Friday 24 May 2013

உங்கள் எடை அதிகமா ?


உடல் எடையைக் குறைப்பதற்காக இன்று பல பேர் ஒற்றைக் காலில்நிற்கிறார்கள்.
 
 உடல் எடையைக் குறைப்பதற்கு இதைச் சாப்பிடுங்கள்.இதைச் சாப்பிடாதீர்கள் என்று டி.வி., ரேடியோ, இணையதளம், நாளிதழ், பக்கத்துவீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரர் என ஆளாளுக்கு ஒரு லிஸ்ட் தயாரித்துக் கொடுக்கிறார்கள். 
ஆனால் மனோதத்துவ ரீதியாக இந்த விஷயத்தை எப்படிக் கையாளுவது?
நான் அதிகமாக சாப்பிடுவதில்லை, ஒழுங்காக உடற்பயிற்சி செய்கிறேன் ஆனாலும் ஏன் உடல் எடை குறையவில்லை என்று குழம்பிக் கொண்டிருப்பவர்களுக்கான மனவியல்
 ரீதியிலான ஆலோசனை.
 உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சி அதிக அளவிலான கலோரிகளை எரித்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். 
ஆனால் அவர்கள் செய்யும் உடற்பயிற்சி குறைவான கலோரிகளையே குறைத்திருக்கும்.
 குறைவான தூக்கம் மேற்கொண்டு அதிகாலையிலே எழுந்து உடற்பயிற்சி செய்பவர்கள் உண்டு.
 உடற்பயிற்சிக்காக தூக்கத்தைத் தொலைக்கக் கூடாது. 
சரியான தூக்கமில்லாமல் உடற்பயிற்சி மேற்கொண்டால், வளர்சிதை மாற்றம் குறைந்து, அதிகம் பசி எடுக்க ஆரம்பிக்கும். பசி எடுத்தால் சாப்பிடுவது அதிகரிக்கும். எனவே,உடல் எடையும் அதிகரிக்கும்.
 "சத்தான உணவுகளைத்தான் சாப்பிடுகிறேன். எடை குறைவதற்கான சாப்பாட்டைத்தான் சாப்பிடுகிறேன். ஆனாலும் எடை குறையவில்லை' என்பவர்கள், தாங்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைக்க வேண்டும். 
சத்தான உணவாக இருந்தாலும், அதிகமாக உட்கொண்டால் எடை தானாக அதிகரிக்கும்.
அதிகமாக சாப்பிட்டால் தானே எடை அதிரிக்கும். குறைவாக சாப்பிடுவோம் என்று நினைத்தால் அதுவும் தவறுதான்.
 அவரவரின் உடலுக்கென்று குறிப்பிட்ட அளவு சாப்பாட்டை உட்கொள்ள வேண்டும். அதைவிட குறைவாகச் சாப்பிட்டால் வளர்சிதை மாற்றம் குறைந்து உடல் எடை கூடிவிடும்.
சாப்பாட்டைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறோம். 
ஆனால் நாம் தினந்தோறும் குடிக்கும் பானங்கள் உடல் எடையைக் கூட்டுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. 
மது அருந்துவதினால் அதிக கலோரிகள் உடலில் சேர்கின்றன. 
அதே போன்று குளிர்பானங்கள்,  விலையுயர்ந்த மென்பானங்களும் கலோரிகளை அதிகரிக்கிறது. 
சாப்பாட்டைப் போன்று குடிக்கும் பானங்களிலும் கவனம் செலுத்துங்கள். 
சர்க்கரை அதிகமாக உள்ள பானங்களை தவிர்த்துவிடுங்கள்.
உடல் எடையைக் குறைக்க மனோதத்துவ ரீதியிலான வழிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 
உடல் பருமனானவர்களைக் கொண்டு பரிசோதனை செய்த பிறகே முடிவை அறிவித்துள்ளனர்.
உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கண்ணாடி முன் உட்கார்ந்து சாப்பிட வேண்டும். கண்ணாடியில் தங்கள் உருவத்தைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுபவர்கள், தானாக உணவின் அளவை குறைத்துவிடுவார்களாம். 
சாப்பிடும்போது அவரவரின் உடல் பருமனைப் பார்த்தால் அது உளவியல் ரீதியாக பாதித்து, அவர்கள் உணவின் அளவைக்குறைப்பார்கள்.
 அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் மதியம் சாப்பிடப் போகும்போது ஆண், பெண் இருபாலினத்தவரும் சேர்ந்தே சாப்பிடுதல் நலம். எதிர் பாலினத்தவர் உடன் இருக்கும்போது அதிகம் சாப்பிடத் தோன்றாது என்கிறது ஆய்வு.
 வெளியில் சாப்பிடச் செல்லும்போது பணத்தைக் கையில் எடுத்துச் செல்லுங்கள். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டையெல்லாம் பயன்படுத்த வேண்டாம். 
கையில் இருந்து பணத்தைக் கொடுத்துச் சாப்பிட்டால்தான், எவ்வளவு தேவையோ அதை மட்டும் வாங்குவோம். 
கார்டில் "ஸ்வைப்' செய்தால் தேவையில்லாததையும், உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருள்களையும் அதிகம் வாங்குவோம் என்கிறது உளவியல் ஆராய்ச்சி.
 வீட்டில் சாப்பிடும்போது ஓய்வு நேரத்திற்கு அணியும் தொள தொள ஆடைகளை அணிந்து சாப்பிட வேண்டாம். 
ஏனென்றால் அவ்வாறு தொள தொள ஆடைகளினுள் நாம் மெலிந்து தெரிவோம். அதனால் அதிக அளவில் சாப்பிடத் தோன்றுமாம். எனவே நம் அளவிற்கு சரியாகப் பொருந்தும் ஆடைகளை அணிந்து சாப்பிடுங்கள்.
 பொதுவாக வீட்டு உள்சுவர்களுக்கு வெளிர் நீல நிற வண்ணத்தை அடிப்பதுண்டு. ஏனென்றால் அது மனதிற்கு அமைதியைத் தரும் நிறம்.
 நீல நிறத்திற்கு உடல் எடை குறைவதற்கும் தொடர்பு இருக்கிறது.
 வெளிர் நீலம் மற்றும் பச்சை நிறங்கள் பசியை அடக்குகிறது. 
 மஞ்சள், சிவப்பு நிறங்கள் பசியைத் தூண்டுகிறது. 
 சுவர், சாப்பாட்டு மேஜை விரிப்பு என சாப்பாட்டு சம்பந்தப்பட்டவற்றை நீல நிறமாக மாற்றலாம்.
 பொதுவாக உடலில் நமக்குச் தேவையான அளவு கலோரியை விட அதிக அளவில் கொழுப்பு சேர்ந்தாலே உடல் குண்டாகத் தோற்றம் அளிக்கிறது. 
தேவைக்கு அதிகமான கொழுப்பு உடலில் தேங்கியிருப்பதை கரைத்தலே எடை குறைப்பாகும்.
குறைவாக சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான சக்தியானது கொழுப்பின் மூலம் எரிந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அதிக அளவில் மாமிசங்களை சாப்பிடுவதால் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன.
 அதிக பழங்களைச் சாப்பிடுவதால் புற்றுநோய் வருவதில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

பழங்கள், காய்கறிகள், முழுவதும் தானியங்களிலான உணவுகள், குறைவான கொழுப்பு கொண்ட பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் புரோட்டீன் உணவுகளே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்தவை.
டையைக் குறைக்கும் தன்மை கொண்டவை.
கேக், கொழுப்பு நிறைந்த மாமிசம், பால், கிரீம், சாஸ் போன்றவற்றை அதிகமாக சேர்த்தல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் தடாலடியாக உணவினை குறைத்துக் கொண்டு, மெலிந்து பலவீனமான பின் மீண்டும் ஏற்கனவே இழந்ததற்கு மிச்சமாக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள் வார்கள்.
 இது தவறான அணுகுமுறை.
உடற்கூறு நிபுணர்கள் கருத்தின் படி, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் படிப்படியாக எடையைக் குறைக்க முன்வர வேண்டும். 
பொதுவாக வாரம் ஒன்றுக்கு 450 கிராம் அளவிற்கே எடை குறைய வேண்டும். அப்போதுதான் உடலில் பாதிப்பு ஏற்படாது.

நாளொன்றுக்கு உங்களின் உணவு முறையில் சுமார் 500 கலோரி அளவுக்கு குறைவாக சாப்பிடுங்கள். இதன்மூலம் உடம்பில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பில் இருந்து தேவையான கலோரிகள் அன் றாட சக்திக்காக எடுத்துக் கொள்ளப்படும்.
 அல்லது 250 கலோரி குறைவாக சாப்பிடுவீர்களானால், 250 கலோரி அளவிற்கு உடற்பயிற்சி செய்தும் குறைக்க முடியும்.

குறைவான கலோரி சாப்பிடுவதுடன் உடற்பயிற்சியும் செய்வதால் குறையும் உடல் எடை நீடித்து நிரந்தரமாக இருக்கும், பாதிப்பும் ஏற்படாது.
காலை உணவை கண்டிப்பாக சாப்பிடுங்கள். 
வெறும் வயிற்றில் இருந்தால் மதிய உணவின் போது அதிகம் சாப்பிடத் தூண்டும். 
அதே போல மதிய உணவைத் தவிர்க்காதீர்கள்.
குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவாவது சாப்பிடுதல் வேண்டும். சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறைந்து விடும் என்று நினைப்பது  தவறு .

உணவில் குறைவான கொழுப்புச் சத்துக்கள் உள்ளனவா என்பதை அறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
 திடஉணவின் அளவை குறையுங்கள். 
அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். 
குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் குடியுங்கள்.
சாப்பிடாமல் இருந்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று கருதுவீர்களானால், அது உடல் பலவீனத்தையும், நோயையும் கொண்டு வந்து சேர்க்கும்.
 
 இப்படி எல்லாம் செய்தும் உங்கள் எடை குறைய வில்லை என்றால்?
உங்கள் எடை மேலும் கூ டாமல் பார்த்துக் கொள்வதை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog