Showing posts with label மகாபாரதம். Show all posts
Showing posts with label மகாபாரதம். Show all posts

Thursday, 27 June 2013

ஏகலவ்யன், துரோணர், அர்ஜூனன் - ஆதிபர்வம் பகுதி 134


(சம்பவ பர்வ தொடர்ச்சி)

வைசம்பாயணர் சொன்னார், "இப்படி பீஷ்மரால் கொண்டாடப்பட்ட மனிதர்களில் முதன்மையான பெரும் சக்தியைக் கொண்ட துரோணர், குரு குலத்தவரின் வசிப்பிடத்திலேயே தங்கி, அங்கேயே புகழுடன் வாழ ஆரம்பித்தார். அவர் சிறிது காலத்திற்கு ஓய்வெடுத்த பின், பீஷ்மர் தனது பேரப்பிள்ளைகளான கௌரவர்களை அழைத்து, அவருக்கு சீடர்களாகக் கொடுத்தார். துரோணருக்கு பல மதிப்புமிக்க பொருட்களையும் பரிசாகக் கொடுத்தார் பீஷ்மர். அந்தப் பெரும்பலசாலி (பீஷ்மர்) பரத்வாஜரின் மகனுக்கு {துரோணருக்கு} நெல்லும், பலவித செல்வங்களும் நிறைந்த அழகான சுத்தமான வீடு ஒன்றையும் கொடுத்தார். அதன்பின், வில்லாளிகளில் சிறந்த துரோணர் மகிழ்ச்சியுடன் கௌரவர்களைத் (பாண்டு மற்றும் திருதராஷ்டிரனின் மைந்தர்களை) தனது சீடர்களாக ஏற்றுக் கொண்டார். அப்படி அவர்கள் அனைவரையும் சீடர்களாக ஏற்றுக் கொண்ட துரோணர், ஒரு நாள் அவர்களைக் (பாண்டவ மற்றும் கௌரவர்களைக்) கூப்பிட்டு, தனது காலில் விழுந்து வணங்க வைத்து, கனத்த இதயத்துடன், "நான் எனது இதயத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்தை வைத்திருக்கிறேன்.
Continue reading →

Tuesday, 11 June 2013

குந்தி சொன்ன பத்ரா கதை - ஆதிபர்வம் பகுதி 121

(சம்பவ பர்வ தொடர்ச்சி)

வைசம்பாயணர் சொன்னார், "இப்படிச்சொல்லப்பட்ட குந்தி தனது நாயகனான மன்னன் பாண்டுவிடம், அந்த குருக்களில் எருதைப் போன்றவனிடம், "ஓ அறம்சார்ந்தவரே, நீர் என்னிடம் இப்படிச் சொல்லுதல் தகாது. ஓ தாமரைக் கண் கொண்டவரே, நான் உமக்கே என்னை அர்ப்பணித்திருக்கிறேன். ஓ பெரும் கரம் கொண்ட பரதரே, பெரும் சக்தி கொண்ட நீரே என்னிடம் பிள்ளை பெற முடியும். அதன் பிறகு நான் சொர்க்கத்திற்கு உம்முடனே சேர்ந்தே வருகிறேன். ஓ குருகுல இளவரசரே, உம் அணைப்பில் என்னை ஏற்று பிள்ளைகளைப் பெறுவீராக. உமது அணைப்பைத் தவிர வேறு எந்த மனிதனின் அணைப்பையும் நான் கற்பனையில் கூட கருதமாட்டேன். உம்மைவிட உயர்ந்தவனாக எந்த மனிதன் உலகத்தில் இருக்கிறான்? ஓ அறம்சார்ந்தவரே, தாமரைக் கண் கொண்டவரே, நான் கேள்விப்பட்ட ஒரு புராண விவரிப்பை கேளும். நான் அதைச் சொல்கிறேன்.
Continue reading →



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog