Sunday, 30 December 2012

டாப் – 10’ Dualsim ஸ்மார்ட் போன்கள் பாகம் - 2


மைக்ரோமேக்ஸ் சூப்பர்போன் கான்வாஸ் 2 A110 – 9,900/- ரூபாய்
Micromax Superfone A110 Canvas 2 1
இந்தியாவைச் சேர்ந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் டூயல்சிம் ஆன்ட்ராய்டு மொபைல். 5”இன்ச் IPS டச் ஸ்க்ரீன், 1ஜிஹெச் டூயல்கோர் ப்ராசஸர், 512எம்.பி.ரேம் 8மெகா பிக்சல் கேமரா, வீடியோகாலிங் செய்ய முன்பக்க வி.ஜி.ஏ கேமரா என எல்லா மல்டிமீடியா வசதிகளும் இதில் உள்ளன. கொடுக்கின்ற காசுக்கு ஏற்ற வசதிகள் உள்ள மொபைல் தான் என்றாலும் மைக்ரோமேக்ஸ் என்ற பெயரைத்தவிர இது முழுக்க முழுக்க ஒரு மலிவான சீன தயாரிப்பு தான்.
கார்பன் A30 – 11,500/- ரூபாய்
Karbonn A30 1
உண்மையிலேயே கொடுக்கின்ற காசுக்கு தகுந்த மதிப்புள்ள 5.9” இன்ச் என்ற பெரிய, அகலமான திரைகொண்ட மாடல் இது. 1ஜிஹெச் டூயல்கோர் ப்ராசஸர், லேட்டஸ்ட் ஆன்ட்ராய்டு வெர்ஷன் 4.0, 8 மெகா பிக்சல் கேமரா, வீடியோ காலிங் செய்ய முன்பக்க 1.3 மெகா பிக்சல் கேமரா என எல்லா வசதிகளும் உள்ளது.
ஆனால் என்னதான் பெரிய ஸ்கிரீனாக இருந்தாலும் இந்த மொபைலை சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் உடன் ஒப்பிட முடியாது ஏனென்றால் இந்த மொபைலும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு மொபைல்களைப்போல முழுக்க முழுக்க மலிவான சீன தயாரிப்பு தான்.
சாம்சங் கேலக்ஸி Music Duos – 8,900/- ரூபாய்
Samsung Galaxy Music Duos 1
சிறிய 3”இன்ச் மிகக் குறைவான ரெசுலூசன் கொண்ட ஸ்க்ரீன், 850மெகாஹெர்ட்ஸ் ப்ராசஸர், 512 எம்.பி.ரேம், 3 மெகா பிக்சல் கேமரா என வழக்கமான வசதிகளுடன் சாம்சங் வெளியிட்டிருக்கும் மாடல் இது. வீடியோ காலிங் செய்ய முன்பக்க கேமரா மற்றும் பின்பக்க ப்ளாஷ்லைட் ஆகியவை இல்லை.
நோக்கியா ஆஷா 308 – 5269/- ரூபாய்
Nokia Asha 308 1ஆன்ட்ராய்டு மொபைல்களில் ஆதிக்கத்தால் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நோக்கியா நிறுவனத்தின் ஜாவா இயங்குதளம் கொண்ட டூயல் சிம் ஸ்மார்ட்போன் இது.
3”இன்ச் கெப்பாசிட்டீவ் டச் ஸ்க்ரீன், 20எம்.பி மெமரி,64எம்பி ரேம் என ஜாவா போன்களுக்கே உரிய மெமரிதிறனுடன் வெளிவந்திருக்கிறது. இரண்டு சிம்மிலும் 3ஜி நெட்வொர்க் சப்போர்ட் இல்லை 2ஜி நெட்வொர்க் மட்டுமே சப்போர்ட் செய்யும். இத்துடன் 40 இலவச விளையாட்டுகளை தரவிறக்கம் செய்து விளையாடி மகிழலாம். பின்பக்க 2 மெகாபிக்சல் கேமரா மட்டுமே உள்ளது. பிளாஷ்லைட் மற்றும் 3ஜி இல்லாததால் வீடியோகாலிங் செய்ய முன்பக்க கேமராவும் இல்லை.
வீடியோகான் A30 – 7,500/- ரூபாய்
Videocon A30 1
இந்தியாவைச் சேர்ந்த வீடியோகான் நிறுவனத்தின் புத்தம்புதிய ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம் கொண்ட மாடல் இது. 4”இன்ச் கெப்பாசிட்டீவ் டச் ஸ்க்ரீன், 1ஜிஹெச் டூயல்கோர் ப்ராசஸர், பின்பக்க 5 மெகாபிக்சல் கேமரா, வீடியோகாலிங் செய்ய முன்பக்க வி.ஜி.ஏ.கேமரா என எல்லா வசதிகளும் உள்ளது. ஆனாலும் இந்த மாடல் மலிவான சீன தயாரிப்பு தான்.
Thanks: rightnews



Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog