இந்தியாவில் எத்தனையோ பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன.
நடந்து கொண்டுமிரு க்கின்றன.நடக்கவுமுள்ளது.ஆனால் டெல்லி மாணவி பலாத்காரம் மட்டும் இப்படி கடும் விளைவுகளை எற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் 13 வயது சிறுமி பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டு
கொடுரமாக கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்.அதை இந்த ஊடகங்களோ இளைய தமிழ்
சமுதாயமோ கண்டு கொள்ளவில்லை. கற்பழிப்பில் கூட பாரபட்சமா?
சொல்லப்போனால் தூத்துக்குடி கற்பழிப்பு நிகழ்வு மிகக்கொடுமை.13 வயது
சிறுமி பள்ளிக்கு செல்லும் போது பட்டபகலில் பலாத்காரம்,கொலை
செய்யப்பட்டுள்ளாள்.
இப்போ து டெல்லி மாணவியை மத்திய அரசு சிங்க்கப்பூர் மருத்துவமனைக்கு மேல்
சிகிச்சைக்காக அனுப்புகிறதாம்.உடன் அவரின் பெற்றோர்களும் அரசு செலவில்
சென்று சிகிச்சை பெற உள்ளனர்.
| ஆபாச போராட்டம் |
ஆனால் இவர்களின் நீதி கேட்டு போராட்டத்தில் கற்களால் தலையில் தாக்கப்பட்டு இறந்த காவலர் குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது.
டெல்லி காவலர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை அவர் குடும்பத்திற்கு கொடுத்துள்ளனராம்.
இவர் கூட தாக்குதலில் இறக்கவில்லை.மாரடைப்பால் இறந்து போனார் என்று ஆம்
ஆத்மி கேஜ்ரிவால குழு கூறிவருகிறது.அப்படியாவது இக்கொலை தொடர்பாக கைது
செய்யப்பட தனது கட்சிக்காரர் விடுவிக்கப்படுவார் என்ற காரணம்தான்.
இன்னமும் இந்த சம்பவத்துக்கு சிலர் பொராடிக்கொண்டிருக்கிறார்களாம்.
அரசின் கவனத்தை,ஏன் ஒட்டு மொத்த மக்களின் கவனத்தை திருப்பியாகிவிட்டது.
பெண்கள் பாதுகாப்பின்மையை அரசுக்கு சுட்டிக்காண்பித்தாகி விட்டது.
குற்றவாளிகளை கைது செய்து உச்சக்கட்ட தண்டனைக்கும் உத்திரவாதம் பெற்றா யிற்று.
காவலர் ஒருவரை கொலையும் செய்தாகிவிட்டது.சில வாகனங்களை சீதமும்
படுத்தியாகிவிட்டது.மாணவிக்கு வெளி நாட்டில் சிகிச்சையும் வழங்க செய்தாகி
விட்டது.இன்னமும் போராட்டம் எதற்காக?
இன்ட நேரம் ஒரும் அமைச்சர் கூறியது பற்றிதான் 'இரவில் பெண்கள் தனியேஊரை சுற்றுவதும்,காரில் ஏற கூப்பிட்டவுடன் ஏறி செல்வதும் தவறு."
இதை கூறியதற்காக அவருக்கு எத்தனை கண்டனம்.தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கும் நிலை.
ஆனால் வர கூறியது மிக சரியான கருத்துதான் .
பெண்கள் தனியே சென்று வர இந்த நாட்டில் இன்னமும் பாதுகாப்பான சூழல்
உருவாகவில்லை.அவர்களுக்கு பாதுகாப்பு தர காவல்துறை ரோந்து என்பதே இப்பூது
கிடையாது.ஏ ன் காவல்துறையினரால் கூட பாலியல் பலாத்காரங்கள் பல இடங்களில்
நடந்துள்ளது நாம் செய்திகளில் படிப்பதுதான் .
இவை எல்லாவற்றையும் விட பெண்கள் ஆண்களுக்கு எல்லா விதத்திலும் சமம் என்று
சொல்லிக்கொடு பெண்கள் அமைப்புகள் போராடினாலும் உடல்வளுவைப் பொறுத்தவரை
பெண்கள் ஆண்களுக்கு சமமாக எதிர்ப்பை உடல் ரீதியாக காட்ட முடியாது.அவர்கள்
வலுவில் மெ ல்லினம்தான்.
அப்படி இருக்கையில் ஆண்களின் இது பொன்ற கொடுர செயல்களை எதிர்க்கும் வலுவில்லாமல் பெண்கள் பலியாகத்தான் செய் கிறார்கள்.
அந்த அமைச்சர் கூறிய அறிவுரையை மறுப்பதிற்கில்லை.இன்றைய இந்தியா
பெண்களுக்கு பாதுகாப்பை வழங்காத நாடாகத்தான் இன்றுவரை உள்ளது.பெண்கள்
தங்கள் பாதுகாப்பை இப்படித்தான் பெற்றுக்கொள்ள வெண்டிய கட்டாயத்தில்தான்
இருக்கிறார்கள்.
Related Article: