Monday 12 August 2013

சுவிஸ் தமிழர் இல்லம் 12வது தடவையாக நடாத்திய விளையாட்டு விழா











சுவிஸ் தமிழர் இல்லம் 12வது தடவையாக நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம், கிளித்தட்டு, கூடைப் பந்தாட்டம், சுவட்டு மைதான மெய்வன்மைப் போட்டிகள் மற்றும் பார்வையாளர்களுக்கான போட்டிகள் என்பன கடந்த 3ம் 4ம் திகதிகளில் சூரிச் வின்ரர்தூர் Deutweg மைதானத்தில் நடைபெற்றது.
சனி, ஞாயிறு என இரு தினங்கள் நடைபெற்ற நிகழ்வுகளில், பொதுச்சுடர் ஏற்றல், ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகளை தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியுடன் சுவிஸ் தேசியக்கொடி, தமிழர் இல்லம் கொடி, விளையாட்டுத் துறைக்கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டன.
கடந்த ஆண்டில் சுவிஸ் தேசிய மட்டத்தில் நடைபெற்ற ஓட்டப்போட்டியில் MEISTER பட்டத்தை வென்ற செல்வன் ஏரம்பமூர்த்தி மௌத்திரன் அவர்கள் ஓலிம்பிக் தீபத்தினை எற்றி வைத்ததைத் தொடர்ந்து, வீரர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
தமிழர் விளையாட்டு விழா ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக, தமிழர் இல்லம் கராத்தே மாணவர்களின் சிறப்பு வெளிப்பாட்டு நிகழ்வு 20 நிமிடங்கள் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வினை மிகச் சிறுவயதில் கறுப்பு பட்டியில் முதலாவது டான் பெற்ற செல்வன் சப்தேஸ் கௌரிதாசன் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.
வளர்ந்தோர் உதைபந்தாட்டம், 11வயது, 15வயது உதைபந்தாட்டம், பெண்கள் உதைபந்தாட்டம், கிளித்தட்டு, 5 பேர் கொண்ட கரப்பந்தாட்டம், சிறுவர்களுக்கான மெய்வன்மை போட்டிகள் என்பன 3ம் திகதி சனிக்கிழமையும், 09வயது, 13வயது, 17வயது, 21வயது உதைபந்தாட்டம், 4 பேர் கொண்ட கரப்பந்தாட்டம், பார்வையாளர் போட்டிகள் போன்ற 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பாக நடைபெற்றன.
வளர்ந்தோருக்கான உதைபந்தாட்டத்தில், சுவிஸில் இருந்து தெரிவாகிய கழகங்களுடன் ஜேர்மன், பிரான்ஸ், கொலண்ட், ஆகிய நாடுகளில் இருந்து வந்திருந்த அணிகள் மோதிக்கொண்டன. இம்முறை தமிழர் விளையாட்டு விழாவின் திகதி மாற்றத்தினால் டென்மார்க், நோர்வே, இத்தாலி, ஆகிய நாடுகள் பங்குகொள்ள முடியாமைக்கு தமது வருத்தத்தினை தெரிவித்து இருந்தனர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வளர்ந்தோர் உதைபந்தாட்டத்தில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் (2011) இறுதி ஆட்டத்தில் மோதிக்கொண்ட ஜேர்மன் தமிழர் ஸ்ரார் அணியும், பிரான்ஸ் ஈழவர் அணியும் மோதிக்கொண்டன. இறுதியில் ஜேர்மன் தமிழ்ஸ்ரார் அணி தமிழீழக் கிண்த்தை தமதாக்கி கொண்டது.
5 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியில், சுவிஸ் தாய்மண் விளையாட்டுக் கழகமும் லண்டன் கைதடி விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன. இரண்டு அணிகளும் மிகச்சிறப்பாக விளையாடி பார்வையாளர்களின் பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டனர். தாய்மண் விளையாட்டுக்கழகம் தமிழீழக் கிண்ணத்தை தமதாக்கி கொண்டது.
பார்வையாளர் போட்டிகளில், தலையணைச் சண்டை மக்களைப் பெரிதும் கவர்ந்து கொண்டது. இதில் சிறியோர், பெரியோர் என்ற வேறுபாடின்றி அனைவரும் பங்குபற்றி தங்களின் மகிழ்வினை வெளிப்படுத்திக் கொண்டனர். பரிசளிப்பு நிகழ்வுடன் முதல் நாள் நிகழ்வுகள் இரவு 10.00 மணிக்கு நிறைவுற்றன.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8.00 மணிவரை நடைபெற்றது. காலநிலை இடையிடையே சீரற்று இருந்தாலும், அதையும் மீறி வீரர்களும், பார்வையாளர்களும் விளையாட்டுகளில் மகிழ்வுடன் ஈடுபட்டனர்.
அஞ்சல் ஓட்டம், குண்டெறிதல், 100 மீற்றர் ஓட்டம், 200 மீற்றர் ஓட்டம், 2000 மீற்றர் ஓட்டம் என்பன பார்வையாளர்களுக்கான போட்டிகளாக நடாத்தப்பட்டன. இதில் 2000 மீற்றர் ஓட்டப் போட்டியில் 7வயது சிறுவன் சிவரஞ்சன் ரிஷபன் கலந்து கொண்டு, போட்டிக்கான முழுமையான தூரத்தையும் ஓடி முடித்து பார்வையாளர்களின் உற்சாகமான பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டார்.
21வயது பிரிவினருக்கான உதைபந்தாட்ட போட்டியில், பிரான்ஸ் தெரிவுஅணி இரண்டாவது தடவையாக கிண்ணத்தினை தமதாக்கிக் கொண்டது.
மென்பந்து துடுப்பாட்ட வீரர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுடன் தமிழர் விளையாட்டு விழா-2013 நிகழ்வுகள் நிறைவு பெற்றன. மென்பந்து துடுப்பாட்ட போட்டியில் இரண்டாவது தடவையாக பிரான்ஸ் யாழ்டன் அணி தமிழீழக் கிண்ணத்தை தமதாக்கி கொண்டது.
வளர்ந்துவரும் இளம் சந்ததியினரிடையே தாயகம் நோக்கிய தேடலை உண்டுபண்ணும் நோக்கில் ஒழுங்கமைக்கபட்ட இந்நிகழ்வானது, இன்றைய காலத்தின் தேவையாகும். இவ்விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் எமது நன்றியினையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழர்விளையாட்டு விழா-2013 ஏற்பாட்டுக் குழு
தமிழர் இல்லம் - சுவிஸ்
போட்டி முடிவுகள்
உதைபந்தாட்டம் 9 வயதுப்பிரிவு
1ம் இடம் : இளம் சிறுத்தைகள் விளையாட்டுக்கழகம் - சுவிஸ்
2ம் இடம் : ஒஸ்கா விளையாட்டுக்கழகம் - சுவிஸ்
3ம் இடம் : ஈழவர் விளையாட்டுக்கழகம் . சுவிஸ்
சிறந்த விளையாட்டு வீரர் : அபயகரன் பரம்சோதி - இளம் சிறுத்தைகள் வி.க
சிறந்த பந்துக் காப்பாளர் : சுபேஸ் சிவகுமார் - ஒஸ்கா வி.க
உதைபந்தாட்டம் 11 வயதுப்பிரிவு
1ம் இடம் : ஒஸ்கா விளையாட்டுக்கழகம் - சுவிஸ்
2ம் இடம் : தமிழ் யுத் - சுவிஸ்
3ம் இடம் : சிற்றிபோய்ஸ் - சுவிஸ்
சிறந்த விளையாட்டு வீரர் : ரவிக்குமார் கௌசிகன் - ஒஸ்கா வி.க
சிறந்த பந்துக் காப்பாளர் : அலெக்ஸ் - தமிழ் யுத்
உதைபந்தாட்டம் 13 வயதுப்பிரிவு
1ம் இடம் : ஒஸ்கா விளையாட்டுக்கழகம் - சுவிஸ்
2ம் இடம் : தமிழ் யுத் - சுவிஸ்
3ம் இடம் : இளம் சிறுத்தைகள் - சுவிஸ்
சிறந்த விளையாட்டு வீரர் : சூரியா தவராச - ஒஸ்கா வி.க
சிறந்த பந்துக் காப்பாளர் : ஆகாஸ் ஜெயகரன் - தமிழ் யுத்
உதைபந்தாட்டம் 15 வயதுப்பிரிவு
1ம் இடம் : றோயல் விளையாட்டுக்கழகம் - சுவிஸ்
2ம் இடம் : இளம் தென்றல் விளையாட்டுக்கழகம் - சுவிஸ்
3ம் இடம் : இளம் தமிழ் விளையாட்டுக்கழகம் - பிரான்ஸ்
சிறந்த விளையாட்டு வீரர் : யுடினாரடடயாi ரோ றோயல்
சிறந்த பந்துக் காப்பாளர் : ஐஅமழ - இளம்தென்றல் வி.க
உதைபந்தாட்டம் 17 வயதுப்பிரிவு
1ம் இடம் : இளம்சிpறுத்தைகள் விளையாட்டுக்கழகம் - சுவிஸ்
2ம் இடம் : தாய்மண் விளையாட்டுக் கழகம் - சுவிஸ்
3ம் இடம் : யங் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் - சுவிஸ்
சிறந்த விளையாட்டு வீரர் : Jeksmirpan Somy - இளம் சிpறுத்தைகள் வி.க
சிறந்த பந்துக் காப்பாளர் : சிமந்தன் தவராஜா- தாய்மண்
உதைபந்தாட்டம் 21 வயதுப்பிரிவு
1ம் இடம் : பிரான்ஸ் தெரிவு அணி  பிரான்ஸ்
2ம் இடம் : தாய்மண் விளையாட்டுக் கழகம் - சுவிஸ்
3ம் இடம் : கொலண்ட் தெரிவு அணி  நெதர்லாந்து
சிறந்த விளையாட்டு வீரர் : Maxime Anton RPegie - பிரான்ஸ் தெரிவு அணி
சிறந்த பந்துக் காப்பாளர் : Laisson Naguleswarpan - பிரான்ஸ் தெரிவு அணி
உதைபந்தாட்டம் வளர்ந்தோர் பிரிவு
1ம் இடம் : தமிழ் ஸ்ரார் விளையாட்டுக்கழகம்  ஜேர்மனி
2ம் இடம் : ஈழவர் விளையாட்டுக் கழகம் - பிரான்ஸ்
3ம் இடம் : நல்லூர்ஸ்தான் விளையாட்டுக் கழகம்  பிரான்ஸ்
சிறந்த விளையாட்டு வீரர் : ரிஷிகன் கெங்காதரன் - பிரான்ஸ் தெரிவு அணி
சிறந்த பந்துக் காப்பாளர் : துரைசிங்கம் தினேஸ் - பிரான்ஸ் தெரிவு அணி
சிறந்த இறுதிஆட்ட நாயகன் : எதிர்வீரசிங்கம் திலீபன்
உதைபந்தாட்டம் பெண்கள் பிரிவு
1ம் இடம் : வானவில் விளையாட்டுக்கழகம்  சுவிஸ்
2ம் இடம் : young Star விளையாட்டுக் கழகம் - சுவிஸ்
3ம் இடம் : Blue Flame விளையாட்டுக் கழகம்  சுவிஸ்
சிறந்த விளையாட்டு வீராங்கணை: LaraStalder - வானவில் வி.க
சிறந்த பந்துக் காப்பாளர் : சுபா ஆறுமுகம் - வானவில் வி.க கரப்பந்தாட்டம் 5பேர் கொண்டது
1ம் இடம் : தாய்மண் விளையாட்டுக்கழகம்  சுவிஸ்
2ம் இடம் : கைதடி விளையாட்டுக் கழகம் - லண்டன்
சிறந்த விளையாட்டு வீரர் : Selvaresh - தாய்மண் வி.க
Millar - கைதடி வி.க
கரப்பந்தாட்டம் 4பேர் கொண்டது
1ம் இடம் : தாய்மண் விளையாட்டுக்கழகம்  சுவிஸ்
2ம் இடம் : Zurich  B - சுவிஸ்
சிறந்த விளையாட்டு வீரர் : ரூபன் - தாய்மண் வி.க
கிளித்தட்டு- தாச்சி
1ம் இடம் : அமுதசுரபி லீஸ்ரால்  சுவிஸ்
2ம் இடம் : Super Kings - நெதர்லாந்து
கூடைப்பந்தாட்டம்
1ம் இடம் : SH HEAT
2ம் இடம் : BLUE FLAMES
தலையணைச்சண்டை
1ம் இடம் : திரு. கணேஸ்
2ம் இடம் : திரு.உதயகுமார்
3ம் இடம் : திரு.செல்வா
மென்பந்து துடுப்பாட்டம்
1ம் இடம் : யாழ்டன் விளையாட்டுக்கழகம் - பிரான்ஸ்
2ம் இடம் : LUCKY FRIENDS
இறுதி ஆட்ட நாயகன் : காண்டீபன் - யாழ்டன் வி.க
சிறந்த பந்து வீச்சாளர் : JERSI  LUCKY FRIENDS
சிறந்த துடுப்பாட்ட வீரன் : UPUL  LUCKY FRIENDS
தொடரின் சிறந்த விளையாட்டு வீரன் : ANU - யாழ்டன் வி.க
சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் : ஜெயகாந்தன் - யாழ்டன் வி.க






Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog