Thursday 6 June 2013

ரஜினியை சந்தோசப்படுத்திய தில்லுமுல்லு ரீமிக்ஸ் பாடல்கள்!

Rajini happy about Thillu Mullu Remix song
கோச்சடையான் படத்தில் நடித்துள்ள ரஜினி, சமீபகாலமாக, அதிக நேரம் ஓய்வாகவே இருப்பதால், நிறைய படங்களை பார்க்கத் தொடங்கியிருக்கிறார். தனது வீட்டிலேயே மினி தியேட்டர் இருப்பதால் பெரும்பாலும் அந்நிய மொழிப்படங்களை அங்குதான் பார்க்கிறார். அதேசமயம், சில சினிமா உலக நண்பர்களும், வளர்ந்து வரும் கலைஞர்களும் தங்கள் படங்களை பார்க்க விரும்பி அழைத்தால் பிரிவியூ தியேட்டர்களுக்கு வந்தும் படங்களை பார்த்து விட்டு கருத்து சொல்லிவிட்டு செல்கிறார்.

இந்த நிலையில், தான் கே.பாலசந்தர் இயக்கத்தில் நடித்த தில்லுமுல்லு படத்தை மீண்டும் ரீமேக் செய்கிறார்கள் என்பதால் அப்படத்தை பார்க்க ஆவலாக உள்ளாராம் ரஜினி. அதோடு, அப்படத்திற்கு இசையமைத்துள்ள எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன்ஷங்கர்ராஜா இருவருமே தில்லுமுல்லு என்ற பாடலை பாடியபடி படத்தில் நடித்திருக்கும் செய்தியைக்கேட்டு சந்தோசத்தில் உள்ளாராம். மேலும், ராகங்கள் பதினாறு உருவான வரலாறு என்ற பாடல் எனக்கு அதிக பிடித்த பாடல் என்று சொன்ன ரஜினி, அதன் சுவை குறையாமல் ரீமிக்ஸ் பண்ணுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளாராம்.
நன்றி:தினமலர்


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog