Wednesday 20 February 2013

வேலை நிறுத்தம் தேவை இல்லாதது.?

'இன்று நடக்கும் வேலை நிறுத்தம் தேவை இல்லாதது.
அதில் வங்கி ஊழியர்களுக்கு சம்பந்தமே இல்லாமல் கலந்து கொள்கிறார்கள்'
இது மத்திய நிதி யமைச்சக   திருவாக்கு.
இன்றைய அகில இந்திய இரு நா ட்கள் வேலை நிறுத்தம் முதாலாவதாக மத்திய சோனியா அரசின் தவறான நடைமுறைகளை கண்டித்து நடப்பது. இதுவரை மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு பொருளாதார சீர்திருத்தம் என்று எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளுமே இந்திய நாட்டு மக்களுக்கு ஆபத்தை தருவதாகவும் -துன்பத்தை தருவதாகவும் அந்நிய குறிப்பாக அமெரிக்க நாட்டுக்கு மட்டும் நன்மை தருவதாக்கவுமே இருக்கிறது.
இந்த போராட்டம் யா ரோ -யாருக்காகவோ நடத்துவது போல் பெருவாரியான மக்கள் இருப்பது போல் தெரிகிறது 
மாதம் மாதம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கும்  ,வங்கி ஊழியர்களுக்கும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள என்ன அவசியம்?
அவர்களும் இந்த இந்திய குடிமக்கள்தானே அரசியலில் இல்லாவிட்டாலும் இந்த அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது .
நாம் அன்றாடங்காச்சி நமக்கு என்ன பாதிப்பு  என்று குடிசை வாழ் மக்களும் எண்ண இயலாது .
ஒவ்வொரு மாதமும் பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு சார்பில் அறிவிக்கும்போது அரிசி  -காய்கறி விலையில் இருந்து அனைத்துப பொருட்களுமே விலை தன்னால் உயர்கிறது .பேருந்து கட்டணம் முதல் ரெயில் கட்டணம் வரை உயர்கிறது.
மானியம் கொடுக்க வக்கில்லாததால் அனைத்து பொருட்களுக்கும் மானியத்தை நிறுத்துகிறோம் என்கிறார்கள் .
உரத்துக்கு மானியத்தை நிறுத்தியதால் வேளாண் பொருட்கள் உற்பத்தி வி லை உயர்ந்து சாதாரண வகை அரிசியே  இன்று கிலோ 40/-க்கு போ ய் விட்டது.
மானியம் அனைத்தும் நிறுத்தினால் அரசுக்கு 4000 கோடிகள் மிச்சமாம்.
இதில் லாபக் கணக்கு பார்க்கும் மத்திய பொருளாதாரப்புலிகள் 14000 கோடிகள் அம்பானி,டாடா இன்னும் அந்நிய நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அதுதான் அரசுக்கு அவர்கள் தர வே ண்டிய பணத்தை  தள்ளுபடி செய்துள்ளது .
பலகோடி மக்களுக்கு போய் சேர வே ண்டிய மானியம் கொடுக்க யோசிக்கும் மன்மோகன் சிங்  சில பணமுதலைகளுக்கு மட்டுமே லாபம்தரும் இந்த 14000 கோ டிகளை தள்ளுபடி செய்தது ஏ ன்?
மத்திய அரசின் மனதில் மக்களுக்கு சேவை-நல்லது செய்யும் எண்ணம் கொஞ்சமும் கிடையாது.அவர்கள் சேவை முழுக்க அம்பானி,அமெரிக்க வகையறாக்களுக்கு மட்டும்தான்.பதவியில் இருப்பதே  பண முதலைகளின் கால்களை வருடி விடத்தான்.
லட்சம் கோடிகள் கணக்கில் முறைகேடுகள் செய்யத்தான்.
அதற்கு பக்க பலமாக முலாயம்,மாயாவதி,லாலு,கருணாநிதி ,நிதிஷ்குமார்,நவீன் பட்நாயக்,போன்ற எதிர்கட்சிகள்[?] மற்றும் கூட்டணி கட்சிகள் இருக்கிறது.
இவர்களை எதிர்ப்பதுபோல்  இருந்தாலும் இவர்களின் இந்த சீர்திருத்தங்களுக்கு தன்னால் முடிந்த அளவு மறைமுக ஆதரவை தந்து மக்களவையை முடக்கி வைத்து மசோதாக்களை நிறைவேற்றிட பாஜக  உதவி வருகிறதுஆக நம்மை ஆள்வது காங்கிரசு கூட்டணி அல்ல.
அமெரிக்கா மற்றும் அம்பானி-அணில் அகர்வால் -இந்துஜா-டாடா  போன்ற இந்திய பகாசுர 
 முதலாளிகள்தான் .
இப்போது  ரேசன் பொருட்களுக்கு மானியத்தை கொடுப்பது ரேசன் கடைகளை மூடி விடும் திட்டம்தான்கொஞ்ச்ச நாட்களுக்கு மட்டுமே உங்கள் பணம் உங்கள் கையில்.அதன்பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டுவிடும்.
இந்த போராட்டத்தினால் மத்திய அரசு கவலை கொண்டுள்ளது அதன் அமைச்சர்கள் பேச்சில் தெரிய வருகிறது.
முன்பும் இது போன்ற இந்திய வேலை நிறுத்தம் நடக்கும் போது அதை கண்டு கொள்ளாத  மத்திய அரசு இப்போது பேச்சு வார்த்தைக்கு வர ச்சொல்வதும்சம்பளத்தை பிடிப்போம் என்று மிரட்டுவதும் அதன் வெளிப்பாடுகள்தான் .
அதற்கு காரணம் முந்தைய வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கைதான் கிட்டத்  தட்ட   ஒரு கோடி பேர்கள் அதில் கலந்து கொண்டதுதான்.
 ஆட்டோ ஓட்டுபவர்களை மத்திய அரசின் பெட்ரோல் விலை கொள்[ளை ]கை பாதிக்கவில்லையா?
விவசாயிகளை மத்திய அரசின் உர மானிய வெட்டு நீர் கொள்கை பாதிக்க வில்லையா?
அரசு ஊழியர்களை புதிய ஒய்வூதிய திட்டம், அடிக்கடி உயரும் விலை வாசிக்கேற்ப அகவிலைப்படியை உயர்த்த வேண்டிய நிலை பாதிக்கவில்லையா?
தொடரும் மின் வெட்டு ,அனைத்தும் தனியார் மயத்தாலும் அனைத்து இனங்களுக்கும் போட்டு தாக்கும்  சேவை வரி யாலும் அனைவரும் பாதிக்கப்பட வில்லையா?
கிராமங்களில் 28 ரூபாயும், நகரங்களில் 35 ரூபாயும் செலவிட்டால் அவர்கள் வறுமைக்கோட்டில் இல்லை என்ற அநியாயம் கூலி வேலைக்காரர்களை பாதிக்கவில்லையா? 
இவை எல்லாவற்றையும் விடபூமியில்  நிலக்கரியில் இருந்து வானில் ஹெலிகாப்டர்-வளி மண்டலத்தில்  2ஜி அலைவரிசை என்று மண்ணில் இருந்து விண்வெளி வரை  அனைத்திலும் லட்சம் கோடிகளில் கை நனைக்கும் ஆளுங்கட்சியினர் இப்போது குடிக்கும் தண்ணிரிலும் நீர்க்கொள்கை என்று தனியார் மயமாக்கிட கை வைக்கப் போகிறார்களே .
இப்போதும் கூட இந்திய உழைக்கும் மக்கள்  தனது  எதிர்ப்பை இது போன்ற வேலை நிறுத்தங்களில் காட்டாவிட்டால் ....
இனி காட்டுவதற்கும் -இழப்பதற்கும் ஒன்றுமே இல்லாமல் போய் விடும்.!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஒன்றும் கண்டு கொள்ளவேண்டாம் .
சிறுவன் பாலச்சந்திரன் படு கொலையில் இந்திய அரசு கருத்தோ- கண்டனமோ தெரிவிக்க ஒன்றுமில்லையாம் .
வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் அது பற்றி கேட்டபோது ", சம்பவம் தொடர்பான படத்தை தான் ஏற்கனவே பார்த்துவிட்டதாக கூறினார். 
தற்போது இதுகுறித்து கருத்து கூறுவது சரியல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை முக்கியமான அண்டை நாடு என்றும். போர் பற்றிய கவலையை இந்தியா ஏற்கனவே அந்த நாட்டிடம் தெரிவித்து விட்டதாகவும்"
 சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். நல்லவேளை .படத்தை பார்த்தேன் ரசித்தேன் ,சிரித்தேன்.பின் கிழித்துப்போட்டேன்.என்று முந்தைய கருணாநிதி பாணியில் சொல்லாமல் விட்டார் .
மாலத்தீவு உள்நா ட்டு பிரச்னையில் முன்னாள் பிரதமர் நஜிமுக்கு தூதரகத்தில் அடைக்கலம் கொடுத்து மாலத் தீவு உள்நாட்டு விவகாரத்தில் தலையை நீட்டியுள்ள இந்தியாவுக்கு ஈழத்தமிழர் என்றால் ஏன் இந்த பாரபட்சம்.ஒரு சிறுவனின் அநியாயக் கொலை கூட இந்திய அரசின் மனதை பாதிக்கவில்லையா?எங்கோ இருக்கும் கனடா,ஆஸ்திரெலியா  ஆகியவற்றிற்கு இருக்கும் மனிதாபிமானம் சோனியா கட்சியினருக்கு இல்லாமால் போ ய் விட்டதே.
ஒருவகையில் ஈழத்தமிழர் ஒழிப்பில் ரா ஜபக்சே யுடன் கூட்டணி அமைத்து செயல்பட்ட
சோனியா கட்சியினரிடம் மனிதாபிமானத்தை  அதுவும் தமி ழர் விடயத்தில்
எதிர்பார்ப்பது மிகப்பெரிய தவறுதான் .


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog