நடிப்பைப் பொறுத்தவரை என்னுடைய ஆதர்சபுருஷர்களின் பட்டியலில் சிவாஜி,
நாகேஷ் இருவரும் முக்கியமானவர்கள். சிவாஜியின் இறப்பு எனக்குள் எந்தளவுக்கு
பாதிப்பை ஏற்படுத்தியதோ… அதே போல் நாகேஷின் மரணமும் என்னை நிலைகுலைய
வைத்திருக்கிறது. நாகேஷை ‘வாடா… போடா’ என்று வாஞ்சையாக அழைக்கும் உரிமை
படைத்த ஒரே நபர் கவிஞர் வாலி. அவரிடம் கேட்டால் நாகேஷ் நினைத்தால் என்னைப்
போல் பாடலை எளிதாக எழுதிவிடுவான் என்கிறார். நாகேஷை நாயகனாக்கி அழகு
பார்த்த என் குருநாதர் பாலசந்தரிடம் பேசினால் திரைப்படத்தை இயக்குவது
நாகேஷ்க்கு கம்பசூத்திரமல்ல என்று புகழ்கிறார். பல துறையில் உள்ள
வித்தகர்களாலும் நாகேஷின் புத்திசாலித்தனம் பிரமிக்கப்படுகிறது.
மேலும் படிக்க...