Sunday, 30 September 2012

தென்தமிழின் பத்துக்கட்டளைகள்: 5


கட்டளை 5

எப்போதும் பிரயோஜனத்தையே குறியாகக் கொண்டு தொழும் நீவீர் அதைவிடுத்து அண்டத்திற்கே அதிபதியான இறைவனது பல்லாயிரம் நாமம் சொல்லி வாழ்த்தி புதிய வாழ்வு பெறுவீர்!

அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டு பல்லாயிரத் தாண்டென்மினே.



அகிலாண்ட கோடி பிரம்மாண்டங்களை தன் ஆளுமைக்குள் வைத்திருக்கும் அதிபதியை, தீமைகளனைத்தையும் (உம். அரசுர், இராக்கதரரைக் களைதல்) நீக்குகின்ற இருடீகேசனை ஆயிரம் நாமங்கள் சொல்லித்தொழும் தொண்டர் குலத்திடை சேர்ந்து வாழ்வு  பெறுவீர். இதற்கான உத்தம தகுதி இதுவரை காரியம் ஒன்றையேக் குறியாகக் கொண்டு வாழ்ந்த வாழ்வைப் புறம் தள்ளுதல் ஆகும்!

சிறப்புரை:

பல்லோரை அழைக்கும் பட்டர்பிரான் இப்பாசுரத்தால் இரண்டுவகையான மக்களை அழைக்கிறார். ஒருவர் தம் சொத்தைப் பறிகொடுத்து எமக்கு அதை மீட்டுத்தர மாட்டீரா? எனத்தொழும் கோஷ்டி. இதில் மற்ற தெய்வங்களை நம்பி உள்ளதையும் இழந்தோர், இராக்கர் போன்றோரிடம் சொத்து, பத்துக்களை இழந்தோர் என்போர் அடங்குவர். மற்றொரு கோஷ்டி, அண்டத்தையே ஆளும் அன்பரே! உமது போக்யத்தில் கொஞ்சமேனும் எமக்குக்கொட்த்து எம்மை சௌகர்யமாய் வைத்திருக்க மாட்டீரா? என சதா பொருள் வேண்டும் கோஷ்டியினர். இப்படி பிரயோஜனத்தையே நாடும் குலம் விட்டு, ஆயிரம் நாமங்கள் கொண்ட இருடீகேசனை வாழ்த்துவது ஒன்றிலேயே அனைத்து இன்பங்களையும் காணும் தொண்டர் குலத்தில் சேர்ந்து உய்வு பெருங்கள்! என்பதோர் கட்டளை!


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog