Friday 14 June 2013

160 ஆண்டு தந்தி' சேவை. முடிவு






160 ஆண்டு கால பழமை வாய்ந்த, "தந்தி' சேவை, அடுத்த மாதம், 15ம் தேதி முதல் நிறுத்தப்படும் என, பி.எஸ்.என்.எல்., அறிவித்து உள்ளது.
தகவல்களை விரைவாக பரிமாறிக் கொள்ள, தந்தி சேவையை, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


  எனினும், இணையதளத்தின் வருகை, ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால், மக்கள் மத்தியில், தந்தி சேவைக்கான மவுசு குறைந்து விட்டது.

கடந்த, 1853ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான இந்த வசதி, சில ஆண்டுகளுக்கு முன் வரை, தகவல் பரிமாற்றத்திற்கு, பலராலும் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றாக இருந்தது.சில ஆண்டுகளாக, குறைந்த கட்டணத்தில், போன் மூலம் பேசும் வசதி, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் வசதி, "இ - மெயில்' மூலம் விரிவான தகவல் களை அனுப்புதல் போன்றவற்றை, அனைத்து தரப்பினரும் பின்பற்ற துவங்கியதை அடுத்து, தந்தி பயன்பாடு, வெகுவாக குறைந்து விட்டது.
கடந்த, 160 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ள இந்த சேவை, இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வருகிறது.

அஞ்சல் துறையின் சார்பில் வழங்கப்பட்ட இந்த சேவை, கடந்த சில ஆண்டுகளாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஏற்று நடத்தி வருகிறது. வணிகரீதியில், லாபம் தராத இந்த சேவையை, ஜூலை, 15 முதல் நிறுத்திக் கொள்ள, பி.எஸ்.என்.எல்., முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மத்திய அரசிடம், அந்த நிறுவனம் அனுமதி கோரிய போது, பி.எஸ்.என்.எல்., நிறுவனமே முடிவெடுக்கலாம் என, அரசு கூறிவிட்டது.

இதையடுத்து, ஜூலை, 15ம் தேதி முதல், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தந்தி இருக்காது. அடுத்த, ஆறு மாதங்களுக்கு, அரசின் ஆணைகள், சுற்றறிக்கைகள் மட்டுமே, தந்தி சேவை மூலம் அளிக்கப்படும்.
அதன் பிறகு, முழுமையாக, தந்தி சேவை நிறுத்தப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------
ரூபாயின் வீழ்ச்சி
--------------------------

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு  வரலாறு காணாத அளவிற்கு 58.17–ஆக வீழ்ச்சி அடைந்தது. 
வர்த்தகம் முடியும்போது 58.14–ல் நிலை பெற்றது. ஒரே நாளில் இதன் மதிப்பு 1.9 சதவீதம் குறைந்துள்ளது. 2011 செப்டம்பர் 22–ந் தேதிக்கு பிறகு ஒரே நாளில் இந்த அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அடிப்படையில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அதிகரித்து அந்நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனையடுத்து, அமெரிக்க ரிசர்வ் வங்கி இவ்வாண்டு இறுதிக்குள் சிறப்பு பண அளிப்பு நடவடிக்கையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, கடன்பத்திரங்களை suransukumaran.blogspot.in


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog