Sunday, 20 January 2013

கர்ப்பம் தரிக்க ஏற்ற காலம்


நமது கூகிள்சிறி தளத்தில் நண்பர் Nihla Sama "கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள வேண்டிய காலம்..!!" என்றொரு பதிவில் "எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம் . நாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்க சந்தர்ப்பம் அதிகம்?" என டாக்டரிடம் கேட்டிருந்தார். பதிலளிக்க அவரது இணைப்பைச் சொடுக்கினால் இயங்க மறுத்தது. ஆகையால், அதற்கான பதிலை நமது கூகிள்சிறி தளத்தில் ஒரு பதிவாகத் தரமுனைகின்றேன்.

முதலில் நான் டாக்டர் இல்லை. இணைய வழியில் உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்கும் ஒருவர்.

நண்பர் Nihla Sama அவர்களது கேள்வி புதுமணத் தம்பதிகளுக்கு வழிகாட்டும் பதிலைத் தருமாறு கேட்டு நிற்கிறது. புதுமணத் தம்பதிகளுக்கு எனது பதில் நன்மை தருமென நம்புகிறேன்.

மணமான கணவன்-மனைவி கர்ப்பம் தரிக்கக்கூடிய காலம் அறிந்து உடலுறவு வைத்துக்கொள்வதால் விரைவாகக் குழந்தையை எதிர்பார்க்கலாம். கர்ப்பம் தரிக்கக்கூடிய காலம் என்பது ஆணுக்கல்ல; பெண்ணுக்கே உரித்தாகிறது. ஆகையால், பெண்களே இதனைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

பெண்களின் கருப்பையில் உருவாகும் முட்டையும் ஆண்களால் வெளியேற்றப்படும் உயிரணுவும் இணைவதால் (உடலுறவு வைத்துக்கொள்வதால்) கர்ப்பம் தரிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது.
அப்படியாயின், அதற்கேற்ற காலம் எது?

பெண்ணிற்கு மாதவிடாய்(வீட்டுத்துரம்) வந்து ஐந்தாறு நாள்களுக்கும் அடுத்து வரவுள்ள மாதவிடாய்(வீட்டுத்துரம்) நாளிற்கு முன் ஐந்து நாள்களுக்கும் கணவன்-மனைவி உடலுறவை மேற்கொள்ளாது எஞ்சிய நாள்களில் உடலுறவைப் பேணினால் கர்ப்பம் தரிக்குமெனப் பலர் கூறலாம்.

ஆயினும், பெண்ணிற்கு மாதவிடாய்(வீட்டுத்துரம்) வந்து பன்னிரண்டாம் நாளின் பின் பதினெட்டாம் நாள் வரை கணவன்-மனைவி உடலுறவைப் பேணினால் கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. குழந்தையை எதிர்பார்த்து இருப்போர் இதனைக் கருத்திற் கொள்ள வேண்டும்.

13,14,15,16,17 ஆம் நாள்களில் கூடினால் குழந்தை கிடைக்க வாய்ப்பு உண்டு. அதற்காக மாதவிடாய்(வீட்டுத்துரம்) வந்து ஆறு நாள்களுக்குள் கூடாமல் எஞ்சிய நாள்களில் கூடினால் குழந்தை கிடைக்க வாய்ப்பு இல்லை என்பது பொய். இதனைக் கருத்திற் கொண்டு குழந்தை பெறுவதைப் பிற்போடுவோர் ஆணுறைகளைப் பாவிக்கலாம்; அல்லது மருத்துவரை அணுகலாம்.

உண்மை என்னவென்றால், மாதவிடாய்(வீட்டுத்துரம்) வந்து ஆறு நாள்களின் பின்னர் தான் பெண்களின் கருப்பையில் புதிய முட்டைகள் உருவாகும். ஆயினும், அவை பெரும்பாலும் 13,14,15,16,17 ஆம் நாள்களில் தான் கர்ப்பம் தரிக்கத் தகுதி பெறுகின்றன. சில முட்டைகள் முந்தியோ பிந்தியோ கர்ப்பம் தரிக்கத் தகுதி பெறுவதால் எதிர்பார்க்காத விதத்தில் ஏனைய நாட்களிலும் கணவன்-மனைவி உடலுறவைப் பேணினால் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு இருக்கிறது.

புதுமணத் தம்பதிகளே! இளம் இணையர்களாயின் ஓராண்டு மேற்படி முயற்சி செய்து பாருங்களேன். முப்பது அகவையைத் தாண்டினால் மேற்படி ஆறு மாத காலம் முயற்சி செய்து பாருங்களேன். மேற்குறிப்பிட்ட காலத்தில் கர்ப்பம் தரிக்க முடியாது போனால், உடனடியாக மருத்துவரை நாடவும்.



Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog