Saturday, 12 January 2013

காதல் அழியாமல் இருக்க சில சூப்பர் டிப்ஸ்...



காதல் என்பது ஒரு வகையான உணர்வு. அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது. காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பாசம், அன்பை குறிக்கும். அந்த காதல் (அன்பு) நட்பாகவும் இருக்கலாம், சகோதரத்துவம் ஆகவும் இருக்கலாம். இன்று புத்தகங்கள், திரைப்படம் மற்றும் இணையத்தில் காதல் கருத்துக்கள் பல வழிகளில் காட்டப்படுகிறது, ஆனால் உண்மையான காதல் உள்ளுணர்வோடு நாம் வைத்து பழகும்போது தான் அதை உணரமுடியும். சிலருக்கு காதல் செய்யும் போது, ஆரம்ப காலத்தை தவிர மற்ற நாட்களில் எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயமும் இல்லாமல், போர் அடிப்பது போன்று உணர்வார்கள். சிலருக்கு அதனாலேயே காதல் தோல்வி அடைந்துவிடும். எனவே அந்த மாதிரி காதல் இல்லாமல், எப்போதுமே ரொமான்ஸ் ஆக இருக்க சில டிப்ஸ்...


1. காதல் என்பது ஒவ்வொருவரின் மனதைப் பொருத்தது. அதிலும் காதல் சின்னங்களான ரோஜா, மெழுகுவர்த்திகள் மற்றும் சாக்லேட் மட்டுமே இதுவரை காதலில் ஒரு அறிகுறியை கொடுத்துள்ளது. உண்மையில் காதலிப்பரை சந்தோஷப்படுத்துவதற்கு, அவர்களின் உணர்ச்சிகளை தூண்ட எது ஏதுவாயிருக்கும் என்று பாருங்கள். அவர்கள் எதை விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அவர்களின் காதலை வெல்ல அவர்களின் விருப்பங்கள், வெறுப்புகள் அறிந்து கொள்வது மிக அவசியம். காதல் செய்யும் போது, அவர்கள் கண்கள் பூக்கள், புத்தகங்கள் என்று எதன் மேல் படுகிறது, எதை கண்டால் அவர்கள் மனம் சந்தோஷம் கொள்கிறது என்பதை தெரிந்து கொள்வது ஒரு சிறப்பு. மேலும் உங்களது உலகில் மற்றவரை விட அவர்கள் எத்தனை முக்கியமானவர் என்பதை நீங்கள் உணர ஆரம்பிக்கும் பொழுது, உங்கள் மனம் அவர்மீது அதிக கவனத்தை செலுத்தும். இவ்வாறு செலுத்தும் போது, அவர்களது ஒவ்வொரு செயலையிம் ரசிக்கத் தோன்றும்.


2. நீங்கள் ஒருவர் மீது ஈர்ப்பு கொண்டு அந்த காதலை அவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும். மேலும் நீங்கள் அவர்களை கவர என்ன செய்ய வேண்டும்? நீங்கள் அவர்மீது ஆர்வம் கொண்டுள்ளீர் என்பதை எப்படி வெளிபடுத்துவது? அவர்களை அன்பால் வெல்ல என்ன செய்ய வேண்டும்? அவர்களை எப்படி பாசாங்கு செய்வது? என்பதை யோசித்தால் அவசியம். அவர்களின் அன்பு மற்றும் காதலை பெற முயற்சிக்கவும். நீங்கள் முன்னமே காதல் தோல்வி அடைந்தவரானால், அந்த தோல்வியைக் வெளப்படுத்திக்கொண்டு சிலர் அனுதாப காதலை உண்டாக்குவர். அப்படி செய்கையில் ஒரு காட்சியை உருவாக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் எத்தனை ஆசை அவர்மீது வைத்திருந்தீர், காதலில் எத்தனை நம்பிக்கை கொண்டிருந்தீர், என்பதை விளக்கும் போது, உங்கள் மீது காதல் கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால் பயத்தால் சிலர் தங்களது காதலை சொல்லாமல், காதலில் தோல்வி அடைவர். எனவே அவரவர் காதலை வெளிப்படுத்துவது அவசியம்.


3. காதல் செய்யும் போது ஆரம்பத்தில் எல்லாம் புதியதாக இருக்கும். ஆரம்பத்தில் உங்கள் காதல், உற்சாகத்தை மற்றும் உத்வேகம் கொண்டு, நீண்ட நாள் உறவைத் தொடர நினைக்கும். நீங்கள் ஒருவரை சந்தித்து அவர் மீது காதல் கொண்டு, மீண்டும் மீண்டும் அவரை சந்திக்க மனம் ஏங்கும் மற்றும் உங்கள் தொடர்பு நீடிக்க - நாளை என்ன நடக்கும்? அடுத்த வாரம் என்ன நடக்கும்? அடுத்த மாதம் என்ன நடக்கும்? அவர் உங்களை அழைப்பாரா? முத்தமிடுவாரா? அவர் வருவாரா? என்று பல உணர்ச்சிகளும் எதிர்ப்பார்ப்பும் நிகழும். இந்த உறவு உங்கள் வாழ்வில் ஒப்புக்கொண்ட பின், இது ஒரு வழக்கமான ஒன்றாக மாறிவிடும். அதனால் உங்கள் காதல் எப்போதும் புதிதான ஒன்றாக இருக்க வேண்டும் எனில், ஏதாவது புதிதாக செய்யுங்கள். ஆச்சரியப்படும்படி, எதிர்பார்க்கும்படி, அவர்களை என்றும் உற்சாகபடுத்தும் படி, அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினால், உங்கள் காதல் எப்போதுமே சிறப்பாக இருக்கும்.

4. காதல் என்பது ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் என்ற கட்டாயமோ அல்லது அது ஒன்றும் காசு கொடுத்து வாங்கும் விலை உயர்ந்த பொருளாகவோ அல்லது உயர்தரமானதாக இருக்க வேண்டும் என்பதோ இல்லை. உண்மையில், சில நேரங்களில், காதல் தருணங்கள் எளியதாகவும், மனதில் செய்ய வேண்டுமென்று தோன்றும் ஒரு உணர்வு. அதிலும் சில நேரங்களில் அந்த காதலை வெளிப்படுத்த "நான் உன்னை காதலிக்கிறேன்", "நான் ஒரு அதிர்ஷ்டசாலி" என்றெல்லாம் சொல்லி நம் உணர்ச்சியை வெளிப்படுத்தலாம். வேண்டுமெனில் காதல் கடிதம் எழுதலாம். இல்லையெனில் அவர்களை மறைந்து நின்று பார்ப்பது, சத்தமாக காதலை சொல்வது, முத்தமிடுவது, கிண்டல் செய்வது, உணர்வை தொடும் வகையில் பேசுவது என்று காதலை வரம்பற்ற வழிகளில் வெளிப்படுத்தலாம். படைப்பாற்றல் மற்றும் வேடிக்கையாக செய்தல் மிகவும் அவர்களை ஈர்க்கும்!


5. வாழ்வில் நீங்கள் விரும்பியவரை பெருமைப்படுத்த அல்லது பாராட்ட, நீங்கள் உண்மையிலேயே அவர்களை உங்களோட இருக்க செய்தல் வேண்டும். அவர்களை உங்கள் சொந்தமாக்கிக் கொள்ள, உங்களின் முழு முயற்சி எடுக்கும் பொழுது, அதில் அதிக சந்தோஷம் அடைவீர். நீங்கள் ஒவ்வொரு நாளும் அவர்களை தொடர்ந்து பார்க்கும் போது, அதைவிட அற்புதமான சுழல் எதுவும் இல்லை. அவரை உங்களது வாழ்க்கை துணையாக அடைந்து உங்களின் அனைத்து உணர்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள, நீங்கள் எத்தனை அதிர்ஷ்டம் செய்தவர் என்பதை மனமானது ஞாபகப்படுத்தி, மீண்டும் உங்கள் வாழ்க்கையில் காதலை மேலும் அதிகரிக்கச் செய்யும்.


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog