Monday, 31 December 2012

சட்டம் ஒரு இருட்டறை


சட்டம் ஒருஇருட்டறை 


இது ஆதியில் விஜயகாந்த் நடித்து இப்போது மறுபடியும் அதே கதையோட வேறு நடிகர்களை கொண்டு வெளிவந்த படம். ரீமா சென், எஸ்.ஏ.சந்திரசேகர் தவிர மற்றவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட புதுமுகங்கள்.

மையக் கதையில் ஒரு திருத்தத்தை மட்டும் செய்திருக்கிறார் இதன் இயக்குனரும், விஷுவல் கம்யூனிகேசன் பட்டதாரியுமான சினேஹா பிரிட்டோ.

சட்டம் ஒரு இருட்டறை என்பதால் படத்தையும் கொஞ்சம் இருட்டாகவே காண்பித்திருக்கிறார்கள். அதாவது வெளிச்சமாக இருக்க வேண்டிய காட்சியையும் ஏதோ புளு லென்ஸ் போட்டு மங்கலாக படம் பிடித்திருக்கிறார்கள். இதில் ஹாங்காக் நாட்டில் சுமார் 1/2 மணி நேரம் படம் படு வெட்டியாக நகர்கிறது. வசனத்திலும் காட்சி அமைப்பிலும் உயிரோட்டம் இல்லை. காமெடி டிராக் சொதப்புகிறது. பாட்டுக்கள் திணிக்கப்பட்டிருக் கின்றன. மனதில் ஏறவில்லை.

விஜயகாந்த்துக்கும், சந்திரசேகருக்கும் அன்றைய 'சட்டம் ஒரு இருட்டறை' ஒரு மிகப் பெரிய வெற்றிப்படம். ஆனால் இன்றைய படம், எப்படி ஒரு படத்தை ரீ-மேக் செய்யக் கூடாது என்பதற்கு ஒரு உதாரணம். இது யாருக்கும் வெற்றியாக அமையவில்லை என்பதுதான் நிதர்சனம்.

இனி மீண்டும் தலைப்புக்கு வருகின்றேன்.

'சட்டம் ஒரு இருட்டறை' என்பதன் பொருள் என்ன ?

அதாவது 'சட்டம் சூட்சுமமானது'என்பதுதான் இதன் பொருள். 'திருடுவது பாவம்' என்பது நன்னெறி. 'திருடினால் தண்டனை உண்டு' என்பது சட்டம். சட்டம் தனது பல்வேறு வகைமுறைகள் மூலம் மக்களின் நடத்தைகளை நெறிப்படுத்த கட்டளை இடுகிறது. அதை மீற முடியாது. சட்டம் ஒன்றை சொல்லிவிட்டால் அதற்கு என்னதான் பொருள் விளக்கம் கொடுத்து வழக்கறிஞர் வாதாடினாலும், சட்டமே நிலை பெறும். ஒரு வழக்கின் பிரச்சனை முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த ஒன்றாக இருக்கும் போது, அதை சங்கதி சார்ந்த பிரச்சனையாக மாற்ற முடியாது, நீதிமன்றமே நினைத்தாலும் கூட. ஆனால் ஒரு வழக்கின் பிரச்சனை, சங்கதி சார்ந்த பிரச்சனையாக இருக்கும் போது அதில் வக்கீலின் வாதம் விளக்காக அமையலாம். எனவே வழக்கில் சட்டப் பிரச்னையை கிளப்பி விட்டால், சட்டமே வெற்றி.....

விறுவிறுப்பான இந்தப் பதிவை மேலும் வாசிக்க

மேற்கண்ட இணைப்பின் மீது சொடுக்கவும். நன்றி.. 

வழக்குரைஞர் ஜெயராஜன்.



Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog