Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Saturday, 8 June 2013

ரகுமான் இசை ஸ்லோ பாய்சன் பாடகர் கருத்தால் திடீர் சர்ச்சை

Rahman Music Slow Poison
ரகுமான் இசை ஸ்லோ பாய்சன் போன்றது என பாடகர் கமென்ட் அடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த ‘கஜினி’, ‘டெல்லி 6’, ‘சிவாஜி’, ‘ராவண்’, ‘ராஞ்சனா’ போன்ற இந்தி படங்களில் பாடல்கள் பாடி இருப்பவர் ஜாவித் அலி. இவர் தமிழில் ‘மாற்றான்’ படத்தில் இடம்பெற்ற ‘கால் முளைத்த பூவே’, விஜய்யின் ‘நண்பன்‘ படத்தில் இடம்பெற்ற ‘இருக்கானா’ உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் பாடி இருக்கிறார். இவர் கூறியது: ரகுமான் இசையில் அமைந்த பாடல்கள் ஸ்லோ பாய்சன் போன்றது. இது உடலையும், மூளையையும் மெதுவாக பாதிக்கும். உறுப்புகள் பாதிக்கப்பட்டபின் அதிலிருந்து தப்பிக்க முடியாது. ‘ராஞ்சனா’ படத்தில் இடம்பெற்ற ‘டம் டக்‘ பாடல் இந்த வகையை சேர்ந்தது. இளைஞர்கள், ஜோவியலான சண்டை, நட்பு, கொண்டாட்டம் என எல்லாவற்றுக்கும் இந்த பாடல் பொருந்தும். இவ்வாறு ஜாவித் அலி கூறினார். ரகுமானை புகழ வேண்டும் என்ற நோக்கில் ஜாவித் அலி அவரது இசையை ஸ்லோ பாய்சனுடன் ஒப்பிட்டதாக கூறப்பட்டாலும் ரகுமான் ரசிகர்களிடையே இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இணையதளத்தில் அவர்கள் ஜாவித் அலி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நன்றி:தினகரன்
Continue reading →

அஜீத் படத்துக்கு தலைப்பு வைக்க முடியவில்லையா? தல ரசிகர்கள் கொதிப்பு!


Ajith fans upset over ajith film title
சாதாரணமாக ஒரு படத்திற்கான கதையை உருவாக்கும்போதே அதற்கான தலைப்பு தானாக வந்து நிற்கும். ஆனால், பில்லாவைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டபோதும், இன்னும் அதற்கான தலைப்பை வைக்கவில்லை, ஆனால், படத்தின் கதை இணையதளம் சம்பந்தப்பட்டது என்பதை அறிந்த ரசிகர்கள் அப்படத்துக்கு வலை என்று எப்போதோ பெயர் வைத்து விட்டனர்.

இதையடுத்து விஷ்ணுவர்தனிடம் தலைப்பு குறித்து கேட்கப்பட்டபோது, அஜீத் படத்துக்கு வலை என்று பெயர் வைக்கவில்லை என்றார். சரி என்னதான் தலைப்பு வைப்பதாக உத்தேசம்? என்று கேட்டபோது, நானும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். மே 1-ந்தேதி வரும் அஜீத்தின் பிறந்த நாளின்போது அப்படத்துக்கான தலைப்பை கண்டிப்பாக அறிவிப்பேன் என்றார். ஆனால், அஜீத் பிறந்த நாள் எப்போதோ முடிந்து விட்டது. ஆனால் இன்னமும் தலைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை அவர். அஜீத்தின் 53வது படம் என்ற பெயரில் அப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார். இதனால் அஜீத்தின் ரசிகர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள். 

சரி, விஷ்ணுவர்தன்தான் இப்படி என்றால், அடுத்து அஜீத்தின் 54வது படத்தை இயக்கும் சிறுத்தை சிவாவும் படத்திற்கான டைட்டீலை அறிவிக்கவில்லை. இதனால் குழம்பிப்போயிருக்கும் ரசிகர்கள், இவர்கள் படம் ரிலீசாகும்போதாவது பெயர் வைப்பார்களா? இல்லை அஜீத்தின் 53வது படம், 54வது படம் என்றே வெளியிடுவார்களா? என்று ஒருவரைப்பார்த்து ஒருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நன்றி:தினமலர்
Continue reading →

Friday, 7 June 2013

சந்திரசேகருக்கு ரூ. 40 கோடிக்கு சொத்து: நடிகை லீனா மரியம் பால் வாக்குமூலம்!

மோசடி நபர் சுகாஷ் சந்திரசேகருக்கு ரூ. 40 கோடிக்கு சொத்து இருப்பதாக நடிகை லீனா மரியம் பால் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில் சில மாதங்களுக்கு முன்பு ரூ.19 கோடி மோசடி நடந்தது. இந்த வழக்கில் பாலசுப்பிரமணியம் என்பவரும், அவர் மனைவி சித்ராவும் கடந்த மார்ச் மாதம் சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடிக்கு துணை போனதாக அந்த வங்கி மேலாளர் ஜெகதீசன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், மோசடி செய்யப்பட்ட ரூ.19 கோடி பணத்தையும், பெங்களூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும், அவருடைய காதலி லீனா மரியம் பாலும் எடுத்துக் கொண்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் ஜெயக்குமாரை பற்றி விசாரணை செய்ததில் அவர் உண்மையான பெயர் சுகாஷ் சந்திரசேகர் என்பதும், அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
சந்திரசேகர் தொழிலதிபர் பாலசுப்பிரமணியத்துக்கு, கர்நாடக அரசிடம் இருந்து ரூ.140 கோடி மதிப்பிலான ஆணுறை தயாரிக்கும் ஒப்பந்ததை வாங்கி தருவதாக சொல்லி இருக்கிறார். அதற்கு கமிஷன் தொகையாக, வங்கியில் முறைகேடு மூலம் பெற்ற ரூ.19 கோடி பணம் சுகாஷ் சந்திரசேகருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல தாம்பரம் சேலையூர் புதிய பூபதிநகரைச் சேர்ந்த ஜவுளி நிறுவன உரிமையாளர் சக்கரவர்த்தியிடம் ரூ. 62 லட்சத்தை சந்திரசேகரும், அவர் காதலி நடிகை லீனா மரியம் பாலும் மோசடி செய்துள்ளனர்.
இதேபோல சக்கரவர்த்தியிடம் சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் பேசிய லீனா, கர்நாடக அரசின் மருத்துவத்துறை, போக்குவரத்துறை ஊழியர்களுக்கு சீருடைக்குரிய துணிகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் அவருக்கு கிடைத்திருப்பதாகவும், அதற்கு முன் பணமாக ரூ. 68 லட்சம் வங்கியில் செலுத்த வேண்டும் எனக் கூறினாராம்.
மேலும் அவரிடம், கர்நாடக அரசின் ஊரக வளர்ச்சித்திட்டத்துறை செயலர் ஜெயக்குமார் ஐ.ஏ.எஸ்., என சந்திரசேகர் பேசி, ரூ. 68 லட்சத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளனர்.
ரூ. 40 கோடிக்கு சொத்து: இந்நிலையில், கடந்த வாரம் லீனா மரியம்பாலை தில்லியில் சென்னை போலீஸார் கைது செய்தனர். லீனா மரியம் பாலை 4 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து, சென்னை குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை முதல் விசாரணை செய்தனர்.
இதில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. சுகாஷ் சந்திரசேகர் மோசடி மூலம் கிடைத்த பணத்தை பேரீட்சம் பழம் வியாபாரத்திலும், வைர நகை வியாபாரத்திலும் முதலீடும் செய்திருப்பதாகவும், அவ்வாறு ரூ. 40 கோடி வரை முதலீடு செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளாராம். இதேபோல வேறு சில தொழில்களிலும் அவர் முதலீடு செய்திருப்பதாக மரியம் பால் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
சந்திரசேகர் மீது பெங்களூரில் 20 மோசடி புகார்களும், தமிழகத்தில் 7 மோசடி புகார்களும், இதில் சென்னையில் மட்டும் 5 புகார்களும் உள்ளதாகவும் மரியம் பால் தெரிவித்தாராம். மேலும் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பேரன் எனக் கூறி என்னை ஏமாற்றி காதலித்தார். அதேபோல, ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ. படித்துள்ளதாகவும் கூறி சந்திரசேகர் ஏமாற்றிவிட்டார் எனவும் கூறினாராம்.
நன்றி:தினமணி
Continue reading →

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் விஜய்- சமந்தா ஜோடி

Vijay, Samantha pair in A.R. Murugadoss directed film
‘துப்பாக்கி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக இருக்கிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது ‘துப்பாக்கி’ ஹிந்தி ரீ-மேக்கில் பிசியாக இயங்கி வர, விஜய் ‘தலைவா’ படத்தின் வேலைகளை முடித்துவிட்டு, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் ‘ஜில்லா’வில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் இணையும் படத்தை லண்டன் கருணாஸ் பிரம்மாண்டமான முறையில் தயாராக்கிறார்.  இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தீபிகா படுகோனேயை நடிக்க வைக்க முயற்சி நடந்தது. ஆனால் அவரிடம் கால்ஷீட் இல்லாததால் அந்த வாய்ப்பு இப்போது ‘ஈ’ நாயகி சமந்தாவுக்கு கிடைத்திருக்கிறது. 
Continue reading →

2 தமிழ் நடிகர்களும் சிக்குகிறார்கள் நடிகை லீனா ஆபாச படத்தில் நடித்தாரா? திடுக்கிடும் வாக்குமூலம்

நடிகை லீனா ஆபாச படத்தில் நடித்தாரா? என்ற திடுக்கிடும் கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
வாக்குமூலம்
நடிகை லீனா போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். விசாரணையில் லீனா பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இந்த வழக்கை விசாரிக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:– நடிகை லீனா நல்ல குடும்பத்தில் பிறந்தும், தனது தவறான நடவடிக்கைகள் மூலம் இந்த நிலைக்கு தள்ளபட்டுள்ளார். அவரது காதலன் சுகாஷ் ஒரு மோசடிப் பேர்வழி என்று தெரிந்தும், அவனிடம் மனைவி போல வாழ்ந்துள்ளார். 3 முறை கர்ப்பமாகி கலைத்துள்ளார். அவனது மோசடி லீலைகளுக்கு துணை போய் இருக்கிறார்.
அவரது காதலன் சுகாஷ் தனது 17–வது வயதிலேயே மோசடிதொழிலை தொடங்கி விட்டார். சுகாஷ் பிளஸ்–1 வரை படித்தவர். சுகாசின் தாய்–தந்தையும் மோசடி பேர்வழிகள்தான். அவர்கள் மீது பெங்களூர் போலீசில் 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுகாசின் வங்கி கணக்குகளை ஆராய்ந்து வருகிறோம். மோசடி பணத்தில் 9 சொகுசு கார்கள் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் சொத்துக்கள் ஏதும் வாங்கி இருக்கிராறா? என்றும் லீனாவிடம் விசாரித்தோம்.
விமானத்தில்......
மோசடி செய்த பணத்தில் நடிகை லீனா, காதலனுடன் உல்லாச வாழ்க்கையை அனுபவித்துள்ளார். தனியாக விமானத்தை வாடகைக்கு எடுத்து, சொகுசாக இருவரும் சுற்றி உள்ளனர். லீனாவின் ஆபாச படங்களை கைப்பற்றி இருக்கிறோம். அவருக்கு சேலை போன்ற நல்ல ஆடைகள் எதுவும் இல்லை.  டெல்லியில் அவரது வீட்டில் சோதனை போட்ட போது, குட்டை பாவாடை போன்ற கவர்ச்சியான ஆடைகள் மட்டுமே இருந்தன. சுடிதார் கூட இல்லை. சென்னையில் இருந்து சென்ற பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தனது சுடிதாரை லீனாவுக்கு அணிய வைத்துதான் அழைத்து வந்தார்.
இதை வைத்து பார்க்கும்போது, லீனா ஆபாச படத்தில் ஏதும் நடித்துள்ளாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. அது பற்றி லீனாவிடம் விசாரித்தபோது, லீனா அழுது விட்டார். எனது வாழ்க்கையை சுகாஷ் சீரழித்து விட்டான் என்று மட்டும் தெரிவித்தார்.
2 நடிகர்கள்
2 தமிழ் நடிகர்கள் சுகாசுக்கு நெருக்கமாக இருந்துள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளோம். மேலும் 2 நாட்கள் மீண்டும் லீனாவை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அப்போது மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
நன்றி:தினத்தந்தி
Continue reading →



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog