Monday 12 August 2013

மக்களின் வளமான வாழ்வுக்கு ஒளியேற்றுபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - முதன்மை வேட்பாளர் தவராசா தெரிவிப்பு

மக்களின் வளமான வாழ்வுக்கு ஒளியேற்றி வழிகாட்டிக் கொண்டிருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என ஐ.ம.சு.முன்னணியில் ஈ.பி.டி.பி.யின் சார்பில் முதன்மை வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சின்னத்துரை தவராசா தெரிவித்துள்ளார்.

மருதபுரம் முருகன் ஆலய முன்றலில் இன்றைய தினம் (11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியின் பயனாக இப்பகுதிக்கு மின்சாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. அந்தவகையில், வீடுகளுக்கு மட்டுமல்லாது மக்களது வாழ்வை மாற்றக் கூடிய திறம்படைத்தவர் அமைச்சர் அவர்கள் என்றும், கடந்த பல வருடங்களுக்கு மேலாக மின்சாரம் இல்லாது இருந்த நிலையில் இப்பகுதிக்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதில் மிகுந்த அக்கறையுடன் உழைத்தவர் என்றும் தெரிவித்தார்.

மின்சாரம் மட்டுமல்லாது வீதி போக்குவரத்து குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதார உரிமைகளுடன் எமது மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமென்பதே எமது விருப்பாகும்.

அந்த வகையில் மருதபுரத்தை மருதநகராக மட்டுமல்லாது யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தை அமைச்சர் அவர்களது வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக வளங்கொழிக்கின்ற பூமியாக மாற்றியமைப்போம் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதில் ஈ.பி.டி.பியின் மாகாண சபை வேட்பாளர்களான கந்தசாமி கமலேந்திரன் மற்றும் திருமதி ஞானசக்தி சீறிதரன் ஆகியோரும் உரைநிகழ்த்தினர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்துரையாற்றும் போது, வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களது கல்வியை மேம்படுத்தும் வகையில் 50 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டத்தின் அடிப்படையில் மாகாண சபை நிதியிலிருந்து மாதமொன்றுக்கு தலா 500 ரூபா வீதம் வழங்கவும், மருதபுரம் இறங்குதுறையை அமைக்கவும், மருதபுரம் பொது மண்டபத்திற்கென தற்காலிக கொட்டகை அமைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

மருதபுரம் முருகன் கோவில் கூரையை புனரமைத்து தருவதாக தெரிவித்த அமைச்சர் அவர்கள் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உவர்நீரை நன்னீராக்கும் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அதனூடாக வேலணை, ஊர்காவற்துறை, நெடுந்தீவு, காரைநகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

இதனிடையே மின்சாரத்தை தமது பகுதிக்கு கிடைக்க வழிவகை செய்த அமைச்சர் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

முன்பதாக காரைநகர் மருதபுரத்திற்கான புனரமைக்கப்பட்ட வீதியை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச இணைப்பாளர் வீ.கண்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்), ஈ.பி.டி.பியின் வலிகாமம் இணைப்பாளரும், வேட்பாளருமான சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) ஆகியோர் உடனிருந்தனர்.





















 


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog