சமகாலச் சிக்கலாக தை 2013 இல் முன்னை நாள் நடிகை ஐெயலலிதா அம்மாவுக்கும் இன்றைய நாள் நடிகர் கமலகாஸன் ஐயா அவர்களுக்கும் மோதல் இல்லைப் பாருங்கோ...
அப்ப என்ன தான் நடக்குதாம்... தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தி அரசியல் நடாத்தவோ சில சுயநலவாதிகள் தம்மை அடையாளப்படுத்தி அரசியலில் இறங்கவோ முதலாளித்துவவாதிகள் வருவாய் ஈட்டவோ முயற்சி செய்வதாகவே கருதமுடிகிறது.
கலைஞன் தன் எண்ணத்தில் கருவுற்றதை வெளிப்படுத்த உரிமை உண்டு. அதனைக் கடவுளாலும் பறிக்க முடியாது. ஆனால், நாட்டையோ இனத்தையோ மதத்தையோ குறிப்பிட்ட குழுவினரையோ எந்தவொரு தனியாளையோ புண்படும்படி எந்தக் கலைஞனும் எதனையும் வெளியிட உரிமை கிடையாது.
கமலகாஸன் ஐயா அவர்களின் விஷ்வரூபம் படத்தில் ஏதாவது உரிமை மீறல் இருப்பின், அப்படத்தை அலசி ஆய்வு செய்து சில காட்சிகளை நீக்கிவிடலாம் அல்லது அதற்கான தீர்வினை அமைதியாக நீதிமன்றில் பெறலாம். அதனை விட்டிட்டு, விஷ்வரூபம் படத்தைத் தடை செய்வதால் என்ன பயன்?
ஐெயலலிதா அம்மாவுக்கு ஒரு திரைப்படத்தில் பங்கெடுக்கும் முதலீடுகள், ஆள்கள், நுட்பங்கள், அதற்கான உழைப்பு எல்லாம் தெரிந்திருக்கும். கலைஞருக்கான வெளியீட்டு உரிமை மீறல் இருப்பின், அதற்கு நல்ல நீதிமன்றத் தீர்வைப் பெற்றுக்கொடுத்து விஷ்வரூபம் படத்தை வெளிவர ஐெயலலிதா அம்மா உதவலாம்.
இச்சிக்கலை விரிவுபடுத்துவதாலோ இழுத்தடிப்பதாலோ ஐெயலலிதா அம்மாவுக்கும் கமலகாஸன் ஐயாவுக்கும் நன்மை கிடைக்கப்போவதில்லை. மாறாக, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தி அரசியல் நடாத்தவோ சில சுயநலவாதிகள் தம்மை அடையாளப்படுத்தி அரசியலில் இறங்கவோ முதலாளித்துவவாதிகள் வருவாய் ஈட்டவோ முயற்சி செய்வதாகவே முயலும் ஆள்களுக்கே நன்மை கிடைக்கப் போகிறது.
ஈற்றில் கமலகாஸன் இரசிகர்களுக்கு பொறுமை இழக்க, அவர்கள் பொங்கியெழுந்தால் தமிழ்நாட்டு அரசு ஆட்டம் காணும் நிலை வரலாம். எனவே, தமிழ்நாட்டு மக்கள் மகிழ்வோடு அமைதியாக வாழ ஒத்துழைக்க விரும்பும் எல்லோருமே விஷ்வரூபம் படத்தின் தடையை நீக்கி, அதனை வெளிவர ஒத்துழைப்பதோடு தமிழ்நாட்டில் அமைதியை ஏற்படுத்த முன்வரவேண்டும்.
இவை தமிழர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த விரும்பும் யாழ்பாவாணணின் சொந்தக் கருத்துகளாகும். தவறு ஏதும் இருப்பின் எனக்கு நீங்கள் சாவுஒறுப்புத்(மரண தண்டனை) தரலாம்.
Related Article: