Monday, 31 December 2012

3 மணி நேரத்தில் 300 கோடி ரூபாய்கள்

கமலின் விஸ்வரூபம் -


நண்பர் நாகராஜன் ரவி முகனூலில் வெளியிட்ட தகவல்.

உண்மையில் இன்றுவரை கமலுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்றவர்கள் இப்போது உண்மை நிலை அறிந்து மனதில் பிரமிப்பு அடைந்திருப்பார்கள்.
இத்துடன் உலக நாயகன் கமல்ஹாசன் ஓய்ந்தான் என்று மனதில்  எண்ணியவர்களூக்கு இது ஒரு சோகம் தரும் செய்திதான்.


300 Crores in 3 Hours - Content suitable for ALL - Viswaroopam Strategy from a MBA point of view............கமலஹாசன் என்னும் தமிழ்ச்சினிமாவின் முரட்டு பக்தன் பாகம் - 2
300 கோடி ரூபாய்கள் - 3 மணி நேரத்தில் -
அதுவும் இது ஏர்டெல் டிஷ் வசூல் மட்டும்தான்.
 இன்னமும் சண்,டிஷ் டி .வி,ரிலயன்ஸ் ,டாடா ஸ்கை ,விடியோகான் இருக்கிறது.
 என்னா காமெடி என்பவர்களுக்கு இப்போது புரிந்திருக்கு இதன் சூத்திரம். ஆம் இது தான் உலக சினிமாக்களின் முதன் ஃபார்முலா - None other by - நம்ம வசூல்ராஜாவின் சாதனை.

நேற்று ஏர்டெல் மட்டும் அறிவித்திருந்தது 30 லட்சம் பேர் முன் பதிவு என்று முப்பது லட்சம் X 1000 ரூபாயை பெருக்கினால் 300 கோடி ரூபாய்கள் இது ஒரு டி டி ஹெச் தான் இது மாதிரி இன்னும் 6 ஜாம்பவான்களின் புக்கிங்கை சேர்த்து கூட்டி கழிச்சி பாருங்கள் 300 கோடி நான் குறிபிட்டது கொசுறு தான். இந்தியாவின் 10% சதவிகத மக்கள் டி டி ஹெச்சுக்கு மாறியாச்சுனு இந்த புள்ளி விவரம் நன்கு வெந்த குழாய் புட்டு போல புட்டு புட்டு வச்சிருக்கேன். இது தான் உண்மை.

1000 ருபாயான்னு கேக்குறவங்களுக்கு - எந்த புது படம் வந்தாலும் தியேட்டர் காரர்கள் செய்யும் முதல் வேலை " 300 காம்போ பேக்கஜ் தான் 7 நாளைக்கு" அதாவது 120 டிக்கட் மிச்சம் 180க்கு காஞ்சு போன பாப்கானும்ம் கருப்பு கலர் பாண டின் தான் காம்போ பாக்கேஜ். இதில் 120 மட்டும் தான் வினியோகஸ்தர் மட்டும் த்யாரிப்பாளர்களின் கணக்கு. மூச்சுன்டை ஒரு முன்னுரு ரூவா. பார்க்கிங் ஒரு 120 ரூபாய். மூனு லிட்டர் பெட்ரோல் 210. மூனு பேர் படம் பார்த்தா கூட 1500 ரூபாய் பனால். இதை விட குடும்ப மொத்தமும் பார்த்தான் மொத்தம 1000 ரூபாய் செய்கூலி இல்லை சேதாரமும் இல்லை - வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசனுக்கு கவுரவம் செய்யும் உண்மையான ப்ரீமியர் ஷோ. தனிக்காட்டு ராஜாக்கள் ஒன்றாக சேர்ந்தால் நல்ல ஆர் ஓ ஐ(ROI) . இல்லைனா மறு நாள் தியேட்டர் காம்போ பாக்குடன் தான் பாக்கியம்.
நேற்று வரை கமலுக்கு காசு தேறாதுனு சொன்னவங்க 30 லட்சம் புக்கிங்னு அஃபிஷியல் தகவல் வந்த உடன் என் மீசையில் மண் ஒட்டலை ஆனாலும் ஆவான்னாலும்னு முகாரி ராகம் பாட ஆரம்பிச்சுட்டாங்க.
 என்னை பொறுத்த வரை 50 லட்சம்  பேர் பார்த்தா கூட 500 கோடி ரூபாய் 3 மணி நேரத்தில். 2000 பிரின்ட் பந்தா இல்லை, பர பர சொறி சொறி வெற்றினு பில்டப் இல்லை, பீராபிஷேகம் இல்லை, பீத்தல் இன்டர்வியு உங்கள் அபிமான தொல்லைக்காட்சியில் இல்லை ஆனா அத்தனை வீடுகளிலும் விஸ்வரூபம் ....... கரென்ட் மேட்டர்(EB) தான் ஒன்னும் சொல்ல முடியாத விஷயம்.........

கமலின் இந்த விஸ்வரூபம் ஹாலிவுட் கம்பெனி வரை பரவும் வருடம் 2013.
 சரித்திரம் உன் பெயர் சொல்லும் - இதை அருகில் இருந்து அன்பாய் , அதட்டலாய் சொல்லிய பல தருணங்களில் உங்களுடன் பழகியவன், பயணித்தவன் என்ற உரிமையில் "you've got what it takes - நன்றியுடன் நாகராஜன் ரவி.
திரையரங்கு காரர்களுக்கும் கைபிடித்தம் வராத வகையில் அனைத்து திரையரங்குகளிலும் ராஜ் கமல் நிறுவனமே விகிதாச்சார வகையில் படத்தை வெளியிடுகிறது.நட்ட வந்தாலும் அது ராஜ் கமலைத்தான் சீரும்.திரையரங்கைப் பாதிக்காது. பின்னரும் திரையரங்குக்காரர்கள் ஏன் பயத்தில் இருக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.?
கமல்ஹாசனுக்கு சிக்கல்கள் வரும்போது அதை மகிழ்வுடன் முதல் பக்கத்தில் வெளியிட்டு அரிப்பை தீர்த்துக்கொள்ளும் தமிழ் ஊடகங்கள்  இது போன்ற கமலின் சாதனை செய்திகளை மட்டும் வெளியிடாமல்  கண்ணை மூடிக்கொண்டிருப்பது வழக்கம் என்றாலும் இதுவரை வெளியிட்ட செய்திகளின் தொடர்ச்சியாக வெளியிடலாமே.ஏன் இந்த செய்திகளை வெளியிடவில்லை.இதுதான் தமிழகப் பத்திரிக்கை தர்மம்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் என்ற நட்சத்திர ஓட்டலில் படத்தின் வெளியீடு குறித்து முறைப்படி அறிவிக்கிறார் கமல். 
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திசேகர், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பெப்சி தலைவர் அமீர், இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா, மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதி திரையரங்க உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள்திருப்பூர் சுப்பிரமணியம் போன்றோர்  கலந்து கொண்டு கமலுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கிறார்கள். 
விஸ்வரூபம் படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வத்துடன் ராஜ்கமல் பிலிம்சுடன் ஒப்பந்தம் போட்டு வருகிறார்கள்.
 தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் திரையிட கமல் முடிவு செய்திருக்கிறார். 
கமலுக்கு பெருகி வரும் இந்த ஆதரவால் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நன்றி:  நாகராஜன் ரவி


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog