Friday 14 June 2013

இன்று என்னுடைய பிறந்த நாள்...


இன்று என்னுடைய பிறந்த நாள்...

இன்று  என்னுடைய பிறந்த நாள்...

காலம் வேகமாக போய் விட்டது. என்ன செய்தேன்..? எப்படி வாழ்ந்தேன்...? எந்த  அளவுக்கு மற்றவர்கள் விரும்புமாறு வாழ்ந்தேன்? நான் என்னை விரும்பி வாழ்ந்தேனா?

எல்லாம் கேள்விகள்....????


எனினும், என்னைப் பொருத்தவரை யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. யாரையும் வஞ்சிக்கவில்லை. துரோகம் செய்யவில்லை. நேர்மைக்கு சோதனை வந்தாலும் நிதானம் கடைப்பிடித்திருக்கிறேன். எனது சட்ட அறிவை மற்றவர் வாழவே பயன்படுத்தியுள்ளேன். மேலாக 'பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே.." என்றே வாழ்ந்து வந்திருக்கின்றேன். அதை இந்த நிமிடம் வரை கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றேன். தொடர்ந்து அவ்வாறு வாழ மன வலிமை, திட்பம் வேண்டும் என வேண்டுகின்றேன்; ஆண்டவனை வணங்குகின்றேன். ஆனாலும், விதி வசம் அகப்பட்ட வாழ்க்கையில் நல்ல எண்ணங்கள் என்றும் தோற்றுப் போனதில்லை என்றே கருதுகின்றேன்.


அண்மையில் ஒரு அம்மையார் மேடைப் பேச்சு ஒன்றின் போது, "நல்லது நடக்கும் என்று நினைத்து செயல்பட்டால் நிச்சயம் நல்லது நடக்கும்"என்று பேசியதை செய்தித் தாளில் வாசித்தேன். மனது முழுக்க தீய எண்ணங்களை வைத்துக் கொண்டு நல்லது நடக்கும் என்று நினைத்து செயல்பட்டால் எப்படி அது நடக்கும்? எனவே வேண்டிய அடிப்படை யாதெனில், நல்ல எண்ணங்கள். தொடர்ந்து நல்ல செயல்கள். நிச்சயம் நல்லது தானாக நடக்கும் என்று நம்புகின்றேன்.



குற்றவியல் சட்டத்தில் ஒரு குற்ற செயலுக்கு குற்ற மனம் (mens rea)இருந்ததா என்பதை கவனிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கின்றது. எனவே ஒன்று குற்ற செயலா (actus reus) என்று ஆராயும் முன்பு குற்ற மனம் இருந்ததா என்பதையும் ஆராய வேண்டியது அவசியமாக உள்ளது. குற்ற மனமில்லாச் செயல் குற்றமாவதில்லை [actus non facit reum nisi mens sit rea, which means: "an act does not make a person guilty unless (their) mind is also guilty] என்பது சட்டக் கோட்பாடு. எனவே குற்ற மனமில்லாமல் வாழ்வது சிறந்த ஒன்று.


கடந்த கால பிறந்த நாட்களில் இருந்து தொடங்கிய வாழ்க்கையில் நிறைய சவால்கள், நிறைய நண்பர்கள், அதே நேரத்தில் நண்பர்கள் போர்வையில் எதிரிகள், சுயநலவாதிகளின் சொரூபங்கள், பிரச்சனைகள், சூழ்ச்சிகள், சமாளிப்புகள் என எல்லாவற்றையும் மிக மிக பொறுமையுடன் பார்த்து வருகின்றேன். எல்லாம் காலம் கற்றுத் தரும் பாடம். சகிப்புத் தன்மையுடன் வாழ்ந்து வருகின்றேன்.

நிறைய பேர்களை அடையாளம் கண்டு கொண்டேன். விலகி இருக்கின்றேன். இது வரை வாழ்ந்ததோ, கற்றுக் கொண்டதோ ஏதுமில்லை என்று உணர்கின்றேன். இனி வாழ்வதும், கற்றுக் கொள்ள வேண்டியதும் நிறைய உள்ளது என்று அறிகின்றேன்; அறிய வைக்கப்பட்டிருக்கின்றேன்.

இப்படி பல்வேறு உணர்வுகளின் நடுவே பிறந்திருக்கும் இந்தப் பிறந்த நாளில் பதிவுலக நண்பர்களின் வாழ்த்துகளை வேண்டுகின்றேன்.

என்றும் அன்புடன்,

பி.ஆர்.ஜெயராஜன்.


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog