Friday, 25 January 2013

உங்கள் துணையின் கண்களிலிருந்து நீர் வழியும்போது . .



ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வர த்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆ று தல், அவர்களின் அன்புக்குரியவர்க ளிடமிருந்து கிடைக்கும் ஆறுதலா ன வார்த்தைகளும், அணுசரனையா ன அக்கறையும்தான்.

குறிப்பாக உங்களது துணை வருத்தத் திலோ அல்லது கவலையிலோ இரு க்கும்போது நீங்கள் அவருக்கு தோள் கொடுத்து நின்று ஆறுதல் அளிக்கும் போது அவருக்குக் கிடைக்கும் நிம்ம தியும், மகிழ்ச்சியும் சொல்லில் வடிக் க முடியாதது.

அன்பாலும், பாசத்தாலும், அக்கறையாலும், பரிவாலும் உங்களது வார்த்தைகளால் அவரது புண்ணுக்கு நீங்கள் போடும் மருந்து மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது. நமக்கென்று ஒரு தோள் இரு க் கிறது, நமக்காக ஒரு உயிர் இரு க்கிறது, நம்மை தூக்கிச் சுமக்க ஒரு சுமை தாங்கி இருக்கிறது என்ற நினைப்பே பலருக்கு சோ ர்வையும், சோகத்தையும் தூக்கி ப் போட்டுவிட உதவுகிறது .

உங்களது துணைக்கு உடல் நல ம் சரியில்லையா, மன வருத்தத் தி்ல இருக்கிறாரா அல்லது ஏதா வது பயத்தில் இருக்கிறாரா.. கவலையே படாதீர்கள், ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள். அப்படிய பறந்து போய் விடும் அவரது கவலைகள்.

கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லலாம்…

இது ஒரு உபாயம்.சிலருக்கு கட்டி அணைத்து தோளோடு தோள் சேர் த்து, தலையை வருடிக் கொடுத்து, முதுகைத் தட்டிக்கொடுத்து ஆறு தல் கூறும்போது அதை அவர்கள் விரும் புவார்கள். இது எல்லோருக்குமே பிடித்தமான விஷயமும்கூட. இது ஒருவகையான பாசம் பரிவு கலந்த அரவணைப்பு. எத்தகைய துன்பத்தி ல் இருந்தாலும் இந் த கட்டிப்பிடிக்கு முன்பு அது கால் தூசுதான். எனவே வருத்தமெல்லாம் அப்படியே கரைந் து போய் விடும்.
உனக்காக நான் இருக்கிறேன் கண் ணம்மா, கண்களில் ஏன் இக்கவலை. எல்லாவற்றையும் மறந்து விடு , நிம்மதியாக இரு. உனக்கான தோள் நான். என்மீது உன் பார த் தை ஏற்றிவிட்டு, நிம்மதியாக இரு என்று சொல்லும்போது அவர்களுக்கு்க கிடைக் கும் அந்த பாதுகாப்பு உணர்வுக்கு ஈடு இணையே கிடையாது.

கவனத்தைத் திருப்புங்கள்..........
சிலருக்கு தேவையில்லாத பயம், கவலை வந்து மனதை வருத்தும். அதுபோன்ற சமய ங்களில் அவர்களை அப்பிரச்சினையிலிரு ந்து திசை திருப்ப முயற்சியுங்கள். ஜாலி யாக ஏதாவது பேசுங்கள், வேறு டாப்பிக் குறித்து அவர்களது சிந்த னையை திருப்புங்கள். அதையே நினைத்துக் கொண்டு பயப்படாதே  என்று தட்டிக்கொடுங்கள். அவ ர்களுக்கு ஊக்கமாக, பக்கபல மாக இருந்து, அவர்களின் பய த்தைப் போக்குங்கள். அவரது மனதுக்கு இதமாக ஏதாவது பேசிக் கொண்டிருங்கள்.

மனம் விட்டு பேசச் சொல்லுங்கள்...........
சிலருக்கு பிரச்சினையை யாரிடம் சொல்லி அழுவது என்ற குழப்பம் இருக்கும். அப்போது அவரிடம் உங்களைப் புரிய வையுங்கள். என்னி டம் கொட்டி விடு, எல்லாவற்றையும் வெளியில் போட்டுவிடு, பிரச்சி னையை சொல் நான் தீர்வு சொல்கிறேன் என்று நம்பிக்கை அளியுங்கள். அவர் சொல்லு ம்போது அக்கறையுடன் கேட்டு அவருக் குப் பொருத்தமான தீர்வை சொல்லுங் கள். நிச்சயம் அவருக்கு ஆறுதல் கிடை க்கும்.

உங்கள் துணையின் கண்களிலிருந்து நீர் வழியும்போது அதை வேடிக்கைப் பார்க்காமல், அதைப் பரிகாசம் செய்யா மல், உண்மையான பாசத்தோடும், நேச த்தோடும், காதலோடும், அன்போடும் நீங்கள் அணுகும்போது தானாகவே அக்கண்ணீர் நின்றுபோகும். அன்பைக் கொட்டி நீங்கள் தரும் ஆதரவு அவருக்கு ஒரு தாயின் மடி யைப் போலவே காட்சி தரும். எனவே உங்கள் துணை சோரந்திருக் கு ம்போது நீங்கள் தாயாக மாறி அவருக்கு இளைப்பாறுதலைக் கொடுங்கள்…

Thanks:retham


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog