Wednesday, 2 January 2013

மூளைக்கு வேலை கொடுங்க - புதிர் பகுதி

1.பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி?


2. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச்
செல்வீர்கள். அது என்ன?


3. தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன்.
அதனால் நான் மெலிகிறேன். நான் யார்?


4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க
முடியும்?


5. இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும்,
இளமையாக உணர வைக்கும்.
நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?

6. என்னால் உங்களுக்கு வியர்க்கும்.நீங்கள்
பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்?

7. அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க
முடியாது; பற்கள் உண்டு,
ஆனால் கடிக்க முடியாது; கண்கள் உண்டு, ஆனால் பார்வை கிடையாது. அது என்ன?

8. என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது;
எப்போதாவது பாடுவேன்,
ஆனால் பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை,
ஆனால் முகம் உண்டு; நான் யார்?

முரளிராஜா 
அமர்க்களம் கருத்துக்களம்

உலக தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் களம் 

amarkkalam.net



Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog