Friday, 25 January 2013

சிந்திக்க தெரிந்த சிலருக்காக ....,,


இசுலாமியர்கள் எதிர்க்கும் படி விஸ்வருபத்தில் இருப்பது என்ன?

இதோ படம் பார்த்த ஒருவெளி நாட்டில் உள்ள  இசுலாமியர் " பாரூக் அகமது " முகனூலில் எழுதியது.

விஸ்வரூபம்

படம் பார்த்துவிட்டேன் நான் .நான் எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் .ஆனால் எனது கருத்தை நான் பதியாமல் இருக்க முடியாது .
சிலர் அதிகப்படியாக என்னை திட்டலாம் .உங்களுக்கு நான் சொல்லும் பதில் படத்தை பார்த்துவிட்டு வந்து என்னை திட்டுங்கள் .
துப்பாக்கி படத்தை மனம் கொதித்து பதிவு போட்டவன் நான் .ஆனால் இந்த படத்தை பார்க்கும்போது எனக்கு எந்த இடத்திலும் அது போன்ற உணர்வு வரவில்லை .அதிகபடியா ஒரு ஆக்சன் படம் பார்த்த உணர்வு மட்டுமே வந்தது .ஏன் எனில் இது போன்ற ஆப்கான் தீவிரவாதம் பற்றிய கதை நிறைய ஆங்கிலத்தில் பார்த்தாச்சு .இன்னும் வந்துகொண்டே இருக்கு ஒவ்வொருவர் பார்வையில் .

கதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது .
நடனம் சொல்லிகொடுப்பவராக இருக்கிறார் கமல் .அவருடைய மனைவியை வேலை பார்க்கும் முதலாளி விரும்புகிறார் .மனைவிக்கும் அவர்மேல் ஆசையிருக்கிறது காரணம் கமல் வயதானவர் பழக்கவழக்கம் பெண் சாயல் கொண்டவர் .கணவனிடம் இருந்து விலக ஒரு துப்பறியும் நிபுணரை வைத்து கணவனின் துப்பறிய அனுப்புகிறார் . கமலை அவர் பின்தொடரும்போது கமல் ஒரு முஸ்லிம் என கண்டறிந்து மனைவியிடம் தெரியபடுத்துவார்.துப்பறியும் நிபுணர் கமலை பின் தொடரும்போது இன்னொருவர் அறையை திறக்கமுர்ப்படுகிறார் .அப்பொழுது அங்கு உள்ளவரால் தாக்கபட்டு இறக்கிறார் .இறந்தவரின் டைரிய படிக்கும்போது கமல் மனைவி பெயர் கமல் பெயர் ,கமல் மனைவியின் முதலாளி பெயர் என இருக்கும் .மனைவியின் முதலாளி ஆப்கான் தீவிரவாதி உமர் தொடர்பு உடையவர் .உடனே அவர்கள் கமல் வீடு தேடி வந்து கமலையும் அவர் மனைவியையும் கடத்தி சென்று கொடுமை படுத்துகின்றனர் .

அதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது என சொல்கின்றனர் .அப்பொழுது உமரிடம் இருந்து போன் வருகிறது .கமலை போட்டோஎடுத்து அனுப்ப சொல்கிறார் .போட்டோ வந்தவுடன் போனில் சொல்கிறார் எனக்கு கமல் உயிரோடு வேண்டும் என .அப்பொழுது அங்கு இருக்கும் ஒருவரை சுடுகின்றனர் .கமல் நான் அவர்களுக்காக பிரேயர் செய்கிறேன் என சொல்வார் .பிரேயர் பண்ணும்போது அங்கு இருக்கும் எல்லோரையும் தாக்கி விட்டு அங்கு இருந்து மனைவியை காப்பாற்றி கூட்டி செல்வார் .அந்த இடத்திற்கு வரும் உமர் கமல் அல்கய்டாவில் பயிர்ச்சி பெற்றவர் என்பார் .இதன் பின்பு உமர் பார்வையில் ஆப்கானில் கதை நடக்கும் .

கதை இந்திய உளவுத்துறையில் உள்ள தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆப்கான் தீவிரவாத கும்பலில் சேர நேரிடுகிறது .அங்கு உமர் என்பவர் மூலம் ஆயுத பயிர்ச்சி பெறுகிறார் .மேலிடத்தின் உத்தரவு படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்னல் கருவி ஒன்றை இன்னொருவர் பையில் வைத்து விடுவார் .அதை வைத்து அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்து சுடுவார்கள் .அதன் பின்பு சிக்னல் வைத்தவர் என்ற காரணத்திற்க்காக இன்னொருவரை தூக்கில் போடுவார்கள் .

இது போல கதை நகரும் .படம் ஆப்கானின் அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதம் பற்றி பேசுகிறதே தவிர தமிழ் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி பேசவில்லை .எந்த தமிழ் முஸ்லிமையும் மூளை சலவை செய்வதாக காட்டவில்லை .

கமல் முதன் முதலில் உமரை சந்திக்கும்போது எப்படித்தமிழ் பேசுறீங்க என கேட்க்கும்போது நான் ஒரு வருடம் கொயம்புத்துரிலும் மதுரையிலும் சுற்றி திரிந்தேன் என்பார் .
இங்கே எந்த இடத்திலும் பயிற்ச்சி கொடுத்தேன் என சொல்லவில்லை .

அடுத்து உமர் கமலை வைத்துக்கொண்டு தன் மகன் கண்ணை கட்டி துப்பாக்கியில் கையை வைத்து இது என்ன என்பார் .அவர் அதை சரியாக சொல்வார் .

இந்த இரண்டு காட்சிகள் பார்த்து முஸ்லிம்கள் கொதிப்படைவார்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை .

அதே போல கமல் மனைவிக்கு கமல் ஒரு முஸ்லிம் என்பதே தெரியாது.
தன் பனியின் பொருட்டே கமல் அவரை கல்யாணம் செய்து இருப்பார் .
கதையோடு பார்த்தால் அதை யும் தவறாக சொல்லமுடியாது .

கடைசியாக ஒன்று தடுத்து நிறுத்தவேண்டிய துப்பாக்கி படத்தை விட்டு
விட்டோம் .

நான் இதை எழுதியதால் என் மேல் சிலருக்கு கோபம் இருக்கலாம் .ஆனால் உண்மையை பேசாமல் இருக்கமுடியாது'
 
நன்றி:பாருக் முகமது. 
 
இது  படித்த பின்னரும் மத அரசியல்வாதிகளிடம் சிக்காமல் சிந்திக்கும்பொதுவான  இசுலாமிய நண்பர்கள்  எதிர்ப்பாளர்களின் உள்நோக்கம் பற்றி சிந்தித்து கண்மூடித்தனமான விஸ்வரூப எதிர்ப்புக்கு எதிராக இருக்க வேண்டும் .90 கோடிகள் பணத்தை செலவிட்டு தொழில் ரீதியாக படம் எடுப்பவர்கள் இப்படி மதம் என்றால் நுண் உணர்வுகளுடன் இருப்பவர்களை   காயப்படுத்துவது போல் எடுத்து நட்டப்படுவார்களா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------

தடைக்கு தடை ...,



  விஸ்வரூபம் படம்தான் இன்றைய செய்திகளின் விஸ்வரூபம்.
இசுலாமிய  இயக்கங்களின் மனுவை மட்டும் வைத்துக்கொண்டு அரசு தடை விதித்தது சரியான செயலாகத் தெரியவில்லை.
முன்னதாக படத்தை பார்த்து விட்டு மனுவில் கூறியபடி மதத்தை இழிவுபடுத்தியிருந்தால் தடை விதித்திருக்க வெண்டும்.அதுதான் நடைமுறையும் கூட.அவசரமாக தடை விதித்ததன் பின்னணி அரசியலாகத்தான் தெரிகிறது.
தற்போதுள்ள இசுலாமிய கட்சிகள் கூட்டணி தொடர வேண்டும்.தன்னை இசுலாமியர்களின் காப்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்பதுதான் பின்னணியின் முன்னணிக்காரணம்.
அரசு உள்துறை செயலருக்கு சட்டம் ஒழுங்கு பற்றிய அக்கறை இருக்க வெண்டும்.இருப்பது சரிதான்.அதற்காக இந்த படத்தை தடை செய்ய வெண்டும் என்று ஒரு சிலர் வந்து மனு கொடுத்தவுடன் தடை என்று மதியமே அரசாணை பிறப்பிப்பது சரியல்ல.
படத்தை அவர் பார்த்திருக்க வெண்டும்.
அல்லது எதிர் மனுதாரை விசாரித்திருக்க வே ண்டும். திரைப்படத்தணிக்கை குழு படத்தை பார்த்து தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கியுள்ளது.அப்படி என்றால் ஆட்சேபகரமான விடயங்கள் இருக்காது --இல்லையா என்று  விசாரித்திருக்கலாம்.எந்த நடைமுறையும் இந்த விஸ்வரூபத்தில் கடை பிடிக்கப்படவில்லை.இது அரசின் தடையில் உள்நோக்கம் கற்பிக்க வைக்கிறது.
தங்களுக்கு பிடிக்காதவர்களின் படத்துக்கு கூட்டமாக வந்து மனு கொடுத்தால்  அதற்கெல்லாம் தடை விதித்து விடுவார்களா?
தோட்டத்தின் தலையீட்டால்தான் இந்ததடை  அவசரமாக விதிக்கப்பட்டுள்ளது.
இசுலாமிய சகோதரர்களின் வாக்கு வங்கி மட்டுமல்ல.
 ஜெயா டி . வி.க்கு  படத்தை வாங்கியும் படம் டிடி எச் களில் ஒளிபரப்பினால் தனது வருமானம் பாதிக்கும் என்ற காரணம்.சன் டிடி எச் படம் ஒளிபரப்ப வாங்கியுள்ளது.
உதய நிதி ஸ்டாலின் உட்பட சில திமுகவினர் விநியோக உரிமையை வாங்கியுள்ளது.போன்ற கண்ணூறுத்தல்கள் .
அதுமட்டுமல்ல கமல்ஹாசன் தன்னை  சந்தித்த கையோடு கருணாநிதி  கலந்து கொண்ட சிதம்பரம் விழாவில் தனது பிரதமர் கனவை கலைக்கும்படி வேட்டி கட்டிய தமிழர் சிதம்பரத்துக்குத்தான் பிரதமர் ஆகும் அனைத்து தகுதிகளும் இருக்கிறது என்று பேசிய கருணாநிதியின் வார்த்தைகளை ஆமோதித்து மேடையில் கைதட்டியது. போதாதா விஸ்வரூபத்துக்கு தடை விதிக்க காரணங்கள்.? இசுலாமிய நண்பர்கள் எதிர்ப்பு மனு ஒரு பிடியாக கிடைத்துவிட்டது.
இடையில் விளம்பரப்போராளி சீமான் தனது வழக்கமான அவல வாயைத்திறந்துள்ளார்.படத்தை பார்க்காமலேயே அதற்கு தடை சரிதான் என்று முழங்கியுள்ளார்.ஒரு திரைப்பட இயக்குனராக இருந்து கொண்டு இப்படி முட்டாள்தனமாக அறிக்கை படத்தை பார்க்காமலேயே விடுகிறார்  சீமான்  .
ஈழத்தமிழர்களை வைத்து நடத்திய அரசியல் கட்சிக்கடை வியாபாரம் இல்லாததால்  இப்போது வேறு திசைகளில் திருப்பித்தான் காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது.அம்மாவுக்கு சிங்கியும் அடிக்க வேண்டியிருக்கிறது.
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வே ண்டிய அரசே ஒரு சார்பாக தடை விதித்தது அரசியல் காரனங்களால்தான்.
இப்போது விஸ்வரூபம் நீதிமன்றம் போய்விட்டது.
நீதிபதி படத்தை பார்த்து விட்டு தடைக்கு தடை பற்றி பார்க்கலாம் என்றுள்ளார்.
அதுதானே முறையாக இருக்கவும் செய்கிறது.
கமலஹாசன் அரசை எதிர்த்து நீதிமன்றம் போவது தோட்டத்தை கொஞ்சம் அல்ல ரொம்பவே கோபப்படுத்தும்.
திரையரங்கு,விநியோகத்தர்கள்,இசுலாமியர்களுடன் பிரச்னைகளை சந்தித்த கமலுக்கு இப்போது அரசுடனும் போராட்டமா?
suran
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 கமல்ஹாசனின் அறிக்கை:
 ---------------------------------------------------------
'என்னுடைய விஸ்வரூபம் படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாசார தீவிரவாதம் தடுத்த நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக சட்டபூர்வமான நடவடிக்கைகளை நான் நாடவுள்ளேன்'
  எனக்கும் எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும்  அதே நேரத்தில்  எனது படம் எந்த வகையில் இசு லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை.
அச் சமூகத்தினருக்கு ஆதரவான எனது அறிக்கைகள், பேச்சுகள் அனுதாபியாக என்னை முத்திரை குத்தியுள்ளன. அதேசமயம், ஒரு நடிகனாக எது மனிதாபிமானமோ அதற்காக நான் பலபடி மேலே  போய் குரல்கொடுத்துள்ளேன்.
மேலும் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறேன். ஒரு மதத்தின் உணர்வுகளை, மதத்தை நான் புண்படுத்தி விட்டதாக என்மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் என்னைக் காயப்படுத்தியுள்ளதோடு அதை நான் ஒரு அவமரியாதையாகவும் கருதுகிறேன்.
சில சிறிய குழுக்கள் தங்களது அரசியல் இலாபத்துக்காக  இரக்கமே இல்லாமல் என்னை ஒரு வாகனமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது எனது கருத்து. ஒரு பிரபலத்தைத் தொடர்ந்து குறி வைத்து இப்படிக் காயப்படுத்துவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது.

 எந்த ஒரு நடுநிலையான முஸ்லிமும் தேசபக்தி உள்ள முஸ்லிமும் இந்தப் படத்தால் நிச்சயம் பெருமைப்படச் செய்வார். அதற்காகவே இந்தப் படமும் எடுக்கப்பட்டுள்ளது.
 இப்போது நான் சட்டத்தையும் யதார்த்தத்தையும் நம்பி நிற்கப் போகிறேன். 
இதுபோன்ற கலாசார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
 இந்தச் சந்தர்ப்பத்தில் இணையத்தளம் மூலம் எனக்கு ஆதரவாக எழுந்தோருக்கு நன்றி."


There is a cultural emergency in India, says Salman Rushdie
-------------------------------------------------------------------------------------------------------------------------------------


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog