கடந்த வாரத்தில் பதிவுகள் தொடர்பாக மூன்று பதிவுகள் படித்தேன். ஒன்று அதிரடி ஹாஜா வின் "தமிழ்மணமும்,வாசகர் பரிந்துரையும், ஒரு முரணும்". மற்றொன்று ரசீம் கசாலியின் "இது தமிழ்மணம் பற்றிய அதிரடி ஹாஜா பதிவிற்கு பதிலடி பதிவல்ல." மூன்றாவது மதுமதியின் 'இப்படித் தலைப்பிட்டால்தான் ஹிட்ஸ் கிடைக்குமா?' அதிரடி ஹாஜா தனது பதிவில் "வாசகர் பரிந்துரையில் 7 ஓட்டுகளை பெரும் பதிவுகள் இடம்பெற்றுவருகின்றன....ஆனால் அந்த ஏழு ஓட்டில் நம்முடைய ஒரு ஓட்டை தவிர மீதி ஆறு ஓட்டுகள் அதாவது 6 பேர் பரிந்துரைக்கும் பதிவு எப்படி வாசகர் பரிந்துரையில் இடம்பெறலாம் மொக்கையான பதிவாக இருந்தாலும் நண்பர்கள் ஒட்டு போட்டுவிடுவதால் வாசகர் பரிந்துறையில் இடம் பெற்று விடுகிறார்கள் இதனால் வாக்கு பெற முடியாத புதிய பதிவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்று கூறுகிறார். அவர் சொல்வது உண்மை என்றாலும் பதிவுலகைப் பொருத்தவரை எனக்குத் தெரிந்து நெருங்கிய நண்பர்கள் கலந்து பேசி வலைப்பூக்கள் ஆரம்பித்து தங்களுக்குள் ஓட்டுப் போட்டுக் கொள்வது இல்லை. பதிவுலகில் நுழைந்த பின்னேதான் நண்பர்களாகிறார்கள். . ஒத்த அலைவரிசை உடையவர்கள் இணைந்து கொள்கிறார்கள். பரஸ்பரம் மற்றவர் பதிவுகளுக்கு கருத்திடுவதும் வாக்களிப்பதுமாக இருக்கிறார்கள்.பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு ஒட்டு போட்டது யார் என்று தெரியாமலிருக்கும். எனக்கு வாக்களித்த ஒரு சிலரை நான் பதிவர் சந்திப்பின்போதுதான் நேரில் பார்த்தேன்.
Related Article:

0 கருத்துரைகள்:
Post a Comment