Monday 12 August 2013

காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழா நிறைவுநாள் நிகழ்வுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பங்குபற்றுதலுடன் நிறைவடைந்தன


  

காரைநகர் விளையாட்டுக் கழகங்களும் தியாகி சோபா அறிவாலயமும் இணைந்து நடாத்திய காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழா இன்றையதினம் மாலை இனிதே நிறைவடைந்தது.

முன்னதாக காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழாவின் நிறைவுநாள் போட்டிகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று காலை காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மைதானத்தில் சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைத்தார். முன்பதாக கல்லூரி வாயிலிலிருந்து கரகாட்டத்துடன் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்ட அமைச்சர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அரங்கில் ஆசியுரையை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டின் நிறைவுநாள் போட்டிகளை அமைச்சர் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

காரைநகரின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்கள் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்ற நிலையில் நிறைவு நாள் நிழச்சிகள் இன்றையதினம் முழுநாளும் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றையதினம் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுக்கு மேலதிகமாக திருமணமான, திருமணமாகாத ஆண்களுக்கிடையிலும் திருமணமான, திருமணமாகாத பெண்களுக்கிடையிலுமான கயிறுத்தல் போட்டி, 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான ஓட்டப்போட்டி, 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான பின்பக்கம் ஓடும் போட்டி, நடுவர்களாக கடமையாற்றியோருக்கான சங்கீத கதிரை போட்டி போன்ற வித்தியாசமான விளையாட்டுக்களும் பெரும் விறுவிறுப்புடனும் ஆரவாரத்துடனும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

மேற்படி போட்டிகளை மக்களோடு மக்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் மைதானத்தின் உள்ளேயே சென்று அருகிலிருந்து அவதானித்தமை மற்றுமோர் விடயமாகும்.

நிகழ்சியின் நிறைவாக இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் ஈபிடிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.வி.குகேந்திரன் (வீ.கே.ஜெகன்) சிறப்புரையாற்றியதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியின் உரையையும் நிகழ்த்தினார்.

அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈபிடிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.வி.குகேந்திரன் (வீ.கே.ஜெகன்), முன்னாள் நீதிபதி ஏகநாதன், பிரதேச கடற்படை கட்டளை அதிகாரி கொமாண்டர் கருணாசேன, சிற்றூர்தி சேவைச் சங்க தலைவர் அரியரட்ணம், தீவக பொலிஸ் பொறுப்பதிகாரி வீரசிங்க, காரைநகர் சமூர்த்தி முகாமையாளர் ஐங்கரன், தொழிலதிபர் மனோகரன், யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி யோகராஜா ஆகியோரினால் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மிகச்சிறப்பாக பெருமளவு பொதுமக்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழாவினை நடாத்துவதற்கு காரைநகர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஈபிடிபியின் காரைநகர் பிரதேச இணைப்பாளருமான வீ.கண்ணன் (தோழர் ரஜனி) முன்னின்று உழைத்து அயராது பாடுபட்டதை காரைநகர் வாழ் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினார்கள். கடந்தகால யுத்த அனர்த்தங்களினால் உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புத்தெழுச்சி ஊட்டும் வகையில் இவ்விளையாட்டு விழா அமைந்திருந்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

நிகழ்வுகளின் நிறைவாக பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர் கபிலனின் நன்றியுரையினை அடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் தேசியக்கொடி இறக்கப்பட்டதை அடுத்து இவ்வருடத்திற்கான காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழா இன்றையதினம் மாலை இனிதே நிறைவடைந்தது.



























Related Article:

1 கருத்துரைகள்:

vedahzaccardo said...

MOHEGAN RESORT CASINO - KARATO PULSA
MOHEGAN RESORT CASINO - 구리 출장안마 KARATO PULSA. KARATO PULSA. 부산광역 출장샵 KARATO PULSA. 오산 출장샵 KARATO PULSA. KARATO PULSA. KARATO PULSA. 포항 출장안마 KARATO PULSA. 목포 출장샵 KARATO PULSA.



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog