Tuesday 28 May 2013

கோச்சடையான் படத்துக்காக இந்தியில் பாடிய ரஜினிகாந்த்


கோச்சடையான் படத்துக்காக ரஹ்மான் இசையில் முதன் முறையாக இந்தியில் பாடியுள்ளார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த், தந்தை-மகனாக இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் 'கோச்சடையான்'. இந்த படத்தை அவருடைய மகள் சவுந்தர்யா இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதில், சரத்குமார், ஆதி, தீபிகா படுகோனே, நாசர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். படம் அதிநவீன 'மோஷன் கேப்சர்' எனும் புதிய தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கிறது. 
 கோச்சடையான் படத்துக்காக ரஹ்மான் இசையில் தமிழில் ரஜினிகாந்த் பாடியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் இந்தி பதிப்புக்காக தன் சொந்த குரலில் முதன் முறையாக ரஜினி பாடியுள்ளார். பொதுவாக தான் எந்த மொழியில் நடித்தாலும் தன் சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதுதான் ரஜினி வழக்கம். அவருக்கு இந்தி மிக நன்றாகத் தெரியும். இதுவரை அவரது அனைத்து இந்திப் படங்களிலும் அவரே பேசியுள்ளார். ஆனால் இந்தியில் பாடுவது இதுதான் முதல் முறை. 
 தமிழில் மன்னன் படத்தில் இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியிருந்த ரஜினி, இப்போது கோச்சடையான் படத்துக்காக ரஹ்மான் இசையில் பாடியுள்ளார். கோச்சடையான் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஜூன் முதல் வாரத்தில் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று தெரிகிறது.
நன்றி:தினமணி


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog