Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Tuesday, 26 March 2013

நச்சு ஆலை ஸ்டெர்லைட்

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் தான் வெடிக்க காத்திருக்கும் வெடிகுண்டாக நச்சு ஆலை  ஸ்டெர்லைட் உள்ளது .
இந்த ஆலை யை மூட வெண்டும்.அகற்ற வேண்டும் மக்கள் வாழ்வை காப்பாற்ற வே ண்டும்  என்று தூத்துக்குடி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
ஆனால் மத்திய ,மாநில அரசுகள் இது பற்றி கண்டு கொள்ளவே இல்லை.

இந்தியாவில் எல்லா மாநிலங்களும் இந்த ஸ்டெர்லைட் ஆலையை இதன் நச்சுத்தன்மையை கணக்கில் கொண்டு  தங்கள் மாநிலத்தில் இயங்க அனுமதி மறுத்த போது இந்தியாவின் வீர மங்கை ஜெயலலிதாதான் தமிழகத்தின் முதல்வர்.அவர் வீரத்தை காட்டி பயப்படாமல் [போனால் மக்கள் உயிர்தானே போகிறது.ஆனால் வருவது...?என்ற கணக்கில் ]தமிழகத்தில் அதுவும் தூத்துக்குடி பகுதியில் இடம் ஒதுக்கி சிகப்பு கம்பளம் விரித்தார்.
பலன் அவருக்கும்,சசிகலாவுக்கும்,சிதம்பரத்துக்கும் [இதில் எல்லாம் ஒற்றுமையாக செயல்படுவார்கள்]வேதாந்தாவின் பங்குகள் பணபபெட்டியுடன் கிடைத்தது.
அப்போது முதல் இந்த ஆலை எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருகிறது.
அரசியல் கட்சியினரும் முதலில் போராடினார்கள் பின்னர் ஸ்டெர்லைட் ஆலை அவர்களை கவர்[த ]ந்ததால்  நழுவி விட்டனர்.
போராடிய மக்களை நடுத்தெருவில் விட்டதுடன்.சிலர் ஆலை  ஏகப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பையும் ,நல்ல வாழ்வையும் தருகிறதாக வேறு பேசவும்,சுவரொட்டிகளை அவ்வப்போது பணம் வரும் போதும்.மக்கள் எதிர்ப்பு போராட்டம் நடக்கும் போதும் ஓட்ட ஆரம்பித்து கைகூலிகளாகவே  ஆகி விட்டனர்.
 ஸ்டர் லைட் ஆலை இயங்க ஆரம்பித்தவுடனே அதன் பாதிப்பு தெரிய ஆரம்பித்து விட்டது.அருகில் உள்ள கிராமங்கள் நிலங்கள் விசத்தன்மையுடன் பாலையாகி விட்டது.செடிகள்-பயிர்கள் கருகி விட்டன.
அப்பகுதில் உள்ள குட்டைகளில் நீர் அருந்திய கால் நடைகள் நூற்றுக்கண க்கில் மடிந்து விழுந்தன.
ஆனால் அப்பகுதில் உள்ளவர்கள் கோரிக்கைகள்-குறைகள் ஆட்சியாளர்களின் காதுகளில் விழுவதே இல்லை.
தனது ஆட்சியில் ஜெயலலிதா அனுமதி கொடுத்து அடிக்கல் நாட்டியது முதல் அடுத்து வந்த கலைஞர் ஆட்சியிலும் ஆலை ஆட்சியினரால் பாதுக்காக்கப்பட் டதே  ஒழிய மக்கள் கோரிக்கையை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.இப்போது அரசியல் கட்சி என்று பார்த்தால் நல்ல கண்ணுவும் ,வைகோவும் தான் ,ச்டேர்லைடை எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.ஸ்டெர்லைட் டுக்கு எதிரான வழக்கில் வைகோ வாதாடியும் வருகிறார்.
இந்த ஆலையில் இருந்து விசா வாயுக்கள் வருவதையும்,நிலத்தடி நீர் விசமானதையும்,நிலங்கள் சாகுபடிக்கு பயனின்றி விசத்தன்மையுள்ளதாக மாறிவருவதாகவும் முதலில் அறிக்கை தந்த மத்திய அரசின் மாசு தொடர்பான ஆய்வு நிறுவனம் "நீரி"வழக்கு எதிர்ப்பு என்றானதும் அரசு துறைக்கே உரிய குட்டிக்கரணம் போட்டு ஆலைக்கு ஆதரவாக அறிக்கை தந்து மக்களை அரசின் பாதுக்காப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை தகர்த்து விட்டது.
ஸ்டெர்லை ஆலையால் சுற்றுப்புறம் மட்டும் உயிர் இழக்கவில்லை.மனிதர்களும் தங்கள் உயிரை இழந்து வருகிறார்கள்.அவ்வப்போது ஆலை வெளியிடும் நச்சுக்காற்றால் சிறு வயதினரும்-வயதானவர்களும் திடீரென இறந்து வருகிறார்கள்.
ஆலையில் தினசரி விபத்து வாடிக்கையான ஒன்று.வார,வாரம் யாரா வது தொழிலாளி இறந்து கொண்டிருக்கிறார்.அவர்களுக்கு விபத்து எற்பட்டால் உடனே மதுரை போன்ற வெளியூர் மருத்துவமனைக்கு கொண்டூ சென்று  விடுவார்கள்.இறந்ததும் அப்படியே வழியனுப்பி வைத்து விடூவார்கள்.90 விழுக்காடு ஒப்பந்த தொழிலாளர்கள்.அதுவும் வடமாநிலத்தில் இருந்து பிழைக்க வந்தவர்கள் என்பதால் இங்கு தமிழகத்தில் அதிர்வுகள் தெரியாதூ.இறந்தவர் குடு ம்பத்திற்கு ஒரு தொகை அவர்கள்வாயை அடைக்க கொடுத்தும் விடுகிறார்கள்.
அதையும் அதாண்டி மதாமாதம் ஒரு விபத்து என்ற பெயரில் ஸ்டெர்லைத செய்யும் கொலைகள் வெளியே  வந்து ம்விடுகிறது.அது அரசின்-காவல்துறையின் ஒத்துழைப்புடன் மறைக்கவும் பட்டு விடுகிறது.
இதை மறைப்பதிலும் -ஸ்டெர்லைட் பற்றிய எதிர்மறை செய்திகள் வந்து விடக்கூடாது என்பதில் ஆலையை விட பத்திரிக்கைகளும்-அரசும்தான் ஆர்வம் காட்டுகிறன.
தினத்தந்தி,தினகரன் ,மாலைமுரசு பொன்ற பத்திரிகைகள் மறந்தும் ஸ்டெர்லை ஆலை ஆளைக் கொன்று விட்டது.அதில் இருந்து விசா வாயு கசிவு என்று போடுவதில்லை.ஒரு ஆலையில் இருந்து கொஞ்சம் வாயு கசிவு ,ஒரு ஆலையில் வேலை பார்த்தவர் விபத்தில் மரணம்.இவ்வாறுதான்  செய்திகளை  வெளியிடுவார்கள்.
பத்திரிக்கை முதலாளிகளுக்கு ஸ்டெர் லைட் தரும் விளம்பரம்-நிரு பருக்கோ ஸ்டெர்லைட் தரும் புத்தாண்டு உடைகள்,காலண்டர்,டைரி ,இனிப்பு,அப்புறம் முக்கியமான கவர் ,இது தவிர அவ்வப்போது உற்சாகப்பான விருந்து,நல்ல நாள் -பொல்லாத நாள்களில் தரும் கவர்-அன்பளிப்புகள்,வெள்ளி,தங்க நாணயங்கள் போதாதற்கு விளப்பரங்க்கள் மூலம் கிடைக்கும் கழிவுத்தொகைகள் இவ்வளவு ஸ்டெர்லைட் தரும்போது வாயைத்திறக்க மனாசாட்சியுள்ள நிருபருக்கு முடியமா?ஸ்டெர்லைடில் இறந்த தொழிலாளியோ அல்லது இறக்க காத்திருக்கும் மக்களோ இப்படி அள்ளி தருவார்களா?
அதற்கு பதிலாக ஸ்டெர்லைட் மூலம் இந்த கிராமத்தில் இந்த நற்பணி செய்யப்பட்டது என்ற செய்திகள் மட்டும் பரவலாக வரும்.
இப்போது ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியின் போது தாமிரத்தாதுமணலில் தாமிரத்தை பிரிக்கும்போது தாமிரம் மட்டும் கிடைப்பதில்லையாம்.உடன் தங்கம்,பிளாட்டினம்,வெள்ளி போன்ற விலை மதிப்புள்ள உலோகங்களும் கிடைக்கும்.ஆனால் அவற்றை அரசுக்கு தெரியாமல் அவ்வப்போது கடத்தி விடுகிறார்கள்.இப்படி கடத்தும் போது பலமுறை பிடிபட்டும் இருக்கிறது.ஆனால் வழக்கம் போல் அரசும் ஸ் டெ ர்லைட்டும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் வழக்குகள் என்னவாயிற்று என்றெ தெரியாமல் பொய் விட்டன.வரி எய்ப்பு,வழமையான ஒன்று .இப்படி மக்களையும் ,அரசையும் ஒரே நேரம் ஏமாற்றி வரும் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவது அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள் ஒத்துழைப்புடன்தான்.
இரு நாட்களுக்கு முன் இந்த ஆலை செய்த வேலை.இப்போது இந்த ஆலைக்கு எதிராக மக்களை மீண்டும் போராட தட்டி எழுப்பியுள்ளது.
காரணம் தன் உற்பத்திக்கு அதிகமாக உள்ள விஷவாயுவை அவ்வப்போது திறந்து விடும்.அதுவும் அதிகாலையில்.ஒரு கன மீட்டருக்கு 80 மெக்ரோ கிராம் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றிக் கொள்ளலாம் என்று மக்கள் நல அரசு அனுமதி கொடுத்துள்ளது.
அப்படி திறக்கும்போதுதூக்ககலக்கத்தில்  கொஞ்சம் அதிகம் திறந்து விட்டது.
அன்று குறைவாக 65 மெக்ரோ கிராம் மட்டுமே கந்தக டை ஆக்சை டு வெளியேறி இருப்பதாக தமிழ் நாடு   மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பின்னர் தெரிவித்தார்.
ஆனால் அதற்கே தூத்துக்குடியின் பலபகுதிகளில் மக்கள் சுவாசிக்க முடியாமல்,துன்பப்பட்டனர்.இருமல்,மூக்கடைப்பு,உடல் அரிப்பு ,கண்களில் எரிச்சல் பார்க்கமுடியாமலும்-சுவாசிக்க முடியாமலும்-பே சக்கூட முடியாமலும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் தஞ்சம் புக அங்கு மருத்துவருக்கும் அதே தொல்லை.
இதை விட அபாயம்.செடிகள்,மரங்கள் கருகி விட்டது.ஸ்டெர்லைட் அருகில் உள்ள வீடுகளில் உள்ள மரங்கள் இலைகள் கருகி மொட்டையாகி விட்டன.
ஆனால் மாவட்ட ஆட்சியரோ அரசின் சொல்படியோ அல்லது ஸ்டெர்லைட் ஆளை சொல்லிக்கொடுத்தபடியோ
" ஒரு ஆலையில் இருந்து அனுமதித்த அளவை விட கொஞ்சம் குறைவாகத்தான் கந்தக் தை ஆக்சைடு வாயு வெளியேறியுள்ளது.அதனால் மக்கள் சிறிது பாதிப்புக்கு உள்ளானது உண்மைதான் .அதனால் மார்ச் 28-ம் தேதிக்குள் ஆலை நிர்வாகத்தினர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வாறு விளக்கம் அளிக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்."
-என்று அறிக்கை விட்டுள்ளார்.
முதலில் வழக்கம் போல் தனது ஆலையில் இருந்து எந்த வாயு கசிவும் இல்லை என்ற ஸ்டெர்லைட் பின்னர் வெறு வழியில்லாமல் வாயை மூடி க்கொண்டுள்ளது.வாயு வெளியேறுவதற்கு முதல் நாள்தான் ஆலையில் பாஸ்பரிக் அமிலத்தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி அதில் விழுந்து இறந்து போய் மக்கள் சாலை மறியல் செய்து ஓய்ந்திருந்தார்கள்.
ஆக .ஆலை என்ன விளக்கம் தரும்."நான்தான்  குற்றம் செய்து விட்டேன்.நான்தான் வாயுவை திறந்து அல்லது கசிய விட்டேன் என்றா? "
கண்முன்னே பல ஆதாரங்கள் கிடைத்தும் ஸ்டெர்லைட்  ஆலைக்கு ஆதரவாகவே அரசு நடந்து கொள்கிறது.இதில் மட்டும் என்ன விதி விலக்கு இருக்கும்.விசாரணை என்ற பெயரில் இந்த குற்றம் பல நாட்கள் கழித்திடும்.வழக்கம் போல் மக்கள் இச்சம்பவத்தை தங்கள் அன்றாட பணிகளில் மறந்திடுவார்கள்.அப்போது பெயருக்கு ஒரு சின்ன கண்டிப்புடன் ஸ்டெர்லைட் விட்டு விடப்படும்.அதுவும் பத்திரிக்கைகளை வராமல் ஸ்டெர்லைட் பார்த்துக்கொள்ளும்.அவ்ளோதான்.
அனுமதிக்கப்பட்ட கந்தக டை  ஆக்சைடு வாயுவை வெளி யெற்றும் 80 மேக்ரோகிராமில் 15 கிராம் பாக்கியிலேயே  இந்த பாதிப்பு என்றால்?
80 கிராமும் வெளியானால்???
இப்போது மாசுக்கட்டுப்பாடுக்கும் ,அரசுக்கும்  வர வேண்டிய கேள்வி .அனுமதிக்கப்பட்ட அளவு பற்றி மறு பரிசீலனை செய்யவது.அல்லது வாயுவின் கடுமை குறிப்பிட்டத்தை விட கடுமையான அடர்த்தியில் ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்து வழக்கம்போல் ஏமாற்றி வருகிறதா?என்பதை ஆய்வு செய்வது.!

இப்போது இந்த சம்பவத்தி னால் கொஞ்சம் ஓய்ந்திருந்த ஸ்டெர்லை எதிர்ப்பாளர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.கடையடைப்பு ஆர்ப்பாட்டம் என்று பரபரப்பாகியுள்ளனர்.
ஆனால் அது இந்த விலை போன அரசுகளை என்ன செய்யும்.?
அணில் அகர்வாலின் கவனிப்பை இந்த வாக்குகள் மட்டுமே போடும் மக்களால் தர இயலுமா?
மராட்டிய மாநில இரத்தினபுரி மக்கள் இதே ஸ்டெர்லைட் ஆலையை தங்கள் மண்ணில் இருந்து விரட்ட எடுத்த ஆயுதங்களை தமிழக மக்களும் எடுப்பதுதான் இந்த பிரச்னைகளுக்கு தீர்வாகுமா?
அதைத்தான் ஸ்டெர்லைட் அணில் அகர்வாலும்,மத்திய-மாநில அரசுகளும் விரும்புகின்றனவா?
Continue reading →

Friday, 15 March 2013

என்ன நியாயம்?"

"இத்தாலியை நம்பினாலே மோசம்தான்.
அதை இத்தாலி அரசின்  செயல் மீண்டும் நிருபித்து விட்டது.
போபர்ஸ்,ஹெலிகாப்டர் இப்போது கொலைகார கைதிகளை ஒப்படைக்க மறுக்கிறது.
இந்தியர்கள் இன்னமும் உசாராக வில் லை எனில்  வருகிறது நாட்டுக்கே கேடு.
 கேரளாவில்  இரு மீனவர்கள் படுகொலைக்கு காரணமானவர்களை திருப்பி ஒப்படைக்க வில்லை என்பதற்கு தூதரக உறவையே துண்டிப்பதாக பூச்சாண்டி காட்டும் இந்திய மன்மோகன் சிங் அரசு -ஈழத்தில் 70 ஆயிரத்துக்கு மேல் தமிழர்களை கொன்று  குவித்த கொலைகாரன் ராஜபக்சேவுக்கு மட்டும் வக்காலத்து வாங்குகிறதே?
என்ன காரணம்?
அது என்ன நியாயம்?"
 அது சரி.இப்போது இந்திய அரசு இத்தாலியுடனான தூதரக உறவுகளை துண்டிப்பதாக கூறப்படும் செய்திகள் அன்னை சோனியாவுக்கு தெரிந்துதான் வெளியாகு கிறதா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவில் சிட்டுக்குருவிகள் குறைந்து வருகின்றன. இந்த மார்ச் மாதம் 20ம் தேதியன்று 'உலக சிட்டுக்குருவிகள் தினம்' கொண்டாடப் படுகிறது.
நேச்சர் பார் எவர் சொசைட்டி என்ற இயற்கை பாதுகாப்பு அமைப் பும் (என்எப்எஸ்) பறவைகள் பாதுகாப்பு ராயல் சொசைட்டியும் இணைந்து உலக அளவில் சிட்டுகுருவிகளுக்கான பாதுகாப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. 
சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் இந்த விழிப்புணர்வு வீட்டு சிட்டுக்குருவிகளை மட்டுமல்லாமல் உலகில் உள்ள 26 வகை சிட்டுக் குருவி இனங்களை பாதுகாக்கவும் மேற்கொள்ளப்படுகிறது.
சிட்டுக்குருவி இனங்களை பறவை ஆர்வலர்கள் பார்த்து மகிழ்வதற்கும் வேர்ல்டு ஸ்பேரோ. ஓஆர்ஜி என்ற தளத்தில் காண்பதற்கு உலக சிட்டுக்குருவி தின செயலகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் கோர்டோ பேன் என்ற சிட்டுக்குருவியை பற்றிய படங்கள் இல்லை. சிட்டுக்கருவிகளை பற்றி பத்திரிகைகளில் எழுதுதல் சிட்டுக்கருவி களுக்கு வாழ்விடம் உருவாக்குதல் சிட்டுக்கருவிகளுக்கு போதிய கூடு அமைத்தல் சிட்டுக்குருவி சுற்றுலா நடத்துதல் அதற்கு உணவு நிலையங்கள் ஏற்படுத்துதல் போன்றவை மூலமாக அந்த சின்னஞ்சிறு பறவை இனத்தை பாதுகாக்க முடியும் என சிட்டுக்குருவி ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழருக்கு வந்த சோதனை?

தமிழர்களை பார்த்தாலே கொஞ்சம் வடக்கர்களுக்கு இளக்காரம்தான் போல்.
இதுவரை தமிழில் அதாவது சொந்த மொழிகளில் இ .ஆ.ப.[I.A.S ]தேர்வை எழுதலாம் என்று இருந்ததை மத்திய அரசுப்பணி தேர்வாணையம் இந்தி,ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே திறனுடன் எழுதும்படி மாற்றி விட்டது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தின் மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணி யிடங்கள் நிரப்பப்படுகின்றன. 
அதற்கான தேர்வு கள் முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு, நேர் முகத்தேர்வு என மூன்று கட்டங்களாக நடை பெறுகின்றன. 
இதில் பிரதானத் தேர்வுக்குரிய வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக் கும். 
அதற்குரிய விடைகளை தாய்மொழியில் அதாவது தமிழ் உள்ளிட்ட அப்பகுதி  மொழி களில் எழுதலாம் என்ற நடைமுறை தற்போது அமலில் உள்ளது.இப்போது அதில் மாற்றம் செய்து புதிய விதி கள் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள் ளன.
முதன்மைப் பாடத் தேர்வில் குறைந்தபட் சம் 25பேர் ஒரு மொழியில் தகுதி பெற்றிருந்தால் - அதாவது முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அந்தப் பகுதி  மொழி யில் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்.
 ஆனால் இந்த நடைமுறை இந்தி அல்லது ஆங்கிலத்துக் குப் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா போன்ற பல்வேறு தேசிய இனங் கள், மொழிபேசும் மக்களைக் கொண்ட துணைக் கண்டத்தில் அந்தந்த மாநில மொழி களில் மத்திய ஆட்சிப்பணி தேர்வுகளை எழுத ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் உரி மையைப் பறிப்பது எந்த வகையில் நியாயம்? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டா வது பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் தேசிய மொழிகள் எல்லாவற்றிலும் வினாக் களுக்கு விடையளிக்க வாய்ப்புத் தருவது தானே நியாயம். 
பட்ட வகுப்பில் மாணவர்கள் படித்த மொழி வழியாக மட்டுமே முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்பது இன்னொரு முட் டுக்கட்டை. 
இப்படிச் செய்வதன் மூலம் மாநில மொழிகளில் - மக்களின் தாய்மொழிகளில் முதன்மைத் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை மிகமிகக் குறை வானதாக அல்லது விரல்விட்டு எண் ணக்கூடியதாக மாறிவிடும். 
எந்த மொழியில் பட்டப் படிப்பு படித்தாலும் தங்கள் தாய்மொழி யில் பதில் எழுதுவதற்கு ஏன் தடைவிதிக்க வேண்டும்?
அதுமட்டுமின்றி தமிழ் இலக்கியத்தைப் பாடமாகப் படித்தவர்கள் மட்டுமே அதை விருப் பப் பாடமாக தேர்வு செய்ய முடியும் என்று மற் றொரு விதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 பட்டப் படிப்பில் வேறு பாடங்களை விருப்பப்பாடமாகப் படித்தவர்கள் தமிழ் இலக்கியத்தை விருப் பப் பாடமாக - முதன்மைத் தேர்வில் எழுதுவது மறுக்கப்படுகிறது. 
ஆனால் கடந்த காலங்களில் பட்டப்படிப்பில் வேறு பாடங்கள் படித்தவர்கள் முதன்மைத் தேர்வில் தமிழ் இலக்கியத்தை எடுத்து எழுதி சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ள னர்.
 தற்போதைய புதிய விதிகளின்படி தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டுமே தமிழில் எழுத முடியும் என்பதன்படி பார்த்தால் ஓரிரு மாண வர்கள் மட் டுமே தேர்வு எழுதும் தகுதியை பெற முடியும். 
அதனால் இனி  தமிழில் எழுத 20 பேர்கள் கூட  இனி தேர்வு எழத தேறமாட்டார்கள்.
ஆனால் இந்தி மொழிக்கு அந்த நிபந்தனை ஏது மில்லை. இது இந்தித் திணிப்பே.
முதல் நிலைத் தேர்வு உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளையும் அனைத்து மொழிகளிலும் எழுத வாய்ப்பளிக்க வேண்டும். விடையளிப் பது மட்டுமின்றி வினாத்தாளும் தமிழ் உள் ளிட்ட அனைத்து மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும். 
மிக முக்கியமாக பிரதானத்தேர்வில் ஆங்கிலத்துக்கு நூறு மதிப்பெண் அளிப்பது கைவிடப்பட வேண்டும். 
பணிக்குத் தேர்வு பெற்ற பின் மூன்று மாதத்தில் வேறு மொழிகள் கற்றுக்கொடுக்கப்படும்போது ஆங்கிலத்தையும் அவ்வாறு கற்க முடியும்.
Continue reading →

Sunday, 10 March 2013

இந்திய பொருளாதாரம்

ஒரு சின்ன பார்வை.                                                                                                       
நமது இந்தியாவை வழிகாட்டி நடத்தி செல்பவர்கள் சாமானியப்பட்டவர்கள் கிடையாது.
பொருளாதாரத்தில் புலிகள்.அதையே புளி போல் கரைத்து குடித்து கொட்டை போட்டவர்கள் .மன்மோகன் சிங் ,ப.சிதம்பரம்  என்றால் சும்மாவா?
அவரகள் தலை மையின் கீழ் இப்போதைய இந்தியா பொருளாதார வலிமையை பார்ப்போம்.
மொத்த வருவாயைக் காட்டிலும் மொத்த செலவினம் அதிகரித்துள்ளதால் நடப்பு 2012-13-ஆம் நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதமாகும்.
 நிதி பற்றாக்குறை அதிகமாக உள்ளதால் சர்வதேச தர நிர்ணய அமைப்புகள் இந்தியாவின் கடன் பெறும் தகுதியை குறைக்கும் என்ற அச்சம் எற்பட்டு ள்ள து. 
இந்த பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இந்தியாவின் முதல் பணக்காரராக இருந்து வரும் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.1.18 லட்சம் கோடியாக (2,150 கோடி டாலர்) உள்ளது. இது, நாட்டின் நிதி பற்றாக்குறையில் 24 சதவீதமாகும்.அவருக்கு மட்டும் இந்திய அரசு இதுவரை 1000 கோடிகள் வரிச்சலுகை ,மற்றும் வருமானத்தில் முறைகேடுகள் என செய்துள்ளது.
நடப்பு விலை அடிப்படையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.95 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. 
இந்தியாவில் உள்ள  55 ப காசுர  கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாகும். கடந்த 2011-ஆம் ஆண்டில் மெகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 55-ஆக இருந்தது. இது, 2012-ஆம் ஆண்டில் 48-ஆக குறைந்தது. இது, தற்போது மீண்டும் 55-ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் 2012-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மொத்த சொத்து மதிப்பு 3 சதவீதம் குறைந்துள்ளது.
நம் நாட்டில் "10 மெகா கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ.5.50 லட்சம் கோடியாகும். இதுவும் நிதி பற்றாக்குறையைக் காட்டிலும் ரூ.50,000 கோடி அதிகமாகும்".
இந்தியாவில் 55 மெகா கோடீஸ்வரர்கள் இருந்தா லும், உலகின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல், அசிம் பிரேம்ஜி ஆகிய மூன்று பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.2.71 லட்சம் கோடி (4,920 கோடி டாலர்) என்பது குறிப்பிடத்தக்கது. இது, நிதி பற்றாக்குறையில் 60 சதவீதமாகும்.
உலக பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் வணிக பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. 
அ தன்படி, நம் நாட்டில் 100 கோடி டாலருக்கும் (ரூ.5,500 கோடி) அதிகமாக நிகர சொத்து மதிப்பைக் கொண்டுள்ளவர்கள் 55 பேர்.
 இவர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் கோடி (18,900 கோடி டாலர்) ஆகும். இது, நம் நாட்டின் மொத்த நிதி பற்றாக்குறையான 5 லட்சம் கோடி ரூபாய்களை  காட்டிலும் 100 சதவீதம் அதிகமாகும்.
ஆனால் இதனை அதாவது நாட்டின் பற்றக்குறைகளை களைய இந்திய அரசு அதன் கடுமையான போக்குகளை இந்த பகாசுர பணக்காரர்களை விட்டு விட்டு வறுமையில் இருக்கும் மக்களையே மேலும் மானியங்கள் வெட்டு என்று இருக்கும் கோவணத்தையும் ஆட்டையை போட பார்க்கிறது.
அதே நேரம் தொழில் வளர்ச்சி என்று கூறிக்கொண்டு பகாசுர தொழிலதிபர்களுக்கு வரிச்சலுகை,இதர சலுகைகள்,முறைகேடுகள் என வாரி வழங்குகிறது. ஆனால் அந்த அமபானிகளொ அரசை வரிமுதல் அத்தனை விடயங்களிலும் ஏ மாற்றுகிறர்கள்.அது தெரிந்தே அரசும் மக்களை கசக்கி பிழிகிறது,சவ ஊர்வலம் தவிர அனைத்துக்கும் சேவைவரி என்று பிடுங்கும் அரசு பல கோடிகள் புழங்கும் சினிமாத்துறைக்கு சேவை வரி விளக்கை தருகிறது.
அன்றாடம் சாப்பிடும் சோற்றை பொங்க கூட ஆண்டுக்கு 6 எரிவாயு உருளை என்று வயிற்றில் அடிக்கிறது.
பண முதலைகளுக்கு மேலும் சலுகைகள்-சேவைகள் .
நடுத்தர மக்களுக்கு மேலும் -மேலும்  சேவை வரிகள்.
இதுதான் நேரு சொன்ன  காங்கிரசின் சோசலிசமா?

------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை விவகாரத்துக்காக உண்ணா நிலை போராட் டத்தில்  லயலோ கல்லுரி மாணவர்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
-
 விவசாயத்திலும் "நானோ"

"நானோ தொழில்நுட்பம் என்பது மூலக்கூறு அல்லது அணு அளவில் ஒரு பொருளினை மாற்றம் செய்வதாகும்". 
அத்தொழில் நுட்பம்  இப்போது பல துறைகளிலும் பெரும் புரட்சியையே செய்து வருகிறது.
இப்போது அத தொழில் நுட்பம் விவசாயத்திலும் தனது கரங்களைப் பதித்துள்ளது. 
இந்தியா விலேயே முதன் முதலாக தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை உருவாக்கியுள்ளது.
மண்வளத்தை பாதுகாப்பது பயிர் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.

 பயிருக்கு அளிக்கப்படும் சத்துக்களில் பெரும்பாலானவை களிமண்ணில் ஒட்டிக் கொள்வதால் பயிருக்கு சரியான விகிதத்தில் கிடைப்பதில்லை. 
ஆனால் நானோ தொழில்நுட்பத்தின்மூலம் இதனை மாற்ற முடியும். நானோ துகள்கள் களிமண்ணில் ஒட்டிக்கொள்வதால் பயிர்ச்சத்துக்கள் களிமண்ணில் ஒட்டுவது தடுக்கப்பட்டு பயிருக்கு தேவையான அளவு கிடைக்கிறது.
 நானோ உரங்களுக்கு ஜியோலைட் மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் முதற்கட்ட ஆராய்ச்சியில் நானோ உரங்களிலிருந்து பயிருக்கு தேவையான நைட்ரஜன் சத்து நாற்பது நாட்கள் வரையிலும் நானோ உரங்களிலிருந்து சீராக வெளியாகிறது. 


நானோ உரங்கள் பயிருக்கு தேவையான சத்துக்களை சரியான விகிதத்தில் தக்க முறையில் கிடைக்க வழிசெய்கிறது. மேலும் உரத்துகள்கள் நானோ படலம் கொண்டு பூசுவதால் சத்துக்கள் வெளியாவது தடுக்கப் படுகிறது. 
பயிர்களின் சரிவிகித சத்து தேவைக்காக எல்லாத்தேவையான சத்துக்களையும் உள்ளடக்கிய நானோ கம்போஸ்ட்டை உருவாக்க முடியும்.
விவசாயப் பல்கலைக்கழகத்தில் நானோ களைக்கொல்லிகள் உருவாக்கப் பட்டுள்ளன. களைக்கொல்லியின் மூலக்கூறுகளைத் தேவையான இடத்தில் வெளியிடுவதால் களைகளில் வளர்ச்சி கட்டுப்படுத்தப் படுகிறது. 

பாலிமர் பொதிந்த களைக்கொல்லிகள் மண்ணில் உள்ள ஈரப்பதத்திற்கேற்ப வெளியாகி அதிலுள்ள வேதிப்பொருட்களை விதைகளின் முளைப்புத்திறனைக் குறைத்துவருகிறது. இதன்மூலம் களைக்கொல்லிகளின் திறன் அதிகரிக்கிறது.
கார்பன் நானோ குழாய்கள் விதைகளின் தோலை விரிவடையச் செய்தும் நீக்கி கதவுகளாகச் செயல்பட்டு விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்கின்றன. இந்த கார்பன் நானோ குழாய்கள் மண்ணின் ஈரப்பதம் குறைவாக உள்ள நிலையிலும் முளைப்புத்திறனை அதிகரிக்கிறது.

 நானோ துகள்களை பயிர்களில் நோயின் தாக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தேவையான பூசனக்கொல்லியை தேவையான இடத்தில் வெளியிடச்செய்ய முடியும். இதன்மூலம் விளைச்சல் குறைவதைத் தடுக்க முடியும். 
நானோ சென்சார்கள் மூலம் பயிரில் உள்ள பிரச்னைகளையும் உடனடியாக தெரிந்துகொள்ளலாம். நானோ தொழில்நுட்பத்தின் மூலம் வேளாண் பொருட்களைத் தரப்படுத்துவதும் சாத்தியப்படுகிறது.
நானோ உயிரி தொழில்நுட்பத்தின்மூலம் உணவு-பயிர்ச்சத்துக்களுக்குத் தேவையான மூலக்கூறுகள், புரதத்தைக் கண்டு பிடிப்பதற்கான புதிய உபகரணங்கள் பற்றியும் விலங்குகளின் கழிவிலுள்ள நச்சான "பைட்டோ டாக்சிக்" நோய்க் காரணிகளைக் கண்டுபிடிப்பதும் சாத்தியமாகும்.ஏற்கனவே  நானோ தொழில்நுட்பம் உணவியல் துறையில் பெரும்பங்கு வகிக்கிறது.
மண், நீர் மாசுபடுவதை நானோ துகள்கள் மூலம் தடுப்பது குறித்து ஆராய்ச்சிகளும் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தகவல்: முனைவர் ப.முருகேசபூபதி
, துணைவேந்தர், த.வே.பல்கலைக் கழகம்,
 கோயம்புத்தூர்-641 003
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-- 
Continue reading →

Tuesday, 26 February 2013

சில அவலங்கள்

1,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள  பிரேரணை தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை பீதியடையத் தேவையில்லை என ஒருவர் மட்டுமே உறுப்பினராகவும் -தலைவராகவும் ,தொண்டராகவும் உள்ள இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை தோற்கடித்து இலட்சக் கணக்கான பொதுமக்களை மீட்டெடுத்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க பெரும்பாலான நாடுகள் தயாராக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால்  பிரேரணைகள் தொடர்பில் எந்தவித பீதியும் அடையத் தேவையில்லை. அவ்வாறு முக்கியமானது எதுவும் இல்லை எனவும் அவர் திருவாய் மலர்ந்துள்ளார்.
இவரை எந்த கிறுக்கனும் கூட ஆதரிப்பதில்லை என்றும் தெரிந்தே இவர் அவ்வப்போது தனது தத்துவங்களை உளறிக்கொண்டிருக்கிறார்.அவற்றை வெளியிடவும் சில பத்திரிகைகள் இருக்கிறது. 
சில நாட்களுக்கு முன்பு மாவீரன் பிரபாகரன் இளைய மகன் சிங்கள ராணுவத்தால் கொடுரமாகக் கொல்ல ப்பட்டதை  கூட நியாயப்படுத்தி இந்த அரசியல் ஞானி அறிக்கை விட்டிருந்தார்.பிரபாகரன் தீவிரவாதி கொடுரமானவர் அவர் மகனும் அப்படித்தானே இருப்பான் என்று அரிய ஆய்வை வெளியிட்டிருந்தார்.
இப்போது எங்கள் சந்தேகம் எல்லாம் சுப்பிரமணியன் சுவாமி அப்பா ஒரு கிறுக்கராகவா வாழ்ந்து மறைந்தார் என்பதுதான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இணையத்தளங்களை ஊடுருவி தாக்குபவர்கள் [ஹாக்கர்கள் ]இலங்கை யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்த குற்றங்கள் பற்றிய ஆவணப் படத்தை  பதிவேற்றம் செய்து இலங்கை ஊடக அமைச்சக  இணையத்தளத்தை தாக்கியுள்ளனர். 
“H4x Or HUSSY' என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள  இந்த  தாக்குதல் நடத்துபவர்கள், 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில்  இடம்பெற்ற கொடூரங்கள்  பற்றிய ஆஸ்திரேலிய ஒளிபரப்பு ஒன்றை இந்த இணையத்தில் பதிவெற்றியுள்ளதாக தெரிகிறது.
"அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்வதை நிறுத்து !    அல்லது எம்மிடமிருந்தான தாக்குதல்களுக்கு தயாராயிரு! என்ற செய்தியைஇணையத்தளத்தில் இடது பக்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உடனே அரசு செயல்பட்டு  இணையத்தளம் சீர் செய்யப்பட்டு விட்டதாக இலங்கை ஊடக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
2.மின் உற்பத்தியில் தமிழகத்தின் அக்கறை....?
  சரியாக தீபாவளி,பொங்கல்  போன்ற விழாக்காலங்களிலும்,முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளிலும் மட்டும் தமிழகம் முழுக்க மின்தடை இன்றி அல்லது அதிக நேரம் மின்சாரம் இருக்கிறது.அது முடிந்தவுடன் மீண்டும் அதிக நேரம் மின்தடை.காரண்ம் காற்றாலை கை கொடுத்தது என்று கூறிவருகிறார்கள்.அது என்ன பண்டிகைக்காலம் மட்டும் வீசும் காற்று - அப்போது மட்டும் மின்சாரம் தயாரிக்கும்  காற்றாலைகள் ?
இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி, தமிழகத்தில், 1,000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்தாலும், வெறும், 330 மெகா வாட் மட்டுமே, உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதனால், எரிவாயு மூலமான மின் உற்பத்தியில், தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்வது, மிகவும் எளிதானது என்பதோடு, விலை மலிவானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் எரிவாயு பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு, எரிவாயு பற்றாக்குறையே காரணம். ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் கிடைக்கும் எரிவாயுவை, குழாய்கள் மூலம், தமிழகத்திற்கு எடுத்து வர, 2006ல் திட்டமிடப்பட்டது. இதற்கான பணியை, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத்தது. 
ஆனால், எந்தப் பணியையும், ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தப்படி மேற்கொள்ளாமல், அப்படியே கிடப்பில் போட்டது. இதனால், எரிவாயு குழாய் அமைக்கும் ஒப்பந்தமே, கடந்த ஆண்டு, மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு விட்டது.புதிய ஒப்பந்தமும், இதுவரை போடப்படவில்லை. இப்போதைய கடும் மின் தட்டுப்பாடு காலத்தில் கூட தமிழக அரசு இது பொன்ற திட்டங்களை கண்டு கொள்ள வில்லை.நிறைவேற்ற எதுவும் செய்யவில்லை.
இந்த அதே நேரத்தில், காக்கிநாடாவில் இருந்து, குஜராத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டு, எரிவாயு எடுத்துச் செல்லப்படுகிறது. மகாராஷ்டிராவுக்கும், எரிவாயு முழு அளவில் கிடைத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை பயன்படுத்தி, குஜராத் மாநிலம், 5,133 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. அதேபோல், மகாராஷ்டிராவில், எரிவாயு மூலம், 3,427 மெகா வாட் மின்சாரமும், ஆந்திராவில், 3,370 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
படம்&தகவல்  நன்றி:தினமலர்.

தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை பயன்படுத்தி, 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, தஞ்சாவூரில் உள்ள கோவில் கலப்பலில், 107 மெகா வாட், பேசின் பிரிட்ஜில், 120 மெகா வாட், குத்தாலத்தில், 100 மெகா வாட், வழுத்தூரில், 186 மெகா வாட், கருப்பூரில், 119 மெகா வாட், வள்ளந்திரியில், 52 மெகா வாட், பி.நல்லூரில், 330 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு, மின் உற்பத்தியை செய்ய முடியவில்லை. வெறும், 390 மெகா வாட் மின்சாரம் மட்டுமே, தமிழகத்தில், எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தியில் தமிழகம் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதை அறியலாம். 
கேரள மாநிலம் காயங்குளத்தில், ஏற்கனவே, 700 மெகா வாட் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த நிலையமும், 1,000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுக்கு ஏற்ற வகையில், விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும்  செம்மேனி மற்றும் பிரம்மபுரம் என்ற இரண்டு இடங்களில், எரிவாயுவைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யும் நிலையங்கள், அமைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதிக மின்தடையால் திணறி வரும் தமிழ் நாட்டில் இங்குள்ள அரசு இந்த திட்டாங்க்கள் எதையும் நிறைவேற்ற முனைப்பு காட்டாமல் கண் மூடிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இன்றைய நிலவரம்.
மின் தடைக்கு காரணம் சென்ற ஆட்சியின் அலங்கோலம் என்று குற்றம் சாட்டிக்கொண்டு கையை கட்டிக்கொண்டிருப்பது சரியா?
அவர்கள் அலங்கோலம் என்றுதானே உங்களை மக்கள் கொண்டுவந்து ஆட்சி செய்ய கூறி வைத்திருக்கிறார்கள்.
 ஆனால் குற்றம் சாட்டுவதை தவிர மின்னுற்பத்திக்கு இதுவரை இன்றைய ஆட்சியாளர்கள் எ துவும் இதுவரை  செய்யவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
Continue reading →

உணர்ச்சி அற்ற

ஏற்கனவே காவேரி தண்ணீர் கிடைக்காமலும்,மழை ஏமாற்றி விட்டதாலும் விவசாயிகள் வாழ்க்கை வெறுத்து போயுள்ள இந்த காலத்தில் அவர்களுக்கு நிவாரணம் வழங்க வந்த அமைச்சர் மேலும் அவர்களை கடுப்படித்துள்ளார்.
தஞ்சாவூரில் சம்பா பயிர்கள் கருகியதற்கு இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சியில், வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம் விவசாயிகளை கடுமையாக திட்டிபேசியுள்ளார்.காரணம் அவர் அம்மாவின் புகழ் பாடி  இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்கிய போது அங்கு  கூடிய விவசாயிகள் யாரும் கைதட்டவில்லை .
திட்டும் அமைச்சர்.-படம்:தினகரன்.
அதனால் கோபம் தலைகேறிய  அமைச்சர் கைதட்டுமாறு கேட்டுள்ளார்.ஆனால் சீவனற்ற விவசாயிகள் கைத்தட்டியது ஓசையை அமைச்சர் விரும்புமளவு எழும் பாததால் அங்கு கூடியிருந்த விவசாயிகளை பார்த்து கடுமையாக ஏகத்துக்கும்  திட்டி பேசியுள்ளார்.
"அறிவு இல்லாதவர்கள், உணர்ச்சி அற்ற பிண்டங்கள்,அம்மா கொடுக்கும் பணத்தை
 வாங்கியும் நன்றியில்லாத ஜென்மங்கள்"
 என்று அமைச்சர் வைத்தியலிங்கம் கடுமையான வார்த்தைகளால் திட்டிமுடித்துள்ளார்.
இதைக்கண்ட அதிகாரிகளும் ,விவசாயிகளும்  அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.  மிக மோசமான வார்த்தைகளை அமைச்சர் பேசியுள்ளார்  என எதிர்த்து திட்டிக்கொண்டே கலந்தனர்.
அமைச்சர் வைத்தியலிங்கம் இன்று மரியாதையுடன் இருக்க காரணம் அம்மா இல்லை.விவசாயிகள் இவருக்கு போட்ட வாக்குகள்தான் அவரை அ மைச்சராக்கியுள்ளது.
அது போக இப்போது விவசாயிகளுக்கு கொடுத்த நிவாரணம் இவர் தனது கையில் இருந்தோ,இவர் வணங்கும் அம் மாவின்  சொத்துக்களை விற்றோ கொடுக்கவில்லை.மக்களின் வரிப்பணம்தான்.இப்போது அரசு நிதியாக மக்களுக்கு போ யுள்ளது.
இவர் அம்மாவின் கடைக்கண் கடாட்சம் வேண்டுமென்றால் வழக்கமான முறையில் 90பாகை குனிந்து கும்பிடட்டும்.மற்றவர்களையும் இவர் "இதய தெய்வம் அம்மா "என்று கூறும் போதெல்லாம் கைத்தட்டியாக வே ண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு .
அவர்கள் உணர்ச்சியற்ற பிண்டங்களாக இருக்கப் போய்தானே சென்ற முறை அம்மாவின் ஆட்சியின் அலங்கோலங்களை மறந்து உணர்ச்சியின்றி இந்த முறை ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளார்கள் என்பதை அமைச்சர் நன்கு புரிந்து கொ ண்டுள்ளா ர் .
ஏற்கனவே கொடுக்கும் நிவாரணம் உரம் வாங்கிய காசில் பாதிக்கு கூட வராது.வட்டிக்கு என்ன செய்ய என்று கலங்கிய நிலையில் காலம் தள்ளும் விவசாயிகளை அவர்கள் மனதை இன்னமும் கலங்க வைப்பது ஒரு அ மைச்சரின் வேலை அல்ல.
அமைச்சர் தனது தலைவியை புகழும் போதெல்லாம் கைத்தட்ட வே ண்டியது  ,மக்களின் கடமை அல்ல.
Continue reading →



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog