சிப் பேச்சாளர். அடுத்தவர் அண்ணன் தா.பா,இவரும் கிட்டத்தட்ட கட்சிக்காரர்தான். ஆனால் வேறு கட்சிப்பெயரில் இருப்பதால் சரத்குமார் மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம் .
கம்யூனிஸ்ட் கட்சியிலேயே சாதி வாடை யுடன் நடத்துபவர் என்ற நல்ல பெயர் வாங்கியவருக்கு அம்பேத்கர் விருது என்பது கொஞ்சம் நெடுரல் தான் .
இவரை விட மற்றொரு கட்சியின் தனது ஆதரவாளரான ராமகிருஷ்ணனுக்கு கொடுத்திருக்கலாம்.
அந்த கட்சியிலாவது தீண்டாமை முன்னணி என்ற அமைப்பு இருக்கிறது.உத்தப்பபுரம் போன்று பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி சிறையெல்லாம் சென்றிருக்கிறார்கள்.அவர்களில் ஒருவருக்கு கொடுத்திருக்கலாம் .
ஆனால் அவர்களுக்கு கொடுக்க முடியாத காரணமும் இருக்கிறது.
அவர்கள் திடீரென விழித்துக்கொண்டு எதிர்த்துப் பேசுவார்கள்.அந்த காரணம்தான் விருது தா.பா.போன்ற ஜால்ரா விசுவாசிக்கு போயுள்ளது.
இவர்தான் விலைவாசியை உயர்த்தி அம்மா வரியை கடுமையாக்கினாலும்,பேருந்து கட்டணம்,பால் விலை என்று எதை செய்தாலும் அரசை விமர்சிக்காமல் எதிரி கருணாநிதியை மட்டுமே குற்றம் சாட்டி அறிக்கை விட்டு மக்களை திசை திருப்பும் பணியை திறம்பட செய்வார்.
என்ன ஒரு குறை என்றால்,அம்பேத்கர் பெயரில் வழங்காமல் அம்மா .அல்லது அம்மம்மா பெயரில் வழங்கியிருக்கலாம்.
அல்லது விருது பெயரையே விசுவாசி விருது என்று வைத்திருக்கலாம்.
Related Article: